என் நிர்வாண உடலை, நானே காட்சிப் பொருளாக்கினேன்... - My Story #065

Posted By:
Subscribe to Boldsky

செக்சுவல் கொடுமை என்றால் என்ன என்பதை நான் அறியும் முன்னரே... என் வாழ்வில் அது அரங்கேற ஆரம்பித்துவிட்டது. நீங்கள் இந்த கதையின் விக்டிம் நான் என் கருதலாம். ஆனால், இந்த கதையின் வில்லனும் நானே.

எனக்கு அப்போது நான்கு வயது இருக்கும். எனது தந்தை எனது இதழ்களில் முத்தம் கொடுக்க ஆரம்பித்தார். அப்போது, இது செக்சுவல் அப்யூஸ் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. என் தாய் இது குறித்து ஏதும் கவனித்திருக்கவில்லை. எனவே அவர்மீது குற்றம் சுமத்த நான் விரும்பவில்லை.

அவள் என் தந்தை மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தாள். தன் கணவன் வேறு பெண்களுடன் தவறாக நடந்துக் கொண்டாலும், சொந்த மகளுடன் அப்படி இருக்க மாட்டாள் என அம்மா கருதினால். அது தான் அவள் செய்த தவறு....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாரத்திற்கும், மகளுக்கும்...

தாரத்திற்கும், மகளுக்கும்...

எனது சோ கால்டு ஃபாதருக்கு துணைக்கும், மகளுக்கும் வித்தியாசம் தெரியாது. அதன் விளைவு... அப்பாவை முத்தமிடுவது தவறு என்பது கூட தெரியாமல் வளர்ந்தேன் நான். அவர் சொல்வதை கேட்டு, அவரையே தவறாகவும் தீண்டியுள்ளேன். என் அப்பா அவரது மகளாகியே எனக்கே பார்ன் வீடியோ காண்பிப்பார்.

வளர, வளர...

வளர, வளர...

நான் வளரும் போது என்னுடன் சேர்ந்த செக்சுவல் டார்ச்சர்களும் வளர்ந்தன. செக்ஸ் என்பது வன்கொடுமை அல்ல, மிக சாதாரண ஒன்று என எண்ணி வளர்ந்தேன். எந்த வித்தியாசமும் தெரியாமல், அந்த செயலின் பொருள் அறியாமல் இருந்தேன். எனது ஆரம்பகாலத்தில் இருந்தே இதனுடன் வளர்ந்த காரணத்தால் செக்ஸ் என்பது என்னை பொறுத்த வரை மிகச் சாதாரண ஒன்றாக இருந்தது.

இளம் வயதில்...

இளம் வயதில்...

நான் அப்போது மூன்றாம் வகுப்பு பயின்று வந்தேன். ஒரு நாள் உறவுககரர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அங்கே என் வயதொத்த மாமா மகளுடன் விளையாடி வந்தேன். எப்போதும் விளையாடும் கண்ணாம்பூச்சி விளையாட்டு போரடிக்கவே, அப்பா எனக்கு கற்பித்த விளையாட்டை ஆடினேன். அதன் விளைவு மிகவும் மோசமாக இருந்தது.

வினை!

வினை!

எங்கள் விளையாட்டு கற்பழிப்பு! என்னை கற்பழிப்பவரை நானே தேர்வு செய்கிறேன். வினையை விளையாட்டாக ஆடியவள் நானாக மட்டுமே இருக்க கூடும். என் அப்பா என்னுடன் செய்ததை, நான் அவளிடம் செய்தேன். அவள் அச்சத்தில் உறைந்துபோயிருந்தாள். போதும் இந்த விளையாட்டு சரியில்லை என கூறி நகர்ந்தாள்.

ஐந்தாம் வகுப்பில்..

ஐந்தாம் வகுப்பில்..

இந்த விளையாட்டு இத்துடன் முடியவில்லை. நான் ஐந்தாம் வகுப்பு பயின்று கொண்டிருந்த போது, இதே விளையாட்டை என் வகுப்பில் படித்த மாணவனுடன் விளையாடினேன். இந்த தவறு பள்ளி நண்பர்கள், வீட்டருகே இருக்கும் நண்பர்களுடன் தெரிந்தது. எனது பாத்திரத்தை நானே அழித்துக் கொண்டிருந்த காலம் அது.

ஆபாசத்தில் முங்கி குளித்த என் தந்தை கற்பித்த பாடங்கள் எனை அபத்தமான செயல்களில் ஈடுப்பட வைத்தது. பத்து வயதிலேயே எனது பள்ளி தோழனுக்கு எனது நிர்வாண உடலை காட்சி பொருளாக்கினேன்.

என் தோழி!

என் தோழி!

நான் கெட்டது மட்டுமின்றி, எனது நெருங்கிய தோழியையும் இந்த பாழுங்கிணற்றில் தள்ளினேன். அவள் ஆரம்பத்தில் முடியாத என கூறிய போதும், அவளை வற்புறுத்தி எனது விளையாட்டுகளை விளையாட வைத்தேன். கண்டிப்பாக அப்போது இது குறித்து அவள் யாரிடமும் கூறியிருக்க மாட்டாள்.

ஆனால், இன்று என்னை பற்றி அவள் ஒருவரிடம் பேசுகிறாள் என்றால்... அது முழுக்க, முழுக்க என்னை திட்டி தீர்க்கும் வசைபாடலாகவே இருக்கும்.

மோசமான வாழ்க்கை!

மோசமான வாழ்க்கை!

மூன்று வயதில் ஆரம்பித்த விளையாட்டு, நான் ஓரளவிற்கு முதிர்ச்சி அடையும் வரை... எவ்வளவு கேவலமான விஷயத்தை நான் செய்து வந்துள்ளேன் என்பதை அறியாமல் ஈடுபட வைத்தது. இன்றும், என் சிறுவயது தோழர்களின் பார்வையில் நான் ஒரு வேசியாக தான் தோற்றமளிப்பேன் என்பதை நான் அறிவேன்.

பரவும் கதைகள்...

பரவும் கதைகள்...

என்னை பற்றிய பிம்பமானது நல்லப்படி பகிர நான் ஏதும் செய்ததில்லை. என்னை குறித்து அவரவர் தோழர்களிடம் கூறும் போது அந்த சூழல் எப்படியாக இருக்கும் என்பதை எண்ணும் போது உடல் கூசுகிறது. கூச வேண்டிய தருணத்தில் அந்த கூச்சம் இல்லாததால். இன்று ஏதும் நடக்காத நாட்களிலும் கூசிக் கொண்டே இருக்கிறது எனது உடல்.

எனக்கு மட்டும் ஏன் இப்படி...

எனக்கு மட்டும் ஏன் இப்படி...

அப்பாவின் உண்மையான அன்பு எப்படி இருக்கும் என எனக்கு தெரியாது. அன்பாக அப்பா எப்படி அணைப்பார் என்பதும் எனக்கு தெரியாது. அப்பா மகளை எப்படி தீண்டுவார், அப்பாவின் அரவணைப்பு என்ன என்பது குறித்து நான் ஏதும் அறிந்ததில்லை. எனக்கு என் அப்பா கற்பித்தது எல்லாம் இன்று நான் கூனிக்குறுகி கூசி நிற்கும் இந்த நிலைக்கான விளையாட்டு தான்.

அம்மா!

அம்மா!

ஒருவேளை அம்மா என்மீது இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் நான் இன்று மற்ற பெண்களை போல சாதாரண வாழ்க்கையை வாழ்ந்திருப்பேனோ என்ற சந்தேகம் மட்டும் அவ்வப்போது தோன்றும். அவள் என்ன செய்வாள். உலகில் எந்த அப்பனும் கனவிலும் எண்ணாத செயலை தான், என் அப்பா எனக்கு கற்பித்தார்.

அச்சம் விலகவில்லை...

அச்சம் விலகவில்லை...

நான் என்னை அறியாமல் செய்த காரியங்கள் இன்று எனது ஒவ்வொரு நாளையும் தின்றுக் கொண்டிருக்கிறது. மற்றவரை போல நான் முன்னே வாழ்ந்த பகுதிக்கு செல்ல முடியாது. பள்ளி தோழர்கள், தோழிகளையோ என்னால் இயல்பாக காணவோ, பழகமோ முடியவில்லை. சொல்லப் போனால் எனக்கான நீண்ட நாள் நட்பென யாரும் இல்லை.

இன்னும் நான் செய்த காரியங்கள் குறித்து அனைவரும் நினைவு வைத்திருப்பார்களோ, என்னை ஒரு தீண்ட தகாத பொருளாகவே காண்பார்களோ என்ற அச்சம் என்னைவிட்டு அகலவில்லை.

காதல், கல்யாணம்!

காதல், கல்யாணம்!

காதல், கல்யாணம் போன்றவற்றில் எனக்கு அறவே விருப்பமில்லை. ஒருவேளை என்னை பற்றி, நான் சிறுவயதில் செய்த காரியங்கள் குறித்து என் வருங்கால துணை அறிந்தால், என்னை பிரிந்து சென்றுவிடுவாரோ என்பது போன்ற பல அச்சங்கள் என்னுள் நிறையவே இருக்கிறது.

அறியாத வயதில், செய்யக் கூடாததை தைரியமாக செய்த எனக்கு. இப்போது எல்லாம் அறிந்த வயதில், அனைவரும் சகஜமாக செய்யும் விஷயங்களை செய்ய கூட பெரும் தயக்கம் இருக்கிறது. ஒருவேளை இதைதான் கர்மா என கூறுகிறார்களோ.

தனிமையில் வாடுகிறேன்...

தனிமையில் வாடுகிறேன்...

பெரும்பாலும் யாருடனும் வெளியே செல்ல மாட்டேன். அம்மாவுடன் மார்கெட் சென்று வருவது மட்டுமே நான் பெரும்பாலும் வெளியே செலவழிக்கும் நேரம். வேலை, வீடு இது மட்டுமே என் வாழ்வில் நிறைந்திருக்கும் விஷயங்கள். கேளிக்கை என்று நினைத்து பார்க்க என் வாழ்வில் இடமில்லை. அனைவரும் எதிர்பாராத தருணத்தில் தங்கள் நண்பர்களை எங்கேனும் வெளியே கண்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.

ஆனால், நானோ... அவர்கள் என்னை பார்த்துவிடும் முன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடுவேன். ஏன், அவர்கள் பார்த்தாலுமே கூட... நான் அவர்களை அறியாதது போல முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிடுவேன்.

பாரம்!

பாரம்!

சோகத்தை வெளியே கூறி அழுதுவிடு , பாரம் குறையும் என்பார்கள். என் சோகத்தை வெளியே சொன்னால்... ஊர் மொத்தமும் கூடி இகழ தானே செய்யும். இந்த பாரம் அதிகரிக்க, அதிகரிக்க என்னுள் அச்சமும் அதிகரிக்கிறது. இப்படியே போனால் நான் இன்னும் கொஞ்ச நாட்களில் மனநலம் பாதித்து பைத்தியமாகிவிடுவேனோ என்ற கூடுதல் அச்சமும் மனதில் இருக்கிறது.

மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் இப்படி தான் நகர்ந்துக் கொண்டிருக்கிறது எனது வாழ்க்கை பயணம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: my story
English summary

My Story: Life a Abused Person, Who is The Villain Also!

My Story: Life a Abused Person, Who is The Villain Also!