பாலியல் தொழிலாளிகளின் மறுப்பக்கம் - புகைப்படத் தொகுப்பாக...

Posted By:
Subscribe to Boldsky

சில வாரங்களுக்கு முன்னர் ஒரு உடல் ஊனமுற்ற பிச்சைக் காரரும், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்ணுக்கும் இடையே மலர்ந்த காதல் பற்றி நாம் தமிழ் போல்ட்ஸ்கையில் பதிவிட்டுருந்தோம்.

அந்த படத்தையும் அவர்களின் கதையையும் பகிர்ந்த வங்காள தேசத்தை சேர்ந்த ஒரு சர்வதேச புகைப்படக் கலைஞரை பற்றி தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்.

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பது ஊடக துறையில் கூறப்படும் ஒரு பழமொழி. வார்த்தைகளை காட்டிலும் படங்களில் உணர்வுகளை அப்படியே அப்பட்டமாக பிரதிபலித்து காட்டிவிட முடியும்.

ஜி.எம்.பி ஆகாஷின் ஒவ்வொரு படத்திற்கு பின்னாடியும் ஒரு நபரின் ஆழமான வாழ்க்கை பதிவு உள்ளடங்கி இருக்கிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாலியல் தொழிலாளிகள்!

பாலியல் தொழிலாளிகள்!

தனது ஒரு ப்ராஜக்ட்டில் பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையை இவர் படம் பிடித்திருந்தார். அதில் மிக ஆழமான உணர்வுகளை, அவர்களது வாழ்க்கை முறையை இவர் அப்படியே பிரதிபலித்து காட்டி இருந்தார்.

Image Credit:visualcultureawards

தேடல்...

தேடல்...

"இங்கே பெண்கள் ஒரு காட்சி பொருள், தனது விருப்பம் மற்றும் பணத்திற்கு ஏற்ற பொருள் கிடைக்குமா என ஆண்கள் தேடி வருகிறார்கள்..."

Image Credit: GMB Akash

சாலை ஓரம்...

சாலை ஓரம்...

வங்காள தேசத்தில் சாலை ஓரத்தில் இப்படி ஒரு பெண்ணை நீங்கள் பார்க்காவிட்டால் தான் அதிசயம்.

தனது நாளைய வாழ்க்கையை ஊர்ஜிதம் செய்துக் கொள்ள, இன்றைய இரவை விற்க வந்து நிற்கும் பெண்...

Image Credit:visualcultureawards

பேரம்!

பேரம்!

ஒரு பொருளை பேரம் பேசி விற்று பிழைப்பு நடத்துவதே கொடுமை எனில், தன்னையே தனக்காக, தான் பிழைக்க பேரம் பேசுவது....?

Image Credit:thedailybeast

சின்னஞ்சிறு கிளிகள்!

சின்னஞ்சிறு கிளிகள்!

பெண்கள் தன்னை அலங்காரம் செய்துக் கொள்வது தங்களை இன்னும் சீர்ப்படுத்தி கொள்ள. ஆனால், இங்கே, தன்னை தானே சீரழித்து கொள்ளவும் அலங்காரங்கள் நடக்கின்றன.

Image Credit:gmb-akash

நேரம் வந்துவிட்டது...

நேரம் வந்துவிட்டது...

சிலர் பாலியல் தொழில் செய்பவர்களை பார்த்து, "நீ உடலை விற்று பிழைப்பு நடத்துபவள் தானே என ஏசுவது உண்டு..."

சிறு பிழையை திருத்திக் கொள்ளுங்கள்... அவர்கள் தங்கள் உணர்வை கொன்று, பிணமாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் துர்பாக்கியசாலிகள்.

Image Credit:filmpressplus

ஓநாய் கூட்டம்!

ஓநாய் கூட்டம்!

பிச்சை கேட்பவன் தானே பிச்சைக் காரன், பிச்சை போடுபவர் அல்ல... அப்போது, இச்சைக் கேட்டு வருபவர் தான் வேசி... அதை தருபவர்கள் அல்ல...

இதில் இருக்கும் நியாயம் முதிர்ச்சி அடைந்தால் புரியும். ஏனெனில், எந்த ஒரு பெண்ணும் தானாக விரும்பி பாலியல் தொழில் செய்ய வருவதில்லை. 99% ஏமாற்றி தான் விற்கப்படுகிறார்கள், இச்சை வெறியர்களால்!

Image Credit:ndmagazine

நூறு விருதுகள்!

நூறு விருதுகள்!

இதுவரை ஜி.எம்.பி ஆகாஷ் நூறு சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச அளவில் நூறு ஜார்னல்ஸ் பப்ளிஷ் செய்துள்ளார். மனிதத்தையும், மனிதர்களையும் தனது கேமரா கண்கள் மூலம் இந்த உலகிற்கு எடுத்துக்காட்டி வருகிறார் இந்த கலைஞன்.

Image Credit:youtube

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Meet GMB Akash, The Humanitarian Photographer From Bangladesh!

Meet GMB Akash, The Humanitarian Photographer From Bangladesh!
Subscribe Newsletter