இழந்தது கைகளை தான், தன்னம்பிக்கையை அல்ல, ஒரு ஏழை விவசாயியின் உண்மை கதை!

Posted By:
Subscribe to Boldsky

ஓரிரு முயற்சிகள் தோல்வியுற்றாலே உடைந்து போய்விடும் மக்கள் மத்தியில், இரு கைகளை இழந்த பிறகும் கூட விவசாயம் பார்த்து, படுக்கையில் வீழ்ந்த தன்னை ஈன்றெடுத்த தாய்க்கு உணவூட்டி அரவணைப்புடன் பராமரித்து வரும் ஒரு ஏழை விவசாயின் வாழ்க்கை தான் இது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சென் சிங்யின்!

சென் சிங்யின்!

48 வயது நிரம்பிய சென் சிங்யின், சீனாவில் இருக்கும் சோங்கிங் எனும் முனிசிபாலிட்டி பகுதியில் வாழ்ந்து வரும் ஒரு ஏழை விவசாயி. தன் அன்னை மீது இவர் காட்டும் அக்கறையை யாராலும் தடுத்துவிட முடியாது.

Image Courtesy

இளையவர்!

இளையவர்!

ஆறு நபர்கள் கொண்ட குடும்பத்தில் இளையவர் சென் சிங்யின். இவர் விவசாயம் செய்வது, உணவு சமைப்பது, ஆடுகளுக்கு உணவூட்டுவது என பல வேலைகள் செய்து வருகிறார்.

Image Courtesy

படுக்கையில் வீழ்ந்த தாய்!

படுக்கையில் வீழ்ந்த தாய்!

மூன்று வருடங்களுக்கு முன்னர் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சென் சிங்யின் தாய் படுக்கையில் வீழ்ந்தார். இவரை முழுமையாக பராமரித்து வருபவர் சென் சிங்யின் தான்.

Image Courtesy

இது சாதரணமா?

இது சாதரணமா?

ஒரு விவசாயினால் இது முடியாதா என்ன என்று சிலர் கேள்வி கேட்கலாம். ஆனால், இரண்டு கைகளும் இல்லாத நிலையில் இவற்றை எல்லாம் செய்வது தான் சென் சிங்யின் சிறப்பு. மற்றும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருவதற்கான காரணம்.

Image Courtesy

விபத்து!

விபத்து!

ஒரு எலக்ட்ரிக்கல் விபத்தில் இரண்டு கைகளையும் இழந்தார் சென் சிங்யின். இந்த விபத்து நடந்த போது சென் சிங்யின் வயது வெறும் 7.

Image Courtesy

செயற்திறன்!

செயற்திறன்!

ஒரு சாதாரன மனிதனுக்கு ஈடாக என்று இல்லாமல், அதற்கும் மேல் வேகமாக செயல்படுகிறார் சென் சிங்யின். விவசாயம் என்று மட்டுமில்லாமல் தாய்க்கும் உணவூட்டி அசத்துகிறார்.

Image Courtesy

மனமுருக செய்யும் சென் சிங்யின்!

மனமுருக செய்யும் சென் சிங்யின்!

படிக்க வைத்த பெற்றோரையே முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் பிள்ளைகளுக்கு முன், பெரும் உதாரணமாக விளங்குகிறார் இரண்டு கைகளும் இழந்த சென் சிங்யின். சென் சிங்யின் இழந்தது இரண்டு கைகள் தான் தவிர, தன்னம்பிக்கை அல்ல.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Meet The Farmer Who Lost His Two Arms, But Still Feeds His Mom in a Incredible Way

Meet The Farmer Who Lost His Two Arms, But Still Feeds His Mom in a Incredible Way!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter