இப்படியும் குழந்தைங்க இருக்கனால தான் ஊருல மழை பெய்யுது... போட்டோ கலக்ஷன்!

Posted By:
Subscribe to Boldsky

குழந்தையும் தெய்வமும் ஒன்றென சும்மாவா சொன்னார்கள். குழந்தைக்கு ஜாதி, மதம் காண தெரியாது, பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு காண தெரியாது. அவன் வெள்ளையா, கருப்பா, குண்டா, ஒல்லியா, என எந்த பிரிவினையும் காணாமல், சிரிக்கும், பழகும், அழுகும், உதவும், அனுதாபப்படும்.

குழந்தை அனைவரையும் நம்பும், அவர்கள் தவறு செய்யும் வரை. இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என சத்தியம் செய்தால், மன்னித்து ஏற்றுக் கொள்ளும். இன்றைய உலகில் குழந்தைகளிடம் மட்டும் தான் கொஞ்சம் மிஞ்சி இருக்கும் மனிதம் நிரம்பி இருக்கிறது. அதற்கான எடுத்துக் காட்டுளாக இந்த படம் விளங்குகிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அண்ணன் உடையான்...

அண்ணன் உடையான்...

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பார்கள். இந்த அண்ணன் ஒரு தகப்பனுக்கு மேலாக தனது தம்பிக்கு ஊக்கமளித்து வருகிறார். எட்டு வயதே நிரம்பிய நொஹ் எனும் இந்த சிறுவன், உடல் ஊனமுற்ற தனது சகோதரனை மினி ட்ரையத்லான் அழைத்து சென்று அசத்தியுள்ளார். மராத்தான் போன்ற இந்த பந்தையத்தில் பல வகையான போட்டிகள் கலந்திருக்கும். இது கடினமான ஒன்றாகும். அனைத்தையும் சகோதரனுடன் கடந்து மனிதத்தை வென்றிருக்கிறான் நொஹ்.

Image Source:

மனிதம்!

மனிதம்!

இது வங்காள தேசத்தில் நடந்த சம்பவம். வெள்ளத்தில் ஊரே தத்தளித்து கொண்டிருக்க. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மானை ஒற்றை கையில் பிடித்து கொண்டு, தலைக்கு மேலான நீரில் மிதந்து சென்று காப்பாற்றி இருக்கிறான் இந்த அசத்தல் சிறுவன்.

Image Source:

உதவி!

உதவி!

இது ரெடிட் (Reddit) தளத்தில் ஒரு பெண் பதிவிட்டிருந்த நிகழ்வு. இப்பதிவில் அப்பெண்மணி அவரது மகன் தனது சேமிப்பான நூற்று இருபது டாலர்களை, வீடில்லாமல் சாலையில் வசித்துவரும் நபர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்திருந்ததை பகிர்ந்திருந்தார்.

Image Source:

அடைக்கலம்!

அடைக்கலம்!

இந்த ஒன்பது வயது சிறுவன் தனது வீட்டின் கேரேஜ் பகுதில் தெருவில் ஆதரவின்றி இருக்கும் விலங்குகளுக்கு தானே ஒரு சிறிய பகுதி உருவாக்கிக் கொடுத்து அவற்றுக்கு உணவும், அடைக்கலமும் அளித்துள்ளார்.

Image Source:

முடி தானம்!

முடி தானம்!

இந்த எட்டு வயது சிறுவன் இரண்டு வருடமாக நீண்ட கூந்தல் வளர்த்து வந்ததற்கு கேலி, கிண்டலுக்கு உள்ளானான். ஆனால், இரண்டு வருடங்கள் நீண்ட கூந்தல் வளர்த்து புற்று நோயாள் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு தானம் செய்திருக்கிறான்.

Image Source:

சி(லிர்)லைக்கும் உணர்வு!

சி(லிர்)லைக்கும் உணர்வு!

அவை முயல் சிலைகள் என்பதை என்பதை அறியாத இந்த குழந்தை, அந்த சிலையை ஏற்றிவிட உதவ முயற்சிக்கிறது. இந்த கள்ளங்கபடமற்ற இல்லாத மனம் கொண்டுள்ளதால் தான் குழந்தைகளை கடவுளுடன் ஒப்பிடுகிறார்கள். இது வளரும் போதும் இருந்தால் உலகமே சொர்க்கமாக இருக்கும்.

கண்ணீர்!

கண்ணீர்!

ஜப்பானிய அரசியல்வாதி ஒருவர் தொலைகாட்சியில் அழுவதைக் கண்டு, கர்சீப் எடுத்துக் கொண்டு போய் அவரது கண்ணீரைத் துடைத்துவிடுகிறது.

Image Source:

மனிதி!

மனிதி!

இந்த மூன்று வயது குழந்தை தனது தாயிடம் ஒரு சிறுமியை கண்டு, ஏன் அவருக்கு முடி இல்லை என கேட்டுள்ளார். அதற்கு அந்த தாய், அவர் உடல்நலம் சரியில்லை. அவர் உட்கொண்டு வரும் மருந்து முடி உதிர செய்துவிட்டது என பதிலளித்துள்ளார். உடனே தனது முடியை கட் செய்து, அதை அந்த பெண்ணுக்கு தானம் அளிக்கப் போவதாக பெருமிதத்துடன் கூறியுள்ளார். இது தான் இந்த குழந்தையின் முதல் ஹேர்கட் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source:

மும்பை சிறுமி!

மும்பை சிறுமி!

மும்பையில் நல்ல மழை அன்று. தெருவில் குடை ஏந்தி வந்துக் கொண்டிருந்த சிறுமி. ஒரு தெருநாய் மழையில் நனைந்து கொண்டிருப்பதை கண்டு, தனது குடையில் அந்த நாயிக்கு அடைக்கலம் கொடுத்த போது எடுக்கப்பட்ட படம் இது.

Image Source:

குழந்தை மனம்!

குழந்தை மனம்!

கனடாவை சேர்ந்த சிறுவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, தெருவில் இருக்கும் கம்பங்களில் ஆதரவற்ற, வீடற்ற மக்கள் குளிர் காலத்தில் அவர்கள் கஷ்ட்டப்படாமல் இருக்க உதவும் வகையில் கோட்களை கட்டி வைத்துள்ளனர்.

Image Source:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kids are Equivalent to God, Here is the Proof!

Kids are Equivalent to God, Here is the Proof!
Subscribe Newsletter