எதெல்லாம் செஞ்சா உங்க அம்மா ஹேப்பி ஆவாங்க தெரியுமா?

Posted By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

அனைவருக்கும் அம்மா என்றால் பிடிக்கும் தான். ஆனால், அந்த அன்பை நாம் வெளிப்படுத்துவதற்கு நேரம் இருப்பதில்லை.

நம் மீதும், நம் குடும்பத்தின் மீதும் அளவு கடந்த அக்கறை மற்றும் பாசம் வைத்திருக்கும் அம்மாவிற்கு சில இன்ப அதிர்ச்சிகள், பரிசுகள் போன்றவற்றை கொடுப்பதன் மூலம் அம்மாவின் சந்தோஷத்தை நாமே நேரடியாக பார்க்கலாம். அன்னையர் தினத்தன்று மட்டும் தான் இதை செய்ய வேண்டும் என்பதில்லை.

Good ideas To Make Your Mum Feel Special ever

நமக்கு நேரம் கிடைக்கும் போது அல்லது தினமும் சிறிது நேரம் அவர்களுடன் செலவிடுவதால் அவர்களுக்கு நம் அன்பை சுலபமாக வெளிபடுத்தலாம்.

உங்க அம்மாவை குஷிப்படுத்தவும் அவர்கள் மனதில் உண்டாகும் வெறுமையை போக்கவும் நீங்க என்ன செய்யலாமென உங்களுக்காக நாங்க கொடுக்கிற சிறு ஐடியாக்கள் இங்கே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பரிசுக் கூடை:

பரிசுக் கூடை:

உங்கள் அம்மாவிற்கு பிடித்த அழகு சாதனப் பொருட்களை நியாபகத்தில் வைத்து அவற்றை வாங்கி, அழகாக அடுக்கி ஒரு பரிசுக் கூடையாக கொடுத்து, நீங்கள் எப்போதும் அழகாக இருப்பது மிக அவசியம் என்று கூறிப் பாருங்கள், உங்கள் அம்மாவின் சந்தோஷத்தை உங்கள் முகத்தில் பார்க்கலாம்.

சர்ப்ரைஸ் பார்ட்டி

சர்ப்ரைஸ் பார்ட்டி

உங்கள் அம்மாவிற்கு நீங்களும் உங்கள் குடும்பமும் முக்கியமாக இருக்கும் நிலையில் அவர்களது நெருங்கிய நண்பர்களை நிச்சயம் மறந்திருப்பார்கள். இந்த சமயங்களில் சர்ப்ரைஸ் பார்ட்டி வைத்து அதற்கு உங்கள் அம்மாவின் முக்கிய நண்பர்களை அழைத்து உங்கள் அம்மாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தால் நிச்சயம் சந்தோஷப்படுவார்.

 நேரம் ஒதுக்குவது

நேரம் ஒதுக்குவது

உங்கள் பெற்றோருக்கு வயதாகிறது எனவே உங்களுடன் நேரம் செலவிட விரும்புவார்கள். எனவே, உங்கள் அம்மாவை அடிக்கடி வெளியில் அழைத்து செல்லுங்கள். இப்படி செய்தால் உங்கள் அம்மா ஒரு குழந்தையாக மாறி சந்தோஷத்தில் குதிப்பதை நீங்களே பாருங்கள்.

வீட்டு அலங்காரத்தில் உதவுங்கள்

வீட்டு அலங்காரத்தில் உதவுங்கள்

அம்மாக்கள் சிலருக்கு தன் வீட்டை இப்படி தான் வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதாவது வீட்டில் சிறியதாக தோட்டம் அமைப்பது அது போன்று. அந்த மாதிரியான விஷயங்களில் அவர்களை ஆசைகளை நிறைவேற்றினால் சந்தோஷத்தில் மூழ்கிவிடுவார்கள்.

 வீட்டு வேலைகளை செய்வது

வீட்டு வேலைகளை செய்வது

ஒவ்வொரு நாளும் என்ன வேலை செய்ய வேண்டும் என்று முன் கூட்டியே முடிவு செய்து வைத்திருப்பர். அந்த வேலைகளை நீங்களும் உங்கள் அப்பாவுடன் சேர்ந்து உங்கள் அம்மாவுக்கு முன் இந்த வேலையை செய்தால் அவர்கள் மிகவும் சந்தோஷப்படுவர்.

வீடியோ கால் செய்யுங்கள்

வீடியோ கால் செய்யுங்கள்

வெளியூர்களில் தங்கி இருந்தீர்கள் என்றால் உங்கள் அம்மா எதிர் பார்க்காத தருணத்தில் வீட்டிற்கு வரலாம் அல்லது வர முடியாது சூழ்நிலையில் வீடியோ காலாவது செய்து பேசலாம். ஏனென்றால், உங்கள் அம்மா உங்களுடன் இருக்கத் தானே மிகவும் விரும்புவர். எனவே, இது மிகுந்த சந்தோஷத்தை உங்கள் அம்மாவிற்குக் கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Good ideas To Make Your Mum Feel Special ever

Good ideas To Make Your Mum Feel Special ever
Story first published: Monday, May 22, 2017, 21:00 [IST]