பதவியில் இருக்கும் போதே பாலியல் வழக்கில் சிக்கிய முதல்வர்!

Posted By:
Subscribe to Boldsky

நவீன உலகத்தில் தொழில்நுட்பங்கள் எவ்வளவு வேகமாக வளர்ந்தாலும் சில விஷயங்களை நம்மால் இன்றும் ஒரு துளி கூட மாற்றம் கொண்டு வர முடியவில்லை. இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட உலகம் முழுவதிலும் பெண்களுக்கு முழு பாதுகாப்பில்லை என்பது தான் கசப்பான உண்மை.

நாளுக்கு நாள் பெண்கள் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்படுவது,இந்தியத் தலைநகர் டெல்லியில் இருக்கும் பெண்கள் தான். இந்தியா முழுவதிலுமிருந்து 2011 ஆம் ஆண்டில் மட்டும் இருபத்திநான்காயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதைவிட ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கு ஓர் பாலியல் அத்துமீறல் நடைபெறுவதாக தெரிவித்திருக்கிறார்கள். இது நாம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்காத விஷயம்.

இந்தியாவையே உலுக்கிய சிலப் பெண்களின் கொடூரமான பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட பெண்களின் பட்டியல் கனத்த மனத்துடன் அதனை நினைவுப்படுத்தி பாருங்கள்... அவர்களுக்கான நீதியைப் பற்றியும் இந்த சமூகத்தைப் பற்றியும் கொஞ்சம் கற்பனை செய்து கொள்ளுங்கள். இங்கே தான் நம்முடைய வருங்கால சந்ததியினர் வாழப் போகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோபியன் இரட்டையர்கள் :

சோபியன் இரட்டையர்கள் :

2009,ஜூன் 30 ஜம்மு காஷ்மீரில் இருக்கும் சோபியன் மாவட்டத்திலிருக்கும் இரண்டு பெண்கள் வீட்டிலிருந்து திடீரென மாயமானார்கள். மறுநாள் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அவர்களின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இருவருமே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்கள். உடனடியாக இந்த விஷயம் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்பட வில்லை. விஷயம் தீவிரமானதும் சுமார் 11 நாட்கள் கழித்து தான் முதல் தகவல் அறிக்கையையே எழுதினார்கள்.

முதல் தகவல் அறிக்கை எழுதவே இவ்வளவு நாட்கள்.... என்றால் மற்ற விசாரணை எல்லாம் எப்படி நடந்திருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள்.

Image Courtesy

சவுமியா :

சவுமியா :

2011 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைப்பெற்றது. கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து சோரனூருக்கு ட்ரைனில் 23வயதேயான சவுமியா பயணித்துக் கொண்டிருந்தார்.

ட்ரைன் வளத்தோல் நகர் ஸ்டேஷனை அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கோவிந்தச்சாமி என்பவன் அவரை வலுக்கட்டாயமாக தாக்க முயன்றுள்ளான். அதில் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலிருந்து அந்தப் பெண்ணை தள்ளி விட்டிருக்கிறான்.

பின்னர் இவனும் குதித்து அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான்.

உயிருடன் மீட்கப்பட்ட சவுமியா ஒரு மாதம் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அந்த காமுகன் தூக்கிலிடப்பட்டான்.

Image Courtesy

அஞ்சனா மிஸ்ரா :

அஞ்சனா மிஸ்ரா :

இந்தியாவையே தலைகுனிய வைத்த பாலியல் வழக்கு என்று இதனைச் சொல்லலாம். 1999 ஆம் ஆண்டு ஒரிசாவில் நடைப்பெற்ற சம்பவம் இது. ஐ.எஃப்.எஸ் அதிகாரியின் மனைவியான அஞ்சனா 1997 ஜூலை 12 ஆம் தேதி அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜே.பி.பட்நாயக்கிற்கு புகார் மனு ஒன்றை அளிக்கிறார்.

அதில் முதல்வரின் நெருங்கிய நண்பரும் ஒரிசா மாநிலத்தின் அட்வகெட் ஜெனரலுமான இந்திரஜித் ராய் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதில் எழுதியிருந்தார்.

Image Courtesy

போலீஸ் புகார் :

போலீஸ் புகார் :

இந்த விஷயம் வெளியே கசிந்தாடாமல் இருக்க, பல வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எதற்கும் அஞ்சனா மசியவில்லை ராய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.'

ஒரு பக்கம் ராயின் மிரட்டல் இன்னொரு பக்கம் முதல்வரே அவர் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டு கோபமடைந்த அஞ்சனா, கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகாரை பதிவு செய்கிறார்.

Image Courtesy

குற்றம் உறுதி :

குற்றம் உறுதி :

விஷயம் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. உடனடியாக இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அஞ்சனா சொன்னது உண்மை என்று நிரூபணமானதும் ராய்க்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

விஷயம் இத்துடன் முடியவில்லை இனி தான் ஆரம்பிக்கிறது. தன்னுடைய பொதுவாழ்க்கையையே சிதைத்த அஞ்சனா மீது பயங்கர கோபத்தில் இருந்தார் ராய் மற்றும் பட்னாயக்.

Image Courtesy

பாலியல் வன்கொடுமை :

பாலியல் வன்கொடுமை :

1999 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதி அஞ்சனா தன் தோழியுடன் காரில் புவனேஸ்வரிலிருந்து கட்டாக் சென்று கொண்டிருந்தார்.

செல்லும் வழியில் பாரங் என்னுமிடத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது இவர்களது காரை ப்ரதீப் சாஹூ,தீரேந்திர மோஹந்தி மற்றும் பிபன் பிஸ்வால் ஆகியோர் வழிமறிக்கின்றனர்.

தோழி கண்ணெதிரே அஞ்சனாவை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடிவிட்டனர்.

Image Courtesy

சிக்கிய முதல்வர் :

சிக்கிய முதல்வர் :

விஷயம் பூதகரமாக வெடித்தது. மூன்று பேரையும் கைது செய்தனர். இருவருக்கு கடுங்காவல் தண்டனையும் மற்ற இருவருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து அஞ்சனா போராடினார்.

இவரக்ளை தூண்டிவிட்டவரையும் கைது செய்ய வேண்டும் என்று.... தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு பழைய விவகாரங்கள் எல்லாம் தோண்டியெடுக்கப்பட்டது. இதில் முதல்வர் மற்றும் அட்வகெட் ஜெனரலின் பெயர் அடிப்பட்டது.

Image Courtesy

முதல்வர் மாற்றம் :

முதல்வர் மாற்றம் :

இது கட்சியின் பெயருக்கே கலங்கத்தை ஏற்படுத்தி விட்டது என்று சொல்லி உடனடியாக முதல்வர் பதவியை பறித்தார் சோனியா காந்தி. அந்த இடத்திற்கு கிரிதர் கமாங் தேர்வானார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கி பதவியை இழந்த முதல்வர் என்ற பெரும் இழக்கு அவருக்கு ஏற்பட்டது.

Image Courtesy

பள்ளி மாணவிகள் :

பள்ளி மாணவிகள் :

இந்த சம்பவம் 1992 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் நடைப்பெற்றது. அப்பகுதியில் இருந்த 100 பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவர்களை வக்கிரமாக புகைப்படமும் எடுத்தனர். அதை வைத்து மிரட்டவும் செய்தனர்.

இவ்விஷயம் வெளிய தெரிய வந்ததும் பல பெண்கள் அவமானமடைந்து தற்கொலை செய்து கொண்டனர். பிடிப்பட்ட நபர்களுக்கு முதலில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது பத்தாண்டு சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது.

Image Courtesy

சூரியநெல்லி வழக்கு :

சூரியநெல்லி வழக்கு :

கடந்த 1996-ஆம் ஆண்டு இடுக்கி மாவட்டம், சூர்யநெல்லியில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவியை பேருந்து ஓட்டுநர் ஒருவர் பலாத்காரம் செய்தார். அதன்பின்னர் அந்த சிறுமி பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு அடைத்து வைத்து பலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகினார். இந்த வழக்கில் அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் சிக்கினர்.

இதை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 35 பேருக்கு சிறை தண்டனை விதித்தது. ஆனால் கடந்த 2005-இல் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து 34 பேர் வெளியே வந்துவிட்டனர்

Image Courtesy

மதுரா வழக்கு :

மதுரா வழக்கு :

மஹாராஸ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் 1972 ஆம் ஆண்டு நடந்த கொடுமை இது. அப்போது பதினைந்து வயதான மதுரா என்ற சிறுமி தன்னுடைய சகோதரனுடன் தேசாய் கஞ்ச் போலீஸ் நிலையத்திற்கு கடத்தல் வழக்கில் விசாரணைக்காக வரவழைக்கப்பட்டார்.

அப்போது, மதுராவுடன் வந்தவர்களை வெளியில் போகச் சொல்லிவிட்டு போலீஸ் நிலையத்திலேயே சிறுமியை போலீசார் கற்பழித்தனர்.

Image Courtesy

உத்திரபிரதேசம் :

உத்திரபிரதேசம் :

உத்திரபிரதேச மாநிலம் பாரியாச் மாவட்டத்தில் இந்தக்கொடூரம் நடந்தது. லக்னோவிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நன்பரா என்ற இடத்தில் வசிக்கும் பதினைந்து வயதுச் சிறுமியை சிலர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனர்.

பின்னர் அதனை தற்கொலையாக காட்ட அவரை ஒரு மரத்தில் தொங்கவிட்டனர். விசாரணையில் உண்மை தெரியவந்தது.

வச்சாத்தி கிராமம் :

வச்சாத்தி கிராமம் :

தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் தலீத் மக்கள் வசிக்கும் வச்சாத்தி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நுழைந்தனர். சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றிய தகவல் சேகரிக்க அவர்கள் சென்றிருந்தனர்.

அப்போது அந்த மக்களின் வீடு மற்றும் பொருட்களை அடித்து உடைத்தனர். கால் நடைகளை கொலை செய்தனர் சுமார் பதினெட்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

Image Courtesy

இம்ரானா வழக்கு :

இம்ரானா வழக்கு :

28 வயதான முஸ்லீம் பெண்ணான இம்ரானாவை அவருடைய மாமனார் பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் 2005 ஆம் ஆண்டு நடைப்பெற்றது. இதைத் தொடர்ந்து இம்ரானாவின் திருமணம் செல்லாது என்றனர் கிராமத்தில் இருக்கும் பெரியவர்கள் அறிவித்தனர்.

இந்த விஷயம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு இம்ரானாவின் மாமனார் கைது செய்யப்பட்டார். அவருக்கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனையும் மூன்றாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Image Courtesy

71வயது மூதாட்டியும்... :

71வயது மூதாட்டியும்... :

சிறுமிகளும் இளம் பெண்கள் மட்டுமல்ல 71வயது மூதாட்டி கூட பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். மேற்கு வங்கத்தில் நாடியா மாவட்டத்தில் இருக்கிற ரனாகட் என்ற இடத்தில் தான் இந்த அக்கிரமம் நடந்திருக்கிறது.

அங்கிருக்கும் ஒரு கிறிஸ்துவப் பள்ளியில் நுழைந்த திருடர்கள் பொருட்களை திருடிக் கொண்டு சென்றதோடு அங்கிருந்த 71வயது கன்னியாஸ்திரியையும் கற்பழித்து கொலை செய்துவிட்டுச் சென்றனர்.

Image Courtesy

நிர்பயா :

நிர்பயா :

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி நிர்பயா, தனது ஆண் நண்பருடன் பேருந்து ஒன்றில் சென்றபோது, ஆறு பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

அவருடன் வந்த ஆண் நண்பரையும் சரமாரியாகத் தாக்கிய அந்தக் கும்பல் இருவரையும் பின்னர் சாலையோரத்தில் வீசிச் சென்றது.

இதில் படுகாயமடைந்த அந்தப் பெண் இரண்டு வாரங்கள் சிகிச்சைக்குப்பின் சிங்கப்பூர் மருத்துவமனையில் டிசம்பர் 16-ம் தேதி உயிரிழந்தார்.

பெண் பத்திரிகையாளர் :

பெண் பத்திரிகையாளர் :

மும்பையிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்றில் புகைப்படக்காரராக பணியாற்றி வரும் 23 வயதான பெண் , தனது சக நிருபருடன், பத்திரிகை கட்டுரை ஒன்றுக்காக, மும்பையின் லோயர் பரேல் பகுதியில் உள்ள பழைய பாழடைந்த மில் ஒன்றை புகைப்படம் எடுப்பதற்காக சென்றுள்ளார்.

அவர்கள் படம் எடுத்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த 2 பேர், மில்லை புகைப்படம் எடுக்க அனுமதி பெற்றீர்களா? என்று கேட்டு மிரட்டி தாக்கி உள்ளனர்.

பின்னர் அந்த பெண்ணிடம் சத்தம் போட்டால் குத்தி கொன்றுவிடுவோம் என்று உடைந்த பீர் பாட்டிலை காண்பித்து மிரட்டியதோடு அந்த பெண்ணை உள்ளே இருந்த புதர் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பன்வாரி தேவி பாலியல் வன்கொடுமை வழக்கு :

பன்வாரி தேவி பாலியல் வன்கொடுமை வழக்கு :

சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய வழக்கு இது. சிறு வயதிலேயே திருமணம் செய்வது ராஜஸ்தான் மாநிலத்தில் பாரம்பரியமான வழக்கம். பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகளுக்கும் திருமணம் செய்வது அங்கு இயல்பான ஒன்று.

பன்வாரி தேவி, 1985 ஆம் ஆண்டு முதல், மாநில அரசின் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தில் இணைந்து பணிபுரிந்துவந்தார்.

Image Courtesy

சமூக விழிப்புணர்வு :

சமூக விழிப்புணர்வு :

கிராமங்களில் வீடு-வீடாகச் சென்று, சமூக அநீதிகளுக்கு எதிராகவும், சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு, பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது, பெண் சிசுக் கொலை, கருவிலேயே பெண் சிசுக்களை அழிப்பது, வரதட்சணை மற்றும் சிறார் திருமணம் போன்ற சமூக பிரச்சனைகள் தொடர்பான விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தி வந்தார்.

Image Courtesy

கொடூரம்... :

கொடூரம்... :

ஜெய்ப்பூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பட்டேரி கிராமத்தில், சம்பவ தினத்தன்று வயலில் வேலை செய்துக் கொண்டிருந்த பன்வாரி தேவியின் கணவரை ஐந்து பேர் தடிகளால் தாக்கிவிட்டு பன்வாரி தேவியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

தாக்கியது கிராமத்தில் செல்வாக்க நிறைந்த குஜ்ஜர் இனத்தை சேர்ந்தவர்கள்.பாதிக்கப்பட்ட பன்வாரியோ தாழ்த்தப்பட்ட சாதியினரான குயவர் இனத்தைச் சேர்ந்தவர்.

Image Courtesy

காரணம் :

காரணம் :

சில மாதங்களுக்கு முன்னதாக, குஜ்ஜர் இனத்தை சேர்ந்த ஒன்பது மாத பெண் குழந்தைக்கு நடைபெறவிருந்த திருமணத்தை பன்வாரி தேவி தடுத்ததுதான் அவர்களின் கோபத்திற்கான அடிப்படை காரணம்.

இன்றைக்கும் தான் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டேன் என்று பெண்கள் வெளியே சொல்லத் தயங்கும் நிலையில் 25 வருடங்களுக்கு முன்னர் வெளியில் தைரியமாக புகார் அளித்த பன்வாரிக்கு இன்று வரையில் பன்வாரி தேவிக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்பது தான் பெருஞ்சோகம்.

Image Courtesy

நந்தினி :

நந்தினி :

அரியலூர் மாவட்டத்திலுள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது நந்தினி அப்பகுதியில் கட்டிட வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

அங்கே கொத்தனாராக இருந்த இந்து முன்னணி பிரமுகர் மணிகண்டன் தனது நண்பர்களுடன் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி கற்பழித்து கொலை செய்தார்.

அவரது உடல் கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அப்போது கர்ப்பமாக இருந்த நந்தினியை கூட்டு பலாத்காரம் செய்ததுடன் அவள் வயிற்றில் இருந்த கருவையும் எடுத்து கொடூரமாக எரித்துள்ளனர்.

ஹாசினி :

ஹாசினி :

போருரில் வசித்து வந்த பாபு என்பவரின் ஏழு வயது மகள் ஹாசினி . இவர் தன் அடுக்குமாடி குடியிருப்பில் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென மாயமானார்.

பின்னர் அதே குடியிருப்பில் வசிக்கும் தஷ்வந்த் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தஸ்வந்த ஜாமினில் வெளியேவந்தவன் தன்னுடைய தாயையும் கொலை செய்து விட்டு தற்போது சிறையில் இருக்கிறான்....

ஜிஷா :

ஜிஷா :

கேரள மாநிலம் பெரும்பாவூரைச் சேர்ந்த ஜிஷா என்ற மாணவி சட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார். அவர் வீட்டில் தனியாக இருந்தபோது அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கூரிய ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நீதி கிடைத்ததா? :

நீதி கிடைத்ததா? :

70 வயது மூதாட்டியாய் இருந்தாலும் சரி, ஐந்து வயது குழந்தையாக இருந்தாலும் சரி ஒவ்வொருவரும் தினம் தினம் பயந்து சாக வேண்டிய நிலைமையில் தான் இருக்கிறோம். இந்தப்பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே தான் இருக்கிறது. அதை விட வெளிச்சத்திற்கே வராமல் போய்விடுகிற சம்பவங்களும் நிறைய உண்டு என்பதை நம்மால் மறுக்கமுடியாது.

பாதிக்கபப்ட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைத்ததா என்றால்... இல்லை என்பது தான் நிஜம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, life
English summary

Most Brutal Rape Cases In India

Most Brutal Rape Cases In India
Subscribe Newsletter