ஒவ்வொரு பெண்ணும் இப்படியான கணவரைத் தான் எதிர்ப்பார்க்கிறாள்!

Posted By:
Subscribe to Boldsky

கதம்பினி கங்குலி மற்றும் சந்திரமுகி பாஷு இருவரும் யார் தெரியுமா? இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்னதாகவே பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் படித்து பட்டம் பெற்ற முதல் இந்தியர்கள். இவர்களில் கதம்பினி கங்குலி இன்னும் சிறப்பு.

அந்தக் காலத்திலேயே மருத்துவப் படிப்பு படிப்பதற்காக கடல் கடந்து சென்று படித்திருக்கிறார். மருத்துவத்தில் மூன்று பட்டப்படிப்புகளை படித்து சாதனை படைத்திருக்கிறார். தெற்காசியாவில் மேற்கத்திய மருத்துவம் படித்த முதல் பெண் கதம்பினி தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆங்கிலேய ஆட்சி :

ஆங்கிலேய ஆட்சி :

ஆங்கிலேய ஆட்சியின் போது இந்தியா எத்தகைய நெருக்கடிகளை சந்தித்து வந்தது என்பதை நாம் பல வரலாற்று கதைகளில் படித்திருப்போம். அவற்றில் பெண்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

அதிகப்படியான நெருக்கடிகளை பெண்கள் சந்தித்து வந்தார்கள். அதோடு இந்த சமூகமும் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களிடம் பலவற்றை திணித்து வந்தது.

பெரும்பாலான பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படவே படவில்லை. குழந்தை திருமணங்கள் அப்போது மேலோங்கியிருந்தது.

Image Courtesy

இளமைக்காலம் :

இளமைக்காலம் :

கதம்பினி கங்குலி தற்போது பங்கலாதேஷாக இருக்கும் சாங்கி என்ற இடத்தில் பிறந்தார். தந்தை ஸ்கூல் ஹெட்மாஸ்டர், மற்றவர்களைப் போல் அல்லாமல் மிகவும் கண்டிப்புடன் படிக்க வேண்டும் என்றார். கதம்பினியும் கடினமாக படித்தார்.

பங்களாதேஷில் இருக்கும் பெத்துன்னே பள்ளியிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு படிக்கச்சென்ற முதல் மாணவர் கதம்பினி தான். அங்கே ப்ர்ஸ்ட் ஆர்ட்ஸ் என்ற பட்டத்தை 1883 ஆம் ஆண்டு பெற்றார்.

படிப்பதை தாண்டி இந்த சமூகத்தில் ஒவ்வொரு விஷயத்தை பெரும் போராட்டமாகவே நிகழ்த்த வேண்டியிருந்தது கதம்பினிக்கு. இவரை விட 20 வயது மூத்தவரான துவாரகநாத் கங்குலிக்கு திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர்.

Image Courtesy

 கணவர் :

கணவர் :

இவர்களது திருமணத்தை பெரும்பாலானோர் எதிர்த்தனர். காரணம், கதம்பினி பட்டப்படிப்பு படித்ததால் தான். பலரும் கதம்பினியின் படிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க நீ மருத்துவம் படி என்று சொல்லி மனைவியின் படிப்பை ஊக்கப்படுத்தினார் துவாரகநாத்.

கதம்பினி மருத்துவராவது அவ்வளவு எளிதாக படவில்லை. இதுவரை வரலாற்றில் இந்தியப் பெண் மருத்துவம் படித்ததாக சரித்தம் இல்லை அதனால் கதம்பினியை இங்கே சேர்க்க முடியாது என்று சொல்லி கை விரித்தது கல்கத்தா மருத்துவக் கல்லூரி.

மனைவிக்காக துவாரகநாத் நீண்ட நாட்கள் போராடினார். கதம்பினிக்கு மருத்துவம் படிக்க சீட் கொடுக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று போராடினார்.

கல்லூரி நிர்வாகத்திற்கு எப்படியெல்லாம் நெருக்கடி கொடுக்க முடியுமோ கொடுத்தார். அதனால் வேறு வழியின்றி கதம்பனிக்கு சீட் வழங்க கல்கத்தா மருத்துவக் கல்லூரி முன்வந்தது.

Image Courtesy

மருத்துவப் படிப்பு :

மருத்துவப் படிப்பு :

1886 ஆம் ஆண்டு மருத்துவ பட்டப்படிப்பு முடித்து, மேற்கத்திய மருத்துவம் பயில தகுதியடைந்தார். இத்துறையில் நிபுணத்துவம் பெற 1892 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு பயணப்பட்டார். அங்கே எடின்பெர்க்,டூப்லின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் படித்து சான்றிதழ்களை வாங்கினார் கதம்பினி.

இதனை முடித்துக் கொண்டு இந்தியாவுக்கு திரும்பியவர் லேடி டூஃப்ரின் மருத்துவமனையில் சில காலம் பயிற்சி பெற்றார். பின்னர் தனியாகவே மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார்.

Image Courtesy

சமூக செயல்பாடுகள் :

சமூக செயல்பாடுகள் :

படித்து பட்டம் பெற்றதால் மட்டும் கதம்பினி மக்கள் மனதில் நிற்கவில்லை. மாறாக சமூகத்திற்கும் தொண்டாற்றினார். தனது கணவரும் பிரம்ம சமாஜ் தலைவர்களில் ஒருவருமான துவாரகநாத் கங்குலியுடன் இணைந்து பெண்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

வங்கப்பிரிவினையின் போது, 1906 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பெண்களை ஒருங்கிணைத்து ஒரு மாநாட்டினை நடத்தினார். சத்தியாகிரகம் உள்ளிட்ட சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

Image Courtesy

இறுதி நாட்கள் :

இறுதி நாட்கள் :

1898 ஆம் ஆண்டு கணவர் இறந்த பிறகு பொது வாழ்க்கையிலிருந்து சற்று விலகியே இருந்தார். இவரது உடல்நிலையும் கடுமையாக மோசமடைந்தது. இவர் இறப்பதற்கு முன்னர் சுரங்கங்களில் பணியாற்றும் பெண்களுக்காக, அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தார்.

எப்போது எந்த நேரத்தில் மருத்துவ உதவி என்று கேட்டாலும் உடனடியாக செய்யக்கூடியவராக இருந்தார். தன் உயிர் பிரிய சில நிமிடங்களுக்கு முன்னர் கூட மக்களுக்கு மருத்துவம் பார்த்தார். மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த பிறகு வீட்டிற்கு வந்த பதினைந்தாவது நிமிடத்தில் கதம்பினியின் உயிர் பிரிந்தது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Life history of kadambini ganguly

Life history of kadambini ganguly
Story first published: Wednesday, October 4, 2017, 17:16 [IST]