Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
தன்னை அசிங்கப்படுத்தியவர்கள் முன் அசத்தி காட்டிய இந்தியாவின் இரும்பு பெண்!
தனது உருவ தோற்றத்தை வைத்து அசிங்கமானவள் என ஏளனம் செய்தவர்கள் முன்னர் பாடி பில்டிங்கில் அசத்தி காட்டி இருக்கிறார் இந்தியாவின் இரும்பு பெண் யாஸ்மீன் மானக்!
பெண்கள் என்றாலே வீக்கர் செக்ஸ் என்ற வார்த்தை நமது சமூகத்தில் புழக்கத்தில் உள்ளது. அறிவாளியாக இருந்தாலும், தலைமை பதவி வகித்தாலும் கூட அவர்களை சில வார்த்தைகளால் கூனிக்குறுகிட செய்ய சற்றும் தயங்காது ஆண் சமூகம்.
இது போன்ற பல சூழல்களை கடந்து தான் நமது வீட்டில் இருக்கும் பெண்கள் வேலைக்கு சென்று வருகிறார்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது. இது போன்று தன் அழகை கிண்டல் செய்து அசிங்கமானவள் என ஏளனம் செய்தவர்கள் முன்னர் யாஸ்மீன் மானக் இரும்பு பெண்மணியாக மாறி மிரளவைத்துள்ளார்.

பல முகம் கொண்ட யாஸ்மீன்!
தொழிலதிபர், ஃபிட்னஸ் இன்ஸ்ட்ரக்டர், பாடி பில்டர், பைக்கர் என தனது அழகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார் யாஸ்மீன் மானக்.
Image Source

வெண்கல பதக்கம்!
சமீபத்தில் மிஸ்.ஆசியா பாடி பில்டிங் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதித்துள்ளார் யாஸ்மீன் மானக்.
Image Source

மிஸ். இந்தியா - 2016!
மேலும், யாஸ்மீன் மானக் 2016-ஆம் வருடம் பாடி பில்டிங் ஃபெடரேஷன் நடத்திய மிஸ் இந்தியா 2016 போட்டியிலும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Image Source

விபத்து!
மிஸ் இந்தியா வரை யாஸ்மீன் மானக் ஆனது ஒரு விபத்து தான். சிறுவயதில் யாஸ்மீன் மானக் எடுத்துக் கொண்ட ஒரு தவறான மருந்து அவரை உடல் ரீதியாக, உடல் தோற்றம் ரீதியாக முற்றிலுமாக மாற்றியது. இவர் ஓர் ஆண் போன்ற உடல் வடிவம் கொண்டார். இதனால் வாழ்க்கையில் பல இடங்களில் இவர் அவ பேச்சுக்களை கேட்கும் நிலை உண்டானது.
Image Source

அசிங்கம்!
அசிங்கம் என கூறி இவரை ஏளனம் செய்ய துவங்கினர். இதனால் தன்னம்பிக்கை இழந்த யாஸ்மீன் மீண்டும் தன்னம்பிக்கை பெற ஜிம் செல்ல ஆரம்பித்தார். கடுமையாக பயிற்சிகள் மேற்கொண்டார். மெல்ல, மெல்ல இவரது ஆர்வம் பாடி பில்டிங்கில் அதிகரித்தது.
Image Source

300 ஆண்கள்!
பாடி பில்டிங்கில் சாதித்தது மட்டுமின்றி, சொந்தமாக ஒரு ஜிம்மும் நடத்தி வருகிறார் யாஸ்மீன் மானக். ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார் யாஸ்மீன் மானக்.
Image Source



Click it and Unblock the Notifications