படிப்பவர்களின் ரத்தத்தை குடிக்கும் ரத்தக்காட்டேரி!! - இது ஒரு உண்மைக் கதை!!

Posted By:
Subscribe to Boldsky

நான் எங்கும் இதுவரை தனியாக சென்றது கிடையாது யாரவது கூட வரவேண்டும் அப்பொழுது தான் செல்வேன் சமீபத்தில் நான் தனியாக சென்று ரத்தம் குடிக்கும் காட்டேரியிடம் மாட்டிக் கொண்டதன் விளைவு தான் இது

விடுமுறையை கழிப்பதற்கான நண்பர்களுடன் சேர்ந்து அட்வென்ச்சர் ட்ராவல் செய்யச் சென்ற ஊரில் தான் இந்த அனுபவம்.

பயங்கரமான காட்டில் இரண்டு நாட்கள் பயணம். அந்த பயங்கரமான காட்டில் சூரிய ஒளியே உள்ளே வராமல் ஓங்கி உயர்ந்த மரங்கள் தான் நிறைய இருந்தன. மனிதர்களின் காலடிப் படாத அந்த இடத்தில் வேர்களை பின்னிப் பிணைந்து வெளிப்புரமாகவே ஊடுருவியிருந்தது. பச்சை இலைகள், காய்ந்த சரகுகள் குவியலாய் கிடந்தது .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒற்றைக் கொம்பன் :

ஒற்றைக் கொம்பன் :

அவ்வப்போது கேட்கும் சில விலங்குகளின் சப்தங்கள் எங்களை பயமுறுத்த தான் செய்தது தூரத்தில் ஓடும் தண்ணீர் சப்தம் என்று , பறவைகளின் கீச்சிடும் குரல்கள் என்று அந்த காட்டில் எல்லாமே ரசிக்கும் படியாக இருந்தது.

அன்றைய தினம் எல்லாம் பார்த்து விட்டு திரும்பி பார்த்து விட்டு திரும்பும் பொழுது ஒற்றை கொம்புடன் ஒரு மிகப் பெரிய யானை எங்களை நோக்கி வந்தது அது வானை நோக்கி பிளிற எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள்

ஒன்றாய் இருந்தவர்கள் நாலாபக்கமும் சிதறி ஓட அந்த யானை என்னை துரத்த ஆரம்பித்தது.உயிர் பயத்தில் அங்கிருந்து சென்றால் போதும் என்கிற ஒரே எண்ணத்தில் நான் காட்டிலிருந்த ஒரு கட்டிடத்திற்குள் நுழைந்துவிட்டேன்.

உள்ளே செல்லச் செல்ல அது பெரிய பங்களா என்று விளங்கியது. என் நண்பர்கள் யாராவது வருகிறார்களா? அவர்கள் என்ன ஆனார்கள் என்கிற சந்தேகத்துடன் அந்த பெரிய பங்களாவின் வாசலில் உட்கார்ந்து இருந்தேன்

வீட்டின் உள்ளே :

வீட்டின் உள்ளே :

இவ்ளோ பெரிய வீட்டை யார் பராமரிக்கிறார்கள் யார் தான் உள்ளே இருகிறார்கள் அதுவும் இப்படியான ஒரு காட்டின் நடுவே என்று சந்தேகத்துடன் மெல்ல அந்த வீட்டின் பக்கம் திரும்பி அதனுடைய கதவை பார்த்தேன் கதவே மிகவும் பயங்கரமாக இருந்தது.

அந்த கதவருகில் சென்று தட்டலாம் என்று கை வைக்க கதவை போர்த்திய படி தூசி. ஏதோ ரத்த வாடையும் வீசியது. இதுவரை யாரும் வராத இடம் போல இருக்கிறது.

என்ன இது குடலை புரட்டுகிற நாத்தம் என்ற குழப்பத்துடன் அந்த கதவை லேசாக தள்ளி உள்ளே நுழைந்தேன்

உள்ளே பெரிய அரண்மனை போல இருந்தது உள்ளே யாரும் இல்லை என்று தான் நெனைக்கிறேன் எல்லா பொருட்களும் உபயோகிக்காமல் தூசி படர்ந்து இருந்தது.

பெரிய பெரிய அறைகள் மேலே தெரிந்த வானுயர்ந்த விளக்குகளும் என்னை பயமுறுத்தியது ஏதோ ஆர்வக் கோளாறாக உள்ளே நுழைந்தது தவறோ என்ற எண்ணம் ஒரு கணம் மின்னி மறைந்தது.

நான் உள்ளே செல்ல அங்கு ஒரு நாற்காலி நீளமான ஒரு போர்வையால் போர்த்தப்பட்டு இருந்தது. எல்லாம் தூசி படந்து பழைய பொருட்களாய் இருந்த நேரத்தில் அந்த போர்வை மட்டும் புதிதாக இருந்தது.

தூசி ஏதுமின்றி இருந்ததால் சந்தேகத்துடன் அருகில் செல்லலாமா வேண்டாமா என்று யோசித்த வேலையில் திடீரென்று கடிகார முள் ஒடுகிற சத்தம் கேட்டது.

Image Courtesy

ஆட்டுக் குட்டி :

ஆட்டுக் குட்டி :

அந்த அமைதியான இடத்தில திடீரென்று சப்தம் வந்தால் யார் தான் பயப்படாமல் இருப்பார்கள் நான் மீண்டும் அந்த நாற்காலி அருகே சென்றேன் அங்கு யாரோ ஒருவர் படுத்து இருக்கும் மாதிரி தான் எனக்கு தோன்றியது.

என் நெஞ்சம் படபட வென்று அடிக்க நான் மெல்ல ஒவ்வொரு அடியை எடுத்து வைத்தேன் சுவரில் எல்லாம் ரத்தம் சிந்திக் கிடந்தது நான் அந்த நாற்காலி அருகில் சென்று அந்த போர்த்தி இருந்த துணியை விளக்கினேன்.

அங்கே ஒரு கூடை இருந்தது அதனுள் ஒரு ஆடுகுட்டியின் தலையும் கடித்து குதறிய நிலையில் அதனுடைய உடலும் இருந்தது.

சத்தமாக அலறி விட்டேன். அந்த கூடையை ஒரு பக்கம் தூக்கி வீச அந்த கூடையில் இருந்து ரத்தம் சிந்தி ஆட்டின் தலை ஒரு மூலையில் சென்று விழுந்தது

அது வரையில் தைரியமாக இருந்த நான் இப்பொழுது கதிகலங்கி யானை இடம் இருந்து என் உயிரை காப்பற்றிக் கொள்ள நினைத்து இப்படி ஒரு அமானுஸ்ய வீட்டிற்குள் நுழைந்து விட்டேனே என்று ஒரு நொடி நான் என்னையே திட்டிக் கொண்டேன்.

சரி இனியும் ஒரு நொடி கூட தாமதிக்க கூடாது அப்படியே வெளியே சென்று விடலாம் என்று பின்னால் திரும்ப அங்கு பெரிய கோர முகத்தோடு ஒருவன் நின்று இருந்தான்.

Image Courtesy

பேயென்றால் இப்படித் தான் இருக்கும் :

பேயென்றால் இப்படித் தான் இருக்கும் :

கண்கள் இரண்டும் பிதுங்கி வெளியே வந்து இருந்தது அவனுடைய பற்கள் எல்லாம் நீளமாக இருந்தது அவனுடைய கன்னங்களில் இருந்து ரத்தம் ஓழுகும் கீறல்கள் இருந்தன.

நெற்றியில் மிகப்பெரிய தீக் காயம் அந்த உருவத்தை பார்த்த மாத்திரத்தில் எனக்கு பேச்சு வரவில்லை என் உயிர் இவனிடம் சிக்கி கொண்டது என்று பயத்தில் எனக்கு வியர்த்து கொட்டியது கால் இரண்டும் நடுங்கியது அவன் எந்த விதமான சத்தத்தையும் எழுப்ப வில்லை அவன் என்னை கடந்து அந்த நாற்காலி அருகில் சென்றான்

அந்த நாற்காலியில் கூடையை காணாமல் அவன் வானம் அதிர கத்தினான் நாலாபுறமும் கண்களை நோட்டமிட்டு மீண்டும் வீடே இடிந்து விழும் அளவுக்கு கத்தினான் நான் அச்சத்தில் கீழே உட்கார்ந்து அவனை பார்க்காமல் சுவர் பக்கமாக திரும்பி கொண்டேன்.

உதடுகள் துடிக்க கண்களை இறுக்க மூடிக்கொண்டேன்.இந்தப் பேய் என்னை சாப்பிட்டு விடுவானா என்பது தான் அப்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது.

Image Courtesy

பேய் அருகில் :

பேய் அருகில் :

அவன் அலறிக் கொண்டே தேடினான் நான் மெல்ல கண்களை திறந்து பார்த்தால் அந்த கூடை என் முன்னே கிடந்தது.நான் கண் மூடி என்ன நடக்கிறது என்பதை யூகிப்பதற்கு முன் அந்த பேய் என்னை தன் பக்கம் இழுத்தது.

அதன் கை உடும்பு பிடியாய் என் கைகளை பற்றி இருந்தது அதனை விலகி கொள்ள முடியவில்லை நான் அந்த பயத்தில் அப்படியே மயங்கி விழுந்து விட்டேன் அதற்கு பிறகு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

அது கடித்து குதறி வைத்து இருந்த அந்த ஆட்டுக்குட்டியை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான். மெல்ல மெல்ல சாப்பிடும் சத்தமும் லேசாக உறுமலும் கேட்டது. அந்த பேயின் மூச்சு விடுவதே பயங்கர கோபத்துடன் மூச்சு விடுவது போல இருந்தது. எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்தான்.

அதற்குள் சிதறி ஓடிய என் நண்பர்கள் ஒன்று சேர்ந்து என்னை தேட ஆரம்பித்து இருந்தார்கள் அனைவரும் மீண்டும் காட்டில் வர யோசிக்கவே சிலர் மட்டும் கையில் டார்ச் எடுத்துக் கொண்டு கிளம்பினர் .

நான் தொலைந்த தகவல் வீட்டிற்கு சொல்லப்பட்டது. நண்பர்களை திட்டித் தீர்த்து விட்டாள். அந்த இரவிலும் விளக்கு ஏற்றி ஏதோ மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தாள்.

Image Courtesy

காட்டிற்கு வெளியே :

காட்டிற்கு வெளியே :

யானைக்கு பயந்து ஓடிய நான் காட்டை விட்டு வெளியே வந்திருப்பேன் என்று முழுமையாக நம்பினார்கள் . என்னைத் தேடி வந்தவர்கள் காட்டிற்குள் நுழையாமல் காட்டின் எல்லையில் இருக்கும் மரங்களுக்கு அருகிலேயே நின்று கொண்டார்கள்.

டார்ச் அடித்து சுற்றும் முற்றும் தேடினார்கள். என் பெயரை இரண்டு முறை கத்த, தூரத்தில் யாரோ சைக்கிளை அழுத்த முடியாமல் அழுத்திக் கொண்டு வருவது போல க்ரீச் க்ரீச் என்ற ஒலி கேட்டது.

சட்டேன்று நால்வரும் சைக்களை நோக்கி டார்ச் அடித்தனர் ஆனால் யார் கண்ணிலும் அந்த சைக்கிளை ஓட்டி வந்தவர் சிக்கவில்லை.

உள்ளே இருந்த நான் மெல்ல கண் விழித்துப் பார்த்தேன் அந்த பேய் இல்லை நான் மட்டும் தான் தனியாக இருந்தேன். நான் பயந்து கொண்டே அந்த அறையை விட்டு வெளியேற யாரோ பயங்கரமாக சிரிப்பது கேட்டது.

நான் மூச்சிறைக்க மெல்ல சுவற்றை பிடித்துக் கொண்டு நகர்ந்தேன் என்னை தேடி சென்றவர்கள் அந்த இருட்டில் ஒன்றுமே தெரியாமல் எங்கு சென்று தேடுவது என்று கூட புரியாது தவித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த காட்டில் கேட்கும் சின்ன சின்ன சப்தங்கள் கூட அவர்களுக்கு நானாக இருக்குமோ என்ற எண்ணத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.

Image Courtesy

 நண்பர்களின் முடிவு ஆரம்பம் :

நண்பர்களின் முடிவு ஆரம்பம் :

அவர்களுக்கு நான் கிடைப்பேன் என்ற நம்பிக்கையே இல்லை இதை எப்படி என் அம்மாவிடம் சொல்வது என்று புரியாமல் அங்கேயே நின்று இருந்தனர்.அப்பொழுது அங்கு நின்று இருந்த ஒருவனின் காலில் ஏதோ செய்ய அவன் காலை தூக்கி பார்க்க முயற்சிக்க அவன் மட்டும் அல்ல அங்கு இருந்தவர்கள் அதிர்ந்து விட்டார்கள்.

உள்ளே இருந்த நான் மெல்ல நடந்து நடு அறைக்கு வந்து விட்டேன் அந்த ஒரு அறையே ரொம்ப விசாலமாக இருந்தது இவ்வளவு நேரம் எரிந்து கொண்டு இருந்த விளக்கும் அணைந்து விட்டது.

பங்களா முழுக்க இப்பொழுது கும்மிருட்டில் மூழ்கி கிடந்தது பயத்தின் உச்சத்தில் இருந்தேன். என் இறப்பு நெருங்கி விட்டதை என்னால் நன்றாக உணற முடிந்தது. மெல்ல கைகளை முன்னே நீட்டிக் கொண்டே சென்றேன்.அப்பொழுது அங்கு இருந்த மாடிப்படியில் இருந்து ஏதோ உருளும் சப்தம் கேட்டது. ஏதாவது ஒரு பாத்திரமாக இருக்க வேண்டும். நான் அதை கேட்டவுடன் அங்கேயே நின்று விட்டேன்.

மாடிப்படியில் இருந்து உருண்ட அந்த பாத்திரம் என் காலடியில் வந்து விழுந்தது நான் அலறி என் காலை உதற உள்ளிருந்து ஏதோ சிதறுவது கேட்டது. நான் அதை எடுக்காமல் இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னேறினேன்.

என்னை யாரோ பின் தொடர்வது போல இருந்தது பின்னால் திரும்பி பார்த்தாலும் எந்த விதமான பயனும் இல்லை. மெல்ல ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்க கொலுசு சத்தம் கேட்டது நான் நிற்க அந்த சத்தமும் நின்றது நான் வேகமாக காலை தட்டினால் அதுவும் தட்டியது.

Image Courtesy

என் காலில் கொழுசு இருக்கிறதா? :

என் காலில் கொழுசு இருக்கிறதா? :

நான் கொலுசு போடவில்லையே அப்பறம் எப்படி சத்தம் என்று யோசித்தேன் ஒரு வேலை போட்டு இருப்பேனோ என்று சந்தேகம் வந்தவளை காலை தடவி பார்க்க அங்கு கொலுசு இல்லை.

என் கால் அசைவுகளை போலவே அதுவும் செய்கிறது என்றால் அது என்னை பக்கத்தில் இருந்து தான் கவனித்து கொண்டு இருக்க வேண்டும் இந்த இருட்டில் ஒன்றுமே தெரியாது அதற்கு மட்டும் எப்படி நான் தெரிகிறேன்.

சத்தம் போடக் கூட முடியாமல் அதிர்ச்சியில் உறைந்திருந்தார்கள் என் நண்பர்கள். கொத்தாக முடி அவனின் காலைச் சுற்றி இருந்தது, எடுத்து விட்றா என்று எச்சரிக்க அவன் தன் காலை சற்று மேலே உயர்த்தினான்.

ஒற்றை காலில் நின்று இருந்த அவன் நிற்க முடியாமல் ஆடிக் கொண்டே இருந்தான் பிறகு சில நொடிகளில் அவனின் பாலன்ஸ் தவறி உருண்டு கிழே விழந்தான் அவனை காப்பாற்றுகிறோம் என்று மற்ற மூவரும் அடித்து பிடித்து கிழே குனிய எல்லோருமாய் விழுந்தார்கள்

இவ்வளவு நாட்கள் அந்த குழி எங்கே இருந்தது என்றே தெரியவில்லை அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு இரண்டடி தள்ளி பெரிய குழி விழுந்தது. அது ஒரு குளமாக இருந்திருக்க வேண்டும் அது முழுக்க சகதியாய் இருந்தது. நால்வரும் அதில் உருண்டு விழுந்தார்கள்.

உள்ளேயிழுக்கும் பேய் :

உள்ளேயிழுக்கும் பேய் :

மெல்ல எழ முயற்சித்தும் அவர்களால் முடியவில்லை சிரமப்பட்டு மேலே எழுந்து வந்தால் ஏதோ ஒன்று அவர்களை மீண்டும் அதற்குள்ளே இழுத்தது .பல மணி நேரம் முயற்சித்தும் முடியவில்லை கடைசியில் மெல்ல மெல்ல அவர்களின் உடல் அந்த குழிக்குள்ளே புதைய ஆரம்பித்தது.

நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை ஏதோ ஒன்று என்னை வழி நடத்திக் கொண்டு சென்றது. வெளியே செல்ல வேண்டும் என்று நினைத்த நான் இருட்டில் இதுவரை வீட்டிற்குள்ளேயே சுற்றிக் கொண்டு இருந்திருக்கிறேன்.

கைகளில் என்ன சிக்குகிறது, என்று தடவித் தடவி பேய் எங்கே இருக்கிறது என்ற பயத்தில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு நடந்து கொண்டேயிருந்தேன். கடைசியில் ஒரு கதவு என்னை தடுத்தது நான் மெல்ல அதை தள்ள அது மொட்டை மாடி கதவு.

அதை திறந்து சென்றால் அந்த வீட்டின் அளவிற்கு பெரிய மொட்டை மாடி நான் கொஞ்சம் பயத்துடன் சுற்றியும் பார்த்தேன் நிலவொளியில் அந்த இடம் கொஞ்சம் ரம்யமாக இருந்தது

திடீரென்று அந்த மொட்டை மாடியின் பக்கவாட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது நான் ஓடி சென்று பார்க்க என்னை தேடி வந்த நண்பர்கள் புதை குழியில் சிக்கி அலறிக் கொண்டு இருந்தார்கள் என்னைக் காப்பாற்ற வந்திருக்கிறார்கள்.

வந்த இடத்தில் இப்படி மாட்டியிருக்கிறார்கள் என்பது புரிந்தது. என்ன நடக்கிறது என்ற புரிந்து கொள்ளவதற்கு முன்பே நண்பர்களின் அலறல் சத்தம் நின்று போனது.

Image Courtesy

பின் தொடரும் நிழல் :

பின் தொடரும் நிழல் :

அந்த நேரத்தில் திடீரென்று தூரத்தில் உடுக்கை சத்தம் கேக்க நான் பயத்துடன் சட்டென்று திரும்பினேன் பின்னால் ஒரு அமானுசயமாக ஒரு உருவம் வந்து கொண்டு இருந்தது.

ஏதோ ஒரு நிழல் போல அசைந்து ஆடி வந்து கொண்டு இருந்தது. அது வர வர நான் மெல்ல பின்னால் நகர்ந்தேன். நான் பின்னால் செல்ல அதும் என்னை நோக்கி வந்து கொண்டு இருந்தது.

கடைசியில் மொட்டை மாடியின் சுற்று சுவர் அருகில் வந்துவிட்டேன். அந்த உருவத்தையே பார்த்தேன்.அது கருப்பான ஒரு உருவமாய் இருந்தது சரியாக அதனுடைய உருவம் புலப்படவில்லை

கண்கள் கலங்க செய்வதறியாது அதனையே பார்த்துக் கொண்டு இருந்தேன் அது என்னை நெருங்கி வந்து கொண்டு இருந்தது மெல்ல அசைந்தாடிய உருவம் என்னக்கு மிக நெருக்கமாக வந்து விட்டது.

இப்போது அது என்னுளே நுழைந்து விட்டது அது நுழைந்த உடனே என்னுளே ஏதோ ஒரு அதிர்வு சட்டேன்று வந்து சென்றது.

மின்னல் தாக்கிய உணர்வு நான் இப்போது சம்மந்தம் இல்லாமல் பலமாக சிரித்தேன் சுவற்றில் பலமாக இரண்டு மூன்று முறை மோதிக் கொண்டேன் ரத்தம் வழிய அந்த ரத்தத்தை பிடித்து உறிஞ்சி குடித்தேன்.

இதுவரை இப்படி சுவையை நான் குடித்ததில்லை இவ்வளவு நாளாய் அதை குடிக்காமல் விட்டு விட்டோமே என்று யோசித்துக் கொண்டே என்னுடைய ரத்தத்தை நானே குடித்தேன் குடிக்க குடிக்க அது ஒரு வகையான மயக்கத்தை கொடுத்தது.

Image Courtesy

 ரத்த தாகம் :

ரத்த தாகம் :

சிறிது சிறிதாக என்னுடைய ரத்தத்தை குடித்து விட்டேன் இன்னும் என் ரத்த தாகம் அடங்க வில்லை இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று ஆசை அடங்காமல் சுற்றி முற்றி பார்க்க என் நண்பர்கள் புதைந்த இடம் தெரிந்தது.

இன்று நிறைய ரத்தம் குடிக்கப் போகிறேன் என்று சிரித்துக் கொண்டே மேலே இருந்து கிழே குதித்தேன். புழுதி மணல் கிளம்ப அந்த புதை குழியை நோக்கி ஓடினேன் அவர்களை தோண்டி எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன் மெல்ல அவர்களின் ரத்தத்தை சுவைக்க ஆரம்பித்தேன்.

நான் ரோட்டில் நடந்து செல்ல அந்து நடு ஜாமத்தில் யாருமே இல்லை எல்லோரும் வீட்டை பூட்டிக் கொண்டு உள்ளே தூங்கி கொண்டு இருந்தார்கள். ஒரு வீட்டில் மட்டும் விளக்கு பளீச் என்று எரிந்து கொண்டிருந்தது.

வாசலில் ஒரு பெண்மணி அழுது கொண்டே இருந்தாள். ஆமாம் அவள் என் அம்மா எனக்காக தான் காத்து இருக்கிறாள் என்பது புரிந்தது என்னை பார்த்ததும் சந்தோசமாக சிரித்துக் கொண்டே வந்தாள்.

என்னை நோக்கி வந்தவுடன் நான் அவளின் கையை பிடித்து இழுத்து அவளின் கழுத்தை கடித்தேன் நான் கடிப்பேன் என்று தெரியாமல் என்னை ஆரத் தழுவ வந்தவள் நான் கடித்தவுடன் அலறினாள்.

நான் விடாமல் அவளை கடித்து அவளின் ரத்தம் தெறிக்க நான் குடித்துக் கொண்டே இருந்தேன்.

என்னைப் நினைத்து பயந்தே பலரும் அந்த ஊரை விட்டு காலி செய்துவிட்டார்கள். ஆரம்பத்தில் கிடைத்தது போல இப்போதெல்லாம் ரத்தம் கிடைப்பதில்லை. அதற்காக ஒரு யுக்தியை கண்டுபிடித்தேன். என்னுடைய கதையை யார் படிக்கிறார்களோ அவர்களின் ரத்தமும் எனக்குத் தான் சொந்தம்.

Image Courtesy

சிக்கிய ஆராய்ச்சியாளர் :

சிக்கிய ஆராய்ச்சியாளர் :

இதனை படித்துக் கொண்டு இருந்த ஒரு ஆராய்ச்சியாளர் சற்றே பயத்துடன் தான் அணிந்து இருந்த கண் கண்ணாடியை கலட்ட கொஞ்சம் கலக்கத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தார் அவரின் அறைக்குள்ளே தான் நான் இருந்தேன்.

ஆனால் அவரின் கண்ணனுக்கு நான் தெரிய வில்லை. அவரின் அருகே சென்று அவரின் ரத்தத்தை குடிக்க ஆரம்பித்தேன் அவர் அலறித்துடித்தார். என் வேலையில் நான் கவனமாக இருந்தேன்.

இறந்து போன அவர் உடலில் இப்பொழுது ஒரு துளி இரத்தம் கூட இல்லை.அவரை அப்படியே விட்டுவிட்டு அடுத்ததாக யார் இந்த கதையை படிப்பார்கள்.... கேட்பார்கள் என்று காத்து கொண்டு இருக்கிறேன் .

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse
English summary

Horror Story about blood vampire

Horror Story about blood vampire
Story first published: Tuesday, September 12, 2017, 13:46 [IST]
Subscribe Newsletter