பிணங்களை வைத்து மனிதர்கள் செய்த அசாதாரணமான செயல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

மரணம் ஒருவரை எப்படி வேண்டுமானாலும் அணுகலாம். அது இயற்கையாக விபத்தாக, நோய்வாய்ப்பட்டு அல்லது சூழ்ச்சியின் காரணமாக கொலை செய்யப்பட்டு ஒருவர் எப்படி வேண்டுமானாலும் இறக்கலாம்.

ஆனால், இறந்த பிறகு ஒருவரை அடக்கம் செய்வோம் அல்லது தகனம் செய்வோம். இது தான் உலகில் கடைப்பிடித்து வரப்படும் இரண்டு விஷயங்கள். ஆனால், இது தவற இறந்த ஒரு நபரின் உடலை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்துவார்கள் என உங்களுக்கு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொதுவாக!

பொதுவாக!

பொதுவாக இறந்த உடல்களை மருத்துவ கல்லூரிகள் சேமித்து வைத்து, மாணவர்கள் அறுத்து உட்பாகங்களின் செயல்பாடு குறித்து அறிந்துக் கொள்ள பயன்படுத்துவார்கள். இது கல்விக்கு உதவும் வழியாக இருக்கிறது.

ஆனால், சில விசித்திரமான விஷயங்களுக்கும் கூட இறந்தவர்களின் உடல்கள் பயன்படுத்தப்படுகிறது.

பிளாஸ்டினைஷேஷன்!

பிளாஸ்டினைஷேஷன்!

இது இறந்த உடலை பதப்படுத்தும் முறை ஆகும். தண்ணீர் மற்றும் கொழுப்பை, பிளாஸ்டிக் மற்றும் ஃபைபர் கொண்டு மாற்றுவார்கள். இது உடலை கெட்டுப்போகாமல் பார்த்துக் கொள்ளும். மேலும், உடலை காற்று புகாத ஒரு இடத்தில் நீண்ட காலம் வைத்துவிடுவார்கள்.

ஆணுறுப்பை பதப்படுத்தி வைத்த ஆண்!

ஆணுறுப்பை பதப்படுத்தி வைத்த ஆண்!

ரஸ்புடின் எனும் ரஷ்ய விவசாயி மரணமடைந்த பிறகு, அவரது வீட்டு பணியாள் அவரது ஆணுறுப்பை அறுத்து, அவரது 17 வயது மகளிடம் கொடுத்துவிட்டார். அந்த மகள் அதை பாரிஸ்க்கு எடுத்து சென்று ஐஸ் கொண்டு பதப்படுத்தி வைத்தார். இதை ரஸ்புடின்-ன் ரசிகர்கள் மற்றும் பின்பற்றுபவர்கள தொழுது வந்ததாக கூறப்படுகிறது.

பவுடர்டு மம்மீஸ்!

பவுடர்டு மம்மீஸ்!

மருத்துவ பயன்பாட்டுக்காக பதப்படுத்தி வைக்கப்பட்ட இறந்த உடல்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது இந்த பவுடர். இதை மம்மியா (Mummia) என கூறுகின்றனர். இந்த பவுடரை கலந்து உட்கொண்டால் மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் வலி குறையும் என நம்புகின்றனர்.

மனித மரபணு மரம்!

மனித மரபணு மரம்!

மனித மரபணு மரம் (Human DNA Trees) என்பதை கேட்க வினோதமாக இருந்தாலும் இது உண்மை தான். ஒரு கம்பெனி பிணத்தை அடக்கம் செய்வதில் ஒரு தனித்துவத்தை கொண்டு வந்தது. மரபணுவை மரத்தில் (மரத்தை பாதிக்காத வண்ணம்) உட்செலுத்தி வளர்ப்பது.

மம்மி!

மம்மி!

எகிப்தில் தான் மம்மிக்கள் அதிகம். இறந்தவர் மீது கொண்ட பேரன்பினால், அவரை பிரிய மனம் இல்லாமல் மம்மியாக பதப்படுத்தி வைத்துவிடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bizarre Things People Did With Dead Bodies In The Past

Bizarre Things People Did With Dead Bodies In The Past
Subscribe Newsletter