அப்துல்கலாம் வாழ்வில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள் !!

Posted By:
Subscribe to Boldsky

அப்துல்கலாம். இந்த நூற்றாண்டு வாழ்பவர்களின் மிக முக்கிய தலைவராகவும் இளைஞர்களின் கனவு நாயகனாகவும் இருந்த அப்துல்கலாம் இறந்த தினம் இன்று. அவரது இறந்த தினத்தன்று அவரைப்பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பும் இறப்பும் :

பிறப்பும் இறப்பும் :

இந்தியாவின் ஒரு கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில் 1931 ஆம் ஆண்டுபிறந்த அப்துல்கலாம், இந்திய வரைபடத்தில் உச்சியில் இருக்கும் மேகாலயா சில்லாங்கில் தன்னுடைய 83வது வயதில் காலமானர்.

Image Courtesy

தமிழகத்திலிருந்து :

தமிழகத்திலிருந்து :

அப்துல்கலாம், தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 3-வது குடியரசுத் தலைவராவர். ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன் ஆகியோருக்கு அடுத்தபடியாக அப்துல் கலாம் தமிழகத்திலிருந்து குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Image Courtesy

அகந்தையில்லா மாமனிதர் :

அகந்தையில்லா மாமனிதர் :

அப்துல்கலாம் மிக எளிமையான மனிதராக வாழ்ந்தார். ஜனாபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்டார். நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் ஒரு போதும் இருந்ததில்லை. அதே போல எந்த இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்ப மாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜூம்மா மசூதிக்கு தொழுகச் சென்ற போது, இட நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக இறைவனை தொழுதார்.

Image Courtesy

நட்சத்திரங்களைப் பறிக்கலாம் :

நட்சத்திரங்களைப் பறிக்கலாம் :

இளைஞர்களின் தன்னம்பிக்கை அப்துல்கலாம். அப்துல்கலாம் எழுதிய கவிதை வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாவே இருக்கும். அவர் அடிக்கடி கூறும் பொன்மொழிகள் ‘கனவு காணுங்கள்', ‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்'

Image Courtesy

இளைஞர்களின் நாயகன் :

இளைஞர்களின் நாயகன் :

உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைஞர்களிடம் யாரும் பேசியதில்லை. ஒரு முறை அப்துல்கலாமிடம் மாணவி ஒருவர் எது நல்ல நாள்? என்று கேள்வி கேட்டார் அதற்கு பதிலளித்த அப்துல்கலாம் சூரிய ஒளி பட்டால் பகல் படாவிட்டால் இரவு இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை என்று பதிலளித்தார்.

Image Courtesy

மாதச்சம்பளம் :

மாதச்சம்பளம் :

அப்துல்கலாம் மிகப்பெரிய நட்பு வட்டத்தை கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி யாருக்கும் சிபாரிசு செய்ததே இல்லை. அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கூட தனது மாத சம்பளத்தில் ஒரு பகுதியை குடும்பத்திற்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

 முதல் அறிவியல் கேள்வி :

முதல் அறிவியல் கேள்வி :

அப்துல்கலாம் தன்னுடைய சிறுவயதில் கிணற்றுக்குள் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ் குமிழாக வந்தது அது ஏன் வருகிறது என்று கேட்டாராம். அறிவியலில் மட்டுமல்ல இசையிலும் ஆர்வத்துடன் இருந்தார். அவ்வப்போது வீணை வாசிக்கும் அப்துல்கலாமிற்கு தியாகராஜ கீர்த்தனைகளையும் தெரிந்து வைத்திருந்தார்.

Image Courtesy

அதிசயித்த வெளிநாடுகள் :

அதிசயித்த வெளிநாடுகள் :

இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வுப் பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார். இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.

காந்தி சபதம் :

காந்தி சபதம் :

ஒரு முறை காந்தியின் சமாதிக்குச் சென்ற அப்துல்கலாம் காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்புவேன் என்று சபதமேற்றார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகு தொடர்ந்து மாணவர்களை சந்திப்பதையே வழக்கமாக கொண்டிருந்தார்.

Image Courtesy

கலாச்சார முக்கியத்துவம் :

கலாச்சார முக்கியத்துவம் :

அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு, தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த அதே நேரத்தில் கலாச்சாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தார். கலாச்சாரத்தின் சிறப்பால் தான் புதுமையான கண்டுபிடிப்புகள் வருகிறது என்றார்.

புத்தகங்கள் :

புத்தகங்கள் :

ஏராளமான புத்தகங்களை படிக்கும் வளக்கமுடையவர் அப்துல்கலாம். இளைஞரக்ளிடம் புத்தகங்களை நண்பனாக்கிக் கொள்ளுங்கள் என்று அடிக்கடி கூறுவார். கண்ணீரை துடைப்பதற்கும் மகிழ்ச்சியை பகிரவும் துணையாய் இருப்பது புத்தகங்கள் தான் என்றும் கூறியுள்ளார்.

முன்னரே கணித்த அறிஞர்!:

முன்னரே கணித்த அறிஞர்!:

மேக் இன் இந்தியா திட்டத்தில் தற்போதுள்ள அரசு கொண்டுவந்துள்ள பெரும்பாலான திட்டங்களை அன்றே அப்துல்கலாம் சொல்லியிருந்தார்.

தன்னுடைய இந்தியா 2020 என்ற புத்தகத்தில் உற்பத்தி துறை தான் இந்தியாவின் வருங்காலம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

எது வளர்ச்சி :

எது வளர்ச்சி :

இந்தியாவை வளர்சியடைந்த நாடாக மற்ற வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயலாற்றி வந்தார் அப்துல்கலாம். வளர்ச்சியடைந்த இந்தியா என்பது பொருளாதார வளர்ச்சியை மட்டும் குறிக்காது. கலை,இலக்கியம், மனித நேயம், சிந்தனை, பாராம்பரியம் என அனைத்து துறைகளிலும் ஒரு சேர வளர்ச்சி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மறுபிறவி :

மறுபிறவி :

நடிகர் விவேக் ஒரு முறை அப்துல்கலாமை பேட்டியெடுத்து போது மறு பிறவி குறித்து கேள்வி கேட்டார், அதற்கு பதிலளித்த அப்துல்கலாம் மறுபிறவி என்று ஒன்று இருந்தால் நான் இந்தியாவிலேயே பிறக்க வேண்டும் என்றார். காரணம் கேட்ட போது, இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு எதிர்காலத்தில் இந்தியாவின் முன்னேற்றம் உலகநாடுகளை ஆச்சரியப்படுத்தும் என்றார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Intresting facts about Dr.APJ Abdul kalam.

    Some intresting facts about Dr.Abdul kalam
    Story first published: Thursday, July 27, 2017, 15:12 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more