கட்டாயத் திருமணத்தால் என் அக்கா தற்கொலை செய்துக் கொண்டார் - நான் கடந்து வந்த பாதை #6

Posted By:
Subscribe to Boldsky

நான் ஒரு இந்திய இஸ்லாம் குடும்பத்தை சேர்ந்த பெண். கட்டுப்பாடுகள் நிறைந்த சூழலில் வளர்ந்தவர். அவ்வப்போது பல தடைகளை கடந்து வந்தவள். இப்போது பெண் உரிமைக்காக போராடி வருகிறேன்.

Islam Girl Killed Herself Because of Forced Marriage - My Story!

என் குடும்பத்தில் நான் சற்றே பாக்கியம் செய்த பெண் குழந்தையாக என்னை நானே கருதுகிறேன். எனக்கான சொந்த வங்கிக்கணக்கு இருக்கிறது, ஃபேஷன் உடைகளை வாங்கி உடுத்த என்னால் முடிகிறது, கார் ஒட்டுகிறேன், எனக்கான எல்லாமும் கிடைக்கிறது.

ஆனால், இதெல்லாம் எனக்கு எளிதாக கிடைத்துவிடவில்லை... இன்று அனுபவித்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை ஓர் உயிர் செய்த தியாகம், அல்லது ஒரு உயிருக்கு நேர்ந்த துரோகத்தால் விளைந்த மாற்றம் என கூறலாம்...

அவள் எனது அக்கா....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அன்றொரு நாள்...

அன்றொரு நாள்...

அன்று அக்கா எவ்வளவு வேதனைக்கு ஆளாகி இருப்பாள் என நான் உணரவில்லை. யார், எவர்? எப்படிப்பட்டவர் என தெரியாத நபரை திருமணம் செய்துக் கொள்ள யாருக்கு தான் விருப்பம் இருக்கும். என் அக்காவுக்கு பிடிக்காத திருமணம் அது.

எட்டு வயதே ஆன பெண் குழந்தை!

எட்டு வயதே ஆன பெண் குழந்தை!

எனக்கு அப்போது வெறும் எட்டு வயது தான் இருக்கும். அன்றைய தினம் எனது அக்கா எவ்வளவு சோகமாக துன்பப்பட்டு இருந்தாள் என நான் அறிய வாய்ப்பு இல்லாமல் போன வயது அது.

வறட்டு கவுரவம்!

வறட்டு கவுரவம்!

தனது கவுரவம் சீர்குலைந்து போய்விடக் கூடாது என அக்காவை கட்டாயப்படுத்தி அப்பா திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன. அதற்கு மறுத்த அக்காவுக்கு அடியும், உதையும் பரிசாய் கொடுத்துக் கொண்டிருந்தார் அப்பா.

எனக்கு மகிழ்ச்சி!

எனக்கு மகிழ்ச்சி!

பெரிதாய் விவரம் தெரியாத வயது. அக்காவின் சோகம் அறியாமல், புத்தாடைகள், தங்க மோதிரம், பொம்மைகள் கிடைத்த மகிழ்ச்சியில் நான் உலாவிக் கொண்டிருந்தேன். ஆனால், அக்காவோ விரக்தியின் உச்சத்தில் அமர்ந்திருந்தார்.

அக்காவின் சோகம் யார் கண்களுக்கும் தெரியவில்லை. அவளை நடுவே அமர்த்தி மணமகன் வீட்டார் சுற்றியும் ஆடி மகிழ்ந்துக் கொண்டிருந்தனர்.

திரைப்படம்!

திரைப்படம்!

நாங்கள் குடும்பத்துடன் படம் பார்த்தது இல்லை. எங்கள் வீட்டில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததை அக்கா நம்பவே மாட்டாள். ஆனால், இது உண்மை. அப்படி ஒரு நிகழ்வு எங்கள் வீட்டில் நடந்தது.

கதை!

கதை!

அந்த கதையில், கட்டாய திருமணம் செய்து வைத்த பெண் தற்கொலை செய்துக் கொள்வார். அதன் பிறகு தந்தை திருந்தி, தனது மற்ற மகள்களை அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ அனுமதிப்பார். இந்த காட்சியை கண்ட பிறகு அப்பா கதறி அழுதார்.

நானே கொலை செய்து விட்டேன்!

நானே கொலை செய்து விட்டேன்!

நானே என் மகளை கொலை செய்துவிட்டேன் என அப்பா கதறி அழுதார். எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. நீ படுக்கையில் திருமண உடையில் சுற்றியும் எங்கும் இரத்த கறை படிந்த நிலையில், உன்னை நீயே சிதைத்து கொண்ட காட்சி.

அப்பா ஒருபுறம் அழுக, அம்மாவின் கூச்சல் ஊரையே கூட்டியது.

மாரடைப்பு!

மாரடைப்பு!

அப்பாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அம்மா யாருடனும் பேசவில்லை. பாட்டி உனது படத்தை கட்டிக்கொண்டு அழுதுக் கொண்டிருந்தார்.

சுதந்திரம் பிறந்தது!

சுதந்திரம் பிறந்தது!

அதன் பிறகு, என் வாழ்க்கையும் திசை மாறியது. எனக்கான துணையை நானே தேர்வு செய்துக் கொள்ளும் தருணம் கிடைத்தது. என் வாழ்வில் சுதந்திரம் பிறந்தது. நீ எழுதி வைத்த கடிதத்தை இன்றும் அப்பா படித்து அழுவதை நான் கண்டுள்ளேன்.

என் மகள்!

என் மகள்!

என் மகளை நான் மிகவும் விரும்புகிறேன். உன் போன்றே கண்களும், குணங்களும் கொண்டவளாக திகழ்கிறாள் என் மகள். உன் பெயரை தான் அவளுக்கு சூட்டியுள்ளேன்.

ஆரம்பத்தில் உன் பெயரை சொல்லி அழைக்க பலரும் தயங்கினர். ஆனால், இப்போது நிலை தலைகீழாக மாறி உள்ளது. சப்ரினாவை இம்முறை நல்லப்படியாக வளர்க்க அவர்களுக்கு இது இரண்டாம் வாய்ப்பாக அமைந்துள்ளது.

என் அழகு அக்காவே நீ நிம்மதியாக உறங்கு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Islam Girl Killed Herself Because of Forced Marriage - My Story!

Islam Girl Killed Herself Because of Forced Marriage - My Story!
Subscribe Newsletter