இந்த பழமொழிகளுக்கெல்லாம் உங்களுக்கு அர்த்தம் தெரியுமா?

Posted By: Gnaana
Subscribe to Boldsky

தமிழில் நாம் பேசும்போது, நம்மை அறியாமல் சமயத்தில் நாம் சில பழமொழிகளை உபயோகிப்போம், அவற்றின் விளக்கம் தெரியாவிட்டாலும், நாம் பேச்சுவழக்கில் அவற்றைப் பயன்படுத்துவோம், "அடியாத மாடு படியாது", "ஆண்டவன் ஆட்டுக்கு வாலை அளந்துதான் வச்சிருக்கிறான்", என்பது போன்ற சொல்லோடைகள் நம் தமிழ் மொழியில் ஏராளம் உள்ளன.

கிராமங்களில் சிறிது காலம் விடுமுறைக்கோ அல்லது ஏதேனும் அலுவல் காரணமாகவோ செல்ல நேர்ந்தால், சில நாட்கள் கிராம மக்களிடம் பேசும்போது, இதுபோன்ற நிறைய பழமொழிகளை அவர்களிடம் இருந்து அறியலாம். அவை வெறும் சொல்லுக்கு வரும் வார்த்தைகளல்ல, மாறாக அவை நிறைய விசயங்களை உள்ளடக்கியவை.

Meanings for Tamil proverbs

அவற்றின் பொருள் பல ஆண்டுகால நம் மூதாதையரின் அனுபவத்தாலும், அவர்கள் கற்றறிந்த படிப்பினையாலும் அறிந்துகொண்டவையே, எல்லோருக்கும் பயன்படட்டும் என்று எண்ணியே, அவற்றை தினசரி பேச்சு வழக்கில் பேசி வந்தனர், அதுவே, வாழையடி வாழையாக, நம் மக்களிடையே இன்றும் பரவலாக பேசப்படுகிறது.

அத்தகைய மூத்தோர் அனுபவ மொழிகளில் சிலவற்றை நாம் இப்போது பார்ப்போமா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

யாருக்கும் தீங்கு நினைக்காத உள்ளத்தின் தெளிவு, நோய்கள் இல்லா உடலின் வலிமை, முகத்தின் வனப்பில் தெரியும் என்பது இதன் விளக்கம்.

பகலில் பக்கம் பார்த்து பேசு.. இரவில் அதுவும் பேசாதே

பகலில் பக்கம் பார்த்து பேசு.. இரவில் அதுவும் பேசாதே

மற்றவரை குறை கூறும் வகையிலான பேச்சுக்களை, பகலில் அருகில் யாருமில்லை என்று உறுதிசெய்துகொண்டே பேசவேண்டும், இரவில் அந்தப்பேச்சும் கூடாது, குறை கூறும் நபரோ அல்லது அவருக்கு நெருங்கிய நண்பரோ, அந்தப்பேச்சை கேட்க நேர்கையில், புறம் பேசுபவருக்கு ஆபத்து நேரலாம்.

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்

பொதுவில் பிறருக்கு தீங்கு இழைத்தவனுக்கு அரசாங்கம் தண்டனை தரும், பிறரறியா வண்ணம் மற்றவர்க்கு தீங்கு செய்பவனை, தெய்வம், சமயம் பார்த்து தண்டிக்கும்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

உடலுக்கு நன்மை தரும் நல்ல சுவையான உணவே ஆனாலும், அதை அளவுக்கு அதிகமாக உண்ண, அதுவே விசமாக மாறி, உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

ஆபத்துக்கு பாவமில்லை

ஆபத்துக்கு பாவமில்லை

ஒருவருக்கு ஆபத்து எனில் அவரைக்காப்பாற்ற சிறு தவறே செய்ய நேரினும், அதனால் ஒன்றும் கெடுதல் இல்லை.

இஞ்சி லாபம் மஞ்சளில் போச்சு.

இஞ்சி லாபம் மஞ்சளில் போச்சு.

விவசாயி இஞ்சி விளைச்சலில் அடைந்த லாபம், அவன் காலம் அறியாது விளைவித்த மஞ்சள் நஷ்டத்தில் கரைந்தது என்று பொருள்.

ஈட்டி எட்டு முழம் பாயும், பணம் பாதாளம் வரை பாயும்

ஈட்டி எட்டு முழம் பாயும், பணம் பாதாளம் வரை பாயும்

போர்வீரன் கையில் இருக்கும் ஈட்டி என்ற கூரான ஆயுதம் எட்டு முழ தூரம் பாய்ந்து சென்று எதிரியைத் தாக்கும் ஆற்றல் மிக்கது, ஆனால், எய்தவன் பணமோ, பாதாள லோகம் வரை பாய்ந்து சென்று, எய்தவன் இலக்கை, அடையவைக்கும் ஆற்றல் உடையது.

ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்

ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்

ஏழையைத் துன்புறுத்தும் கொடுமைக்காரர்களால் ஏழைகள் விடும் கண்ணீர், கூரிய வாளைப்போல, கொடுமை புரிவோரை வேரறுக்கும் ஆற்றல்மிக்கது.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

இளைய வயதில் கற்கவேண்டிய கல்வி,உடற்பயிற்சி மற்றும் நன்னெறிகளை, ஐம்பது வயதில் கற்க எண்ணினால், அது முடியாமல் போகும்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்

இளமையில் கற்கும் பழக்கங்கள் எல்லாம், நாம் இறக்கும்வரை கூடவே வரும், எனவே, இளமையில் தீய பழக்கங்களை விடுத்து, நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொள்ள, அவை நமக்கு வாழுங்காலங்களில் நன்மையே,செய்யும்.

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை

ஒரு குடம் நிறைய பால் இருந்தாலும், அந்தப் பாலை உரைய வைத்து தயிராக்க, ஒரு துளி மோர் போதும். நல்லோர் அவையில் ஒரு ஆசான் இருந்தால் அங்கே, அதிக நன்மைகளே விளையும்.

 காற்றுள்ளபோதே, தூற்றிக்கொள்

காற்றுள்ளபோதே, தூற்றிக்கொள்

காற்று வீசும் சமயத்தில், வயல்வெளி களத்துமேட்டில் உள்ள நெல்மணிகளை தூற்ற, பதர்கள் நீங்கி நல்ல நெல்மணிகள் கிடைக்கும், அதுபோல, வாய்ப்புகள் வரும்போது, அதை நழுவவிடாமல், பயன்படுத்தி முன்னேற வேண்டும்.

காரியம் பெரிதா, வீரியம் பெரிதா

காரியம் பெரிதா, வீரியம் பெரிதா

ஊருக்கு பொதுவான ஒரு காரியத்தில் எல்லோரும் ஈடுபடும்போது, அதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பினால் சிலரை ஒதுக்கிவைத்துவிட்டு, அந்தப்பணியை முடிக்கக் வேண்டும் என்று எண்ணாது, எல்லோரையும் அரவணைத்து செல்வதனாலேயே, அந்த செயல் வெற்றியடையும் எனவே விருப்பு வெறுப்பின்றி, எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுவதே, வெற்றியைக் கொடுக்கும்.

சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்

சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்

மனிதன் உயிருடன் இருக்கும் வரையில், வியாதிகளுக்கும் உடல் நலனுக்கும் பல்வேறு மருந்துகள் என்று வைத்தியர்கள் விடாமல் தொந்தரவு செய்வர், மனிதன் இறந்தாலும், ஈமச்சடங்குகள்,திதி என்று அவர்கள் சந்ததியினரை வைதீகர்கள் தொந்தரவு செய்வார்கள் என்கிறது இந்தப் பழமொழி!

குறைகுடம் தளும்பும், நிறை குடம் தளும்பாது

குறைகுடம் தளும்பும், நிறை குடம் தளும்பாது

பாதிஅளவே உள்ள நீர்நிரம்பிய குடம் சுமக்கையில் தளும்பி நீர்வழியும், மாறாக, குடம் முழுவதும் தண்ணீர் இருந்தால், குடத்தின்நீர் வழியாமல், சுமந்து செல்லலாம், அதுபோல, நன்கு கற்ற அறிஞர்கள் என்றும் அமைதியாக, ஆர்ப்பாட்டமின்றி, தம் பணி ஆற்றுவர்.

போதும் என்ற மனமே, பொன் செய்யும் மருந்து

போதும் என்ற மனமே, பொன் செய்யும் மருந்து

தனக்கு கிடைப்பதில் திருப்தி அடையும் மனமே, அரும்பெரும் சிறப்பு வாய்ந்தது.

விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சமா

விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சமா

பணக்காரன் வீடே ஆனாலும், விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் கட்டி அழகு பார்த்தாலும், அது விளக்குமாறுதானே, பட்டுக்கு அதனால் ஏதேனும் பெருமையுண்டா? அதுபோலத்தான் தகுதி இல்லாதவர்க்கு கிடைக்கும் பட்டங்களும், புகழும்.

 முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

தமக்கு வலிமையும், வாய்ப்பும் எப்போதும் நிரந்தரம் என்றெண்ணி, அடாத செயல்கள் செய்துவரும் யாவரும், நிச்சயம் அவர்கள் செய்த வினையின் பயனை பின்னொரு நாள் அனுபவிக்க நேரிடும் என்பதே இந்த பழமொழியின் பொருள்.

கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது

கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது

மக்களுக்கு துன்பங்கள் அளிக்கும் கொடுங்கோல் ஆட்சி நெடுநாட்கள் நிலைக்காது, "வல்லவனுக்கு வல்லவன் இந்த உலகில் உண்டு" என்பதுபோல மக்களுக்கு துயரிலிருந்து விடுபட, ஒரு நல்ல வாய்ப்பு வரும் என எண்ணி, நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்..

ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல்

ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல்

என்னதான் எதிர்ப்புகள், அநீதிகள் நமக்கெதிரே கடலலைகள் போல வந்தாலும், நல்ல எண்ணங்கள் கொண்டு செயல்படும் செயலில் இருந்து விலகாமல் ஊக்கத்துடன் அதில் ஈடுபட, வெற்றி உறுதியாம் என்ற நம்பிக்கையில் நலமுடன் வாழ்வோம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Meanings for Tamil proverbs

    Tamil proverbs and their meaning are given in detail.
    Story first published: Saturday, August 5, 2017, 13:52 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more