பல் மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்ற பின் ஒரு பகுதி முகத்தையே இழந்த பெண்!

Posted By:
Subscribe to Boldsky

நம் உடலில் அன்றாட்ம் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். எப்போதும் ஒருவர் தனது உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் சில மாற்றங்கள் உடலின் மோசமான நிலையைக் கூட குறிக்கும்.

அப்படி தான், ஒரு பெண் பல் மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்று வந்த பின்பு, அப்பெண்ணின் ஒரு பகுதி முகமே பாழாகிவிட்டது. இதற்கு காரணம் அப்பெண்ணைத் தாக்கிய கொடிய சதையை சாப்பிடும் நோய்த்தொற்று தான். இந்த பெண்ணிற்கு இப்படி ஒரு நோய்த்தொற்று ஏற்பட காரணம் என்னவென்று தொடர்ந்து படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பற்களை பிரித்தெடுத்தல்

பற்களை பிரித்தெடுத்தல்

இந்த 18 வயது பெண்ணின் பெயர் சுத் ரெட். இவர் தனது பற்களைப் பிரித்தெடுப்பதற்கு பல் மருத்துவரிடம் சென்றார் மற்றும் இந்த சிகிச்சை முறை மிகவும் சாதாரணமானது தான்.

சைனஸ் தொற்று

சைனஸ் தொற்று

இந்த பெண்ணிற்கு சில வாரங்களுக்கு முன்பு சைனஸ் தொற்று ஏற்பட்டது. அதைத் தவிர, இந்த பெண் மிகவும் ஆரோக்கியமாகத் தான் இருந்தாள். ஆனால் பல் மருத்துவரிடம் சென்று பற்களைப் பிடுங்கிய பின், இந்த பெண்ணின் ஒரு பகுதி முகம் அப்படியே பாழாக ஆரம்பித்தது.

சதையை சாப்பிடும் தொற்று

சதையை சாப்பிடும் தொற்று

இந்த பெண் இறக்க செய்யும் திசுப்படல அழற்சி என்னும் சதையை சாப்பிடும் கொடிய நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் இப்படி ஒரு அழற்சி வருவதற்கு காரணம், சைனஸ் தொற்றை உண்டாக்கிய பாக்டீரியாக்கள் பல்லை அகற்றிய இடத்தைத் தாக்கியது என தெரிய வந்தது.

சரும திசு அழிவு

சரும திசு அழிவு

பொதுவாக இம்மாதிரியான நோய்த்தொற்று மிகவும் அரிதாகவே தாக்கும். இதை ஆரம்பத்திலேயே கவனித்தால், சரியான ஆன்டி-பயாடிக்குகள் மற்றும் சிகிச்சைகள் மூலம், தொற்றுகள் பரவி, சரும திசுக்கள் அழிக்கப்படுவதை முழுமையாகத் தடுக்கலாம்.

ஒரு பகுதி முகமே போய்விட்டது

ஒரு பகுதி முகமே போய்விட்டது

இந்த தொற்றால், இந்த இளம் வயது பெண் தன் ஒரு பகுதி முகத்தையே இழந்துவிட்டாள். ஆனால் ஜெர்மன் மருத்துவ குழுவினர், இப்பெண்ணை சோதித்து, முக சீரமைப்பு அறுவை சிகிச்சையை செய்து வருகின்றனர். தற்போது அப்பெண்ணிற்கு சிகிச்சை போய்க் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சிகிச்சையின் போது, அப்பெண் சற்று கடுமையான வலியை சந்திக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Her Face Ruined After A Dentist’s Visit!

This is the story of a girl whose face was ruined after she visited a dentist for her tooth treatment. Check out on what happened to her…
Story first published: Monday, March 13, 2017, 14:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter