நிச்சயம் இந்த ஓவியங்கள் உங்களை 2 நிமிடமாவது சிந்திக்க வைக்கும்...

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் நபராக இருந்தால். இந்த பக்கம் உங்களுக்கு சுவாரஸ்யமாக அமையும். இந்த முகவரின் பெயர் @vrlgd (ViralGod). பலரது ஓவியங்கள், டிஜிட்டல் கலைகள் இங்கே பகிரப் படுகிறது. இந்த முகவரியில் பகிரப்பட்ட அத்தனை பதிவுகளும் அதனுள் இந்த உலகம் அறிந்துக் கொள்ள வேண்டிய பெரிய கருத்துக்களை கொண்டிருக்கிறது.

முதல் முறை காணும் போதே சில பதிவுகள் தன்னுள் இருக்கும் கருத்தை பளீர் என காண்பித்துவிடும். சில பதிவுகள் உங்களை இரண்டு நிமிடங்களாவது சிந்திக்க வைக்கும். அந்த கருத்து நிச்சயம் உங்களை ஆழமாக ஆராய வைக்கும். அனைத்து படங்களும் நகைச்சுவையாக தான் இருக்கும். ஆனால், அதனுள் இருக்கும் பொருள் சிரிப்பதற்கானது அல்ல, சிந்திக்க!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காண்டம்!

காண்டம்!

பிரசவத்தின் போது பிறந்த குழந்தையை தூக்கிப் பிடிக்கிறார் மருத்துவர். அக்குழந்தை, ஒரு ஆணுறையை தன் அப்பாவின் முகத்தில் விட்டெரிகிறது.

உங்க பிராஜக்ட் ஃபெயிலியர்... ஆனா, அவுட் புட் சக்சஸ் என முகத்தில் அடித்து சொல்வது போல் இருக்கிறது.

vrlgod

அறிவும், மனதும்!

அறிவும், மனதும்!

இது நாம் பெரும்பாலும் அறிந்தது. குழந்தை தனது அப்பாவிடம் இருந்து அறிவையும், அம்மாவிடம் இருந்து குணத்தையும் பெறும் என்பார்கள். அஃதாவது, அப்பாவிடம் இருந்து செயற்பாடுகள் மற்றும் முடிவெடுக்கும் திறனையும், தாயிடம் இருந்து அன்பு, பாசம், அக்கறை போன்ற குணங்கயளையும் குழந்தை பெறும் என்பதை வெளிப்படுத்துகிறது இந்த படம்.

vrlgod

பார்வை!

பார்வை!

எந்த ஒரு விஷயமும், செயலும், நமது பார்வையில் தான் இருக்கிறது. நெருப்பு என்பது ஒரு பொருள் அதை, அதை வைத்து ஒளி பெறுவதும், வீட்டை அழிப்பதும் அவரவர் பார்வையில் இருக்கிறது என்பார்கள். இந்த செய்தியை இப்படி ஒரு படத்தின் மூலம் விளக்குவது என்பது திகைப்பளிக்கிறது.

vrlgod

இதுவும் நடக்கும்!

இதுவும் நடக்கும்!

ஆண்டு சுதந்திரமாய் காட்டில் சுற்றி திறந்த விலங்குகளை நமது கேளிக்கைக்காக நாம் கூண்டில் அடைத்து சித்திரவதைப் படுத்தினோம். நாளை ஏலியன்கள் நம் உலகுக்குள் வந்தால்... மனிதர்களை கூண்டில் அடைத்து சித்திரவதைப் படுத்தும் நிலை ஏற்படலாம்.

vrlgod

காதல்?

காதல்?

இன்றைய காதலை இதைவிட தெளிவாய் வேறு யாராலும் கூறிவிட முடியாது. இதயத்தில் இருக்க வேண்டிய காதலை நாம் வேறு உறுப்பில் வைத்திருப்பதால்... இதயம் எங்கே விழுந்துக் கிடக்கிறது என்பதை விளக்குகிறது இந்த படம்.

vrlgod

ஆண் சுபாவம்...

ஆண் சுபாவம்...

இன்றைய தலைமுறையில் ஆண்கள், காதல் என்ற தூண்டில் மூலம் பெண்களை இழுத்து சீரழித்துவிடுகிறார்கள் என்பதை விளக்குகிறது இந்த அற்புதமான கலை வடிவம். இன்றைய சூழலில் இச்சை காமத்திற்கு காதல் இரையாகிவிடுகிறது.

vrlgod

அழகு?

அழகு?

ஒல்லியாக இருந்தால் தான் அழகு. கொஞ்சம் தசைப் போட்டாலும் ச்சீ என முகம் சுளிக்கிறது உடலில் அழகை காணும் சமூகம். இதுவே குண்டாக இருந்தால் அந்த பெண்ணுக்கு பேருந்தில் உட்கார இடம் கிடைப்பதில் இருந்து, திருமணத்திற்கு ஆண் கிடைப்பது வரை அனைத்தும் சிரமமே!

vrlgod

தாய்பால்!

தாய்பால்!

மார்பகம் என்பதை குழந்தைக்கு பாலூட்டும் உறுப்பாக இருந்ததை தாண்டி, அதை செயற்கையாக பெரிதாக்கி கொண்டு கவர்ச்சிப் பொருளாக்கி வருகிறார்கள். அதன் பின்னால் எப்படியான வணிகம் நடந்து வருகிறது என்பதை விளக்குகிறது இந்த படம்.

vrlgod

இந்தியாவுக்கு பொருந்தும்!

இந்தியாவுக்கு பொருந்தும்!

இந்த படம் எந்த நாட்டுக்கு பொருந்துகிறதோ இல்லையோ... இந்தியாவிற்கு நன்றாக பொருந்தும். நமது கல்வி சூழல் இப்படியாக தான் இருக்கிறது. பணம் இருப்பவருக்கு எதுவும் சாத்தியம். பணம் இல்லாதவனுக்கு திறமையே இருந்தாலும்... அவனுக்கான ஏதும் நம் நாட்டில் சாத்தியம் கிடையாது. அனிதா ஒரு முதல் எழுத்து தான். இதற்கான முற்றுப்புள்ளி யார் வந்து வைப்பார் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

vrlgod

யார் நல்லவன்?

யார் நல்லவன்?

இந்த படத்தை பார்த்ததும்.. எல்லாரும் சார்ந்து ஒருவனை குற்றம் சாட்டுகிறார்கள் என்பது போல இருக்கும். ஆனால், கொஞ்சம் நன்கு உற்றுப் பார்த்தல் தான் புரியும். அவன் ஒருவன் தான் இயற்கையாக இருக்கிறான். அவனையும் தங்களை போல செயற்கையாக மாற்றவும்... அவன் மாறவில்லை என்றதும் அவன் வேறுபட்டவன் என கைகாட்டுகிறார்கள் என்ற பொருள் விளங்கும்.

vrlgod

உதவி!

உதவி!

இன்று பலர் செய்யும் உதவிகள் இப்படியாக தான் இருக்கிறது. வெளியுலகிற்கு அவர்கள் உதவுவது போன்ற பிம்பம் தெரிந்தாலும். அந்நபருக்கு அது சுத்தமாக உதவாது. ஏன், நமது அரசியல் வாதிகள் கொண்டுவரும் பல திட்டங்களே இப்படியாக தான் இருக்கிறது.

vrlgod

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Interesting Posts From Viral God Instagram Account!

Interesting Posts From Viral God Instagram Account!
Subscribe Newsletter