For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக மக்களின் இன்றைய நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தும் 9 விளக்க படங்கள்!

நமக்கு தெரியாமேலே நாம் எப்படி எல்லாம் அழிந்து வருகிறோம் என்பத வெட்டவெளிச்சமாக காண்பிக்கும் 9 விளக்கப்படங்கள் இவை...

|

எந்த ஒரு விலங்கும் தன் இனத்தையே அழிக்க முயல்வதில்லை. எந்த ஒரு விலங்கும் தன் இனத்தையே துன்புறுத்தி, எஜமானனாகி பிறரை அடிமைபடுத்திக் கொள்ள, ஏமாற்றி செல்வம் சேமிக்க எண்ணுவதில்லை. முக்கியாமாக நம்பிக்கை துரோகம் செய்து முட்டாள்கள் ஆக்குவதில்லை, மனிதர்களை தவிர.

மனித இனம் மட்டுமே பிற உயிர் இனங்களை அழிப்பது மட்டுமின்றி, அத்துடன் சேர்த்து தன் இனத்தையும், தனது வாழ்விடத்தையும் சேர்த்து அழித்துக்கொண்டு வருகிறது.

நமக்கு தெரியாமேலே நாம் எப்படி எல்லாம் அழிந்து வருகிறோம் என்பதை வெட்டவெளிச்சமாக காண்பிக்கும் 9 விளக்கப்படங்கள் இவை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#உணவு

#உணவு

நீ என்ன சாப்பிட வேண்டும் என்பதை கூட கார்பரேட் நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. இதை நீங்கள் மறுக்க முடியாது. நிலக்கடலையை வறுத்து விற்று வந்த போது வாங்கி சாப்பிட்ட போது, அது ஸ்டேட்ஸ்-க்கு குறைவாகப்பட்டது.

அதுவே இன்று பெரும் நிறுவனங்கள் கலர் காகிதத்தில் அடைத்து எனர்ஜி பார் என்று விற்று அதிக விலைக் கொடுத்து நம்மை வாங்க வைத்துவிட்டது. நம் மண்ணில் விளைந்ததை வாங்கி நம்மிடமே அதிக லாபத்திற்கு விற்கும் தந்திரம் தான் இது.

#உரிமை

#உரிமை

உலக நாடுகளை மக்களின் பெரும் உரிமை தங்கள் குரலை, கருத்தை சுதந்திரமாக பதிவு செய்வது. அதை இன்று நம்மால் செய்ய முடிகிறதா? வாட்ஸபில் ஒரு செய்தி அனுப்பினால் கூட, அந்த அட்மினை கைது செய்து சிறையில் அடைக்கும் படியான சட்டங்கள் வந்துவிட்டன. கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவது, அடிமைப்படுத்தப்படுவதன் முதல் படி.

#உணர்வு

#உணர்வு

ஆண், பெண் என்ற பாலின வேறுபாடு இச்சை என்ற உணர்வில் மூழ்கி திளைக்கும் சூழல் அதிகரித்து வருகிறது. உலகின் பல சிறந்த கலாச்சாரங்கள் மாடர்ன், அதிநவீனம் என்ற சொற்களால் அழிக்கப்பட்டு வருகின்றன.

பெண் என்பவள் உணர்வு ரீதியாக வெறும் உணவாக மட்டும் காணும் போக்கு மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. வளரும் தலைமுறையை இது பெரிதாக பாதித்து வருகிறது.

#விளம்பரங்கள்

#விளம்பரங்கள்

நாம் அனைவரும் இன்று ஒரு பிராண்டட் உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். நாம் அணியும் தொப்பியில் இருந்து, சாக்ஸ், ஜட்டி, பேன்ட் ஷர்ட், போன், பேனா என அனைத்திலும் ஒரு பிராண்ட் பெயர் இருக்க வேண்டும். அந்த பிராண்ட் பெயர் தான் ஒருவரது தரத்தை முடிவு செய்கிறது.

#மதம்

#மதம்

நாகரீகம் மாறினாலும், நவீனங்கள் பிறந்தாலும், தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் நமது உலகில் மதம் சார்ந்து மக்களை ஏமாற்றும் செயல்கள் ஒழியவே இல்லை. யானையின் மத்தால் வரும் விளைவுகளை காட்டிலும், மனிதரின் மதத்தால் ஏற்படும் விளைவுகள் மிகவும் கொடூரமானவையாக இருக்கின்றன.

#சமூக தளங்கள்

#சமூக தளங்கள்

லைக்ஸ், கமெண்ட்ஸ், ஷேர்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஸ்நாப்சாட் என சமூக தளங்களில் தான் நாம் குடிபுகுந்து வாழ்ந்து வருகிறோம். இது சமூகத்தின் பெரிய தலைகுனிவு என கூறுவது மிகையானது அல்ல.

இதனால் ஒருவர் எளிதாக உச்சம் கண்டுவிடுகிறார், அதே சமயத்தில் ஒருவர் எளிதாக தாழ்த்தப்பட்டு விடுகிறார். அனைத்திற்கும் மேல், ஓர் நாளின் முடிவில் இந்த சமூக தளங்கள் மன அழுத்தத்தை மட்டுமே விட்டு வைக்கும் கருவியாக தான் இருக்கின்றன.

#போர்

#போர்

இரு நாடுகளின் மத்தியில், இரு அரசுகளின் மத்தியில் உருவாகும் கருத்து வேறுபாடு, வர்த்தக கொள்கைகள் பிரச்சனை காரணமாக எழும் போர்களால் அந்த போருக்கு காரணமானவர்கள் துளியும் பாதிக்கப்படுவதில்லை. முற்றிலும் அந்த தாக்கத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அந்நாட்டின் குடிமக்கள் மட்டுமே.

#பணம்

#பணம்

ஒருவரது வாயில் இருந்து வரும் சொல்லுக்கு மதிப்பு இருக்க வேண்டும் என்பார்கள். அது அவர் மீதான நற்பதிப்பாக இருக்க வேண்டும். ஆனால், இன்று ஒவ்வொரு வார்த்தைக்கும் பணம் தான் மதிப்பாக இருக்கிறது.

சந்தையில் ஒரு பொருளை வியாபாரப்படுத்த, அதை பயன்படுத்தாத ஒரு பிரபலம், அதன் சிறப்புகள் பற்றி கூறி பேசுகிறார், வெறும் பணத்திற்காக. இதை சாமானிய மக்களும் செய்கிறார்கள்., நம்புகிறார்கள்.

#மரணம்

#மரணம்

உயிர் காக்கும் என நாம் நம்பி விழுங்கும் மருந்துகள் தான் இன்று, நமக்கு இவ்வளவு ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாக முக்கிய காரணம். முன்பு, நோய்க்கு மருந்துகள் கண்டுப்பிடித்தனர். ஆனால், இன்று மருந்தை உருவாக்கிவிட்டு, அதை வர்த்தகம் செய்ய நோய்களை கண்டுப்பிடிகிறார்கள்.

All Image Courtesy:Luis Quiles Artworks

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Disturbing Illustrations Perfectly Portrays Current World!

Disturbing Illustrations Perfectly Portrays Current World!
Desktop Bottom Promotion