Latest Updates
-
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
நீட்'டான, நீட்டாலான கொலை - நாம் மறக்க கூடாத 5 விஷயங்கள்!
நீட் காரணத்தை தாண்டி மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமாக அமைந்தவை.
நீட் எதற்காக கொண்டு வரப்பட்டது. திறமை உள்ளவர் மட்டும் மருத்துவர் ஆக வேண்டும் என்ற காரணம் முன்னிறுத்தி கொண்டு வரப்பட்ட தேர்வு தான் நீட்.
அப்போ அனிதா திறமையானவர் இல்லையா? மாநில தேர்வில் 1176/1200; 196.5 கட் ஆப். இதற்கு பெயர் திறமை இல்லையா?அனிதாவின் மரணத்திற்கு நீட் காரணமல்ல, அரசு தான். அப்டேட் இல்லாத தமிழக பாடத்திட்டங்கள் தான் முதல் காரணம்.

நீதிமன்றத்தின் நறுக் கேள்வி!
10 ஆண்டுகளாக பாடத்திட்டத்தை மாற்றாமல், நீட் தேர்வை ரத்து செய்ய கூறுவது சரியான காரணமாக இல்லை என தமிழக அரசின் முகத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டது நீதிமன்றம்.
சரிதானே! கல்வி துறை அமைச்சர், மாவட்டத்திற்கு ஒரு கல்வியியல் அலுவலகம், அதில் முதன்மை அதிகாரிகள் முதல் கடைநிலை அதிகாரிகள் வரை இவ்வளவு வருடம் பாடத்திட்டத்தை மேம்படுத்தாமல் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை...
இந்தியா முழுக்க ஒரே தேர்வு முறையை நடைமுறைப்படுத்த தெரிந்த மத்திய மைனர் குஞ்சுகளுக்கு... நாடு முழுதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வந்த பிறகு அதை நெறிமுறைப்படுத்த வேண்டும் என்பது ஏன் தெரியவில்லை....?

சமச்சீரின் முதல் பலி?
சமச்சீர் கல்வி என்பது அனைவருக்கும் பொதுவான கல்வியாக இருக்கிறதே தவிர தரமான கல்வியாக இல்லை. நீட் தேர்வில் தேர்வு பெறும் அளவிற்கு நமது சமச்சீர் பாடத்திட்டம் சிறந்து விளங்குகிறதா? என்றால் அதுவும் இல்லை.

ஸ்டேட் ரேங்க்!
சமச்சீர் கல்வியில் வருகைக்கு முன்னர் ஸ்டேட் ரேங்க் மூன்று பேர் தான் வாங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று? முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பட்டியலில் நூறு பேர் இருக்கிறார்கள்.
இது, மாணவர்களின் திறன் மேம்பட்டதன் வெளிப்பாடு அல்ல, பாடத்திட்டம் மிகவும் எளிதானது.
ஒருவேளை பாடத்திட்டம் தரமாக இருந்திருந்தால்... அனிதா போன்ற தங்க கண்மணிகள் இன்று மென்மேலும் ஜொலித்திருப்பார்கள்.

சி.பி.எஸ்.இ
பிரச்சனை சி.பி.எஸ்.இ இல்ல... சி.பி.எஸ்.இ அளவுக்கு தரமான பாடத்திட்டம் அமைக்காத அரசு தான் பெரும் பிரச்சனை.
தர்மாக்கோல் அமைச்சர்கள் ஒருபுறம், கல்வியை வியாபாரமாக மட்டுமே நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் மறுபுறம். இதன் மத்தியில் வெறும் கனவுகளுடன் சிறகடிக்க துடித்து, மடிந்து விழும் அனித்தாக்கள்.
கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும். அதற்கு திரு பாரத பிரதமர் ஒரு முடிவெடுக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
