பலரும் அறியாத வைகை புயல் வடிவேலுவின் சோகமான ஆரம்பக் கால வாழ்க்கை!

Posted By:
Subscribe to Boldsky

அப்பா - நடராசன், அம்மா - சரோஜினி அம்மாள், வைகை புயலை பெற்றெடுத்தவர்கள். இவருக்கு கன்னிகா, கார்த்திகா, கலைவாணி என மூன்று மகள்கள் மற்றும் சுப்பிரமணி என்ற மகனும் இருக்கிறார்.

வடிவேலு மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காதவர் என பலமுறை மேடைகளில் கூறியுள்ளார். ஆம், இவர் பள்ளிக்கூடமே சென்றதில்லையாம். தனது சிறுவயதில் நண்பர்களுடன் சேர்ந்து சின்ன சின்ன நாடகங்களில் நகைச்சுவை நடிகர் வேடம் ஏற்று நடித்து அசத்தியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அப்பாவின் மரணம்!

அப்பாவின் மரணம்!

எதிர்பாராதவிதமாக அப்பா மரணம் அடைய, வடிவேலுவின் குடும்பம் மிகவும் வறுமைக்கு தள்ளப்பட்டது. பிறகு, மதுரையில் புகைப்படங்களுக்கு ஃபிரேம் மாட்டும் ஒரு சிறிய கடையில் வேலை செய்து வந்தார் வடிவேலு.

ராஜ்கிரண் வருகை!

ராஜ்கிரண் வருகை!

வடிவேலுவின் ஊருக்கு ஒருமுறை ராஜ்கிரண் சென்றிருந்தார். அப்போது, நடிகர் ராஜ்கிரணுடன் வடிவேலுக்கு அறிமுகம் கிடைத்தது. இந்த உறவின் பலனாக சென்னையில் ராஜ்கிரண் வீடு மற்றும் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார் வடிவேலு.

என் ராசாவின் மனசிலே!

என் ராசாவின் மனசிலே!

வடிவேலுவின் நடிப்பு திறனை கண்டு, தனது என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பளித்தார் ராஜ்கிரண். தான் நடித்த முதல் படத்திலேயே போடா, போடா புண்ணாக்கு என்ற பாடலையும் பாடியிருந்தார் வடிவேலு!

செந்தில், கவுண்டமணி!

செந்தில், கவுண்டமணி!

ஆரம்பக் காலத்தில் செந்தில், கவுண்டமணியுடன் சேர்ந்து சின்ன, சின்ன நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார் வடிவேலு.

இவர் முதல் முறையாக தனி நகைச்சுவை நடிகராக நடித்து தனது திறமையை நிலைநாட்டிய படம் ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன். இதன் பிறகே தனி முதன்மை நகைச்சுவை நடிகராக வடிவேலு தலைதூக்க ஆரம்பித்தார்.

1990-2000!

1990-2000!

1990களின் இறுதிகளில் இருந்து, 2000 துவக்க ஆண்டுகள் என குறுகிய காலத்தில் அசைக்க முடியாத நகைச்சுவை நடிகராக உருமாறினார் நடிகர் வடிவேலு. 2003ல் வெளியான வின்னர் வடிவேலுவின் திரை பயணத்தில் ஒரு மைல்கல் என கூறலாம்.

பழையதை மறக்காத மனம்!

பழையதை மறக்காத மனம்!

தனது ஆரம்பக் கால வாழ்க்கை ஏழ்மையை மறக்காத வடிவேலு, தனது மகனுக்கு சிவகங்கையில் கூரை வீட்டில் வசித்து வந்த ஓர் ஏழை பெண்ணை திருமணம் செய்து வைத்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lesser Known Facts About Actor Vadivelu!

Lesser Known Facts About Actor Vadivelu!