ஒரே மாதத்தில் 4 பேர், மொத்தம் 11 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்மணி!

Posted By:
Subscribe to Boldsky

இதுவரை நாம் செய்திகளில் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய ஆண்களை கண்டிருப்போம். ஆனால், தாய்லாந்தை சேர்ந்த ஒரு பெண் அவர்களது பாரம்பரிய வழக்கத்தை கையாண்டு 11 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.

அதிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 4 பேரை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 11 பேரை ஏமாற்ற இந்த பலே கில்லாடி பெண் ஃபேஸ்புக்கை ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தியுள்ளார். இதன் மூலமாக நட்பாகி, அவர்களுடன் உறவு கொண்டு, திருமணம் செய்து பணம்பறித்து ஏமாற்றியுள்ளார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
11 பேர்!

11 பேர்!

தாய்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த இரண்டு வருடங்களில் 11 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். இதில் அதிகபட்சமாக ஒரே மாதத்தில் 4 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.

Image Credit: ตีแผ่ / Facebook

தாய்லாந்து பாரம்பரியம்!

தாய்லாந்து பாரம்பரியம்!

தாய்லாந்து நாட்டின் பாரம்பரியத்தில் மணமகன் குடும்பம், மணமகள் குடும்பத்திற்கு டவுரியாக குறிப்பிட்ட பணம் கொடுக்க வேண்டும். அப்படி, இந்த பெண்மணி 11 ஆண்களிடம் இருந்து ஆறாயிரம் டாலர்களில் இருந்து முப்பதாயிரம் டாலர்கள் வரை ஏமாற்றி பணம் பறித்துள்ளார்.

Image Credit: ตีแผ่ / Facebook

தப்பித்து ஓட்டம்!

தப்பித்து ஓட்டம்!

ஒவ்வொரு திருமணத்திற்கு பிறகும், எனது குடும்ப தொழிலில் பிரச்சனை, ஜாதகத்தில் கோளாறு என பல்வேறு சாக்குப்போக்கு சொல்லி தப்பித்து ஓடியுள்ளார் இந்த பலே கில்லாடி பெண்மணி.

Image Credit: ตีแผ่ / Facebook

ஃபேஸ்புக்கில் மாட்டினார்!

ஃபேஸ்புக்கில் மாட்டினார்!

இந்த பெண் ஒவ்வொரு முறையும் ஃபேஸ்புக்கில் தனது படங்களை பதிவு செய்து தான் ஆண்களை மயக்கியுள்ளார். முதலில் நட்பாக பழகி, செக்ஸ் வைத்துக் கொண்டு, பிறகு திருமணம் செய்து ஏமாற்றி வந்துள்ளார். அதே ஃபேஸ்புக் பதிவுகள் மூலமாகவே இவர் மாட்டியிருக்கிறார்.

Image Credit: ตีแผ่ / Facebook

11ல் ஒருவர்!

11ல் ஒருவர்!

பிரசார்ன் தியாமியம் எனும் ஒருவர், இந்த பெண்மணியிடம் 2015ல் முகநூல் மூலமாக நட்பு ஏற்பட்டு பழகி, திருமணம் செய்து ஏமார்ந்ததை ஊடகத்தில் கூறியுள்ளார்.

நட்பாகி ஒன்பதாவது மாதத்தில், அந்த பெண்மணி கர்ப்பமாகியுள்ளார். அதற்கு பிறகே திருமணம் நடந்துள்ளது. அந்நாட்டின் சட்டத்தின் படி, மணமகள் வீட்டுக்கு ஆறாயிரம் டாலர்கள் மணமகன் வீட்டார் சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த பெண்மணி மாயமாகியுள்ளார்.

Image Credit: ตีแผ่ / Facebook

அதிகபட்சமாக...

அதிகபட்சமாக...

பிரத் பியூங்சுக் எனும் நபர் அதிகபட்சமாக இந்த பெண்மணியிடம் முப்பதாயிரம் டாலர்கள் ஏமார்ந்து போயுள்ளார். இவர் ஒரு டாக்ஸி ஓட்டுனர் ஆவார்.

தன்னை திருமணம் செய்வதற்கு முன்னர் எங்கள் குடும்ப தொழிலான பழ வியாபாரத்தில் நீ சேர வேண்டும் என கூறி இவ்வளவு பெரிய தொகையை ஏமாற்றியுள்ளார் அந்த பெண்.

Image Credit: ตีแผ่ / Facebook

போலீசில் பிடிபட்டார்!

போலீசில் பிடிபட்டார்!

சென்ற வாரம் இவர் ஏமாற்றவிருந்த 12 வது நபர் மூலமாக, இந்த பெண்மணி போலீஸில் சிக்கினார். ஏறத்தாழ அந்த 11 ஆண்களிடம் இருந்து 90 ஆயிரம் டாலர்கள் இவர் ஏமாற்றியுள்ளார் என்பது விசாரணையின் முடிவில் தெரியவந்தது.

போலீஸ் அந்த பெண்ணின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தி வருகிறது.

Image Credit: ตีแผ่ / Facebook

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

11 Thai men, one by one, married the same woman who then allegedly vanished!

11 Thai men, one by one, married the same woman who then allegedly vanished — with their money
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more