சாலையில் காய்கறி விற்ற சிறுவனை பள்ளியில் சேர்த்த பிரபல கவர்ச்சி நடிகை!

Posted By:
Subscribe to Boldsky

இன்டர்நெட் மூலம் வாழ்க்கை இழந்தவர்களும் இருக்கிறார்கள், வாழ்க்கையில் உயர்ந்தவர்களும் இருக்கிறார்கள். சென்ற வருடம் பாகிஸ்தானை சேர்ந்த டீ மாஸ்டர் இளைஞர் இன்டர்நெட் மூலமாக நடிகராக மாறியதை நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம்.

அந்த வரிசையில், குடும்ப பொருளாதார சிக்கலால், சாலையில் காய்கறி விற்றுக் கொண்டிருந்த சிறுவனின் படம் வைரலாக, அதை கண்ட பிரபல நடிகை அந்த சிறுவனை, பள்ளியிலும் சேர்ப்பேன், எதிர்காலம் சிறக்க தன்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிலிப்பைன்ஸ்!

பிலிப்பைன்ஸ்!

பிலிப்பைன்ஸ் நாட்டின் வறுமை, தினம், தினம் பல சிறுவர்களை சாலையில் தள்ளி குழந்தை தொழிலாளி ஆக்குகிறது. பொருளாதார சிக்கல் காரணமாக, தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் வேலைக்கு அனுப்பும் நிலைக்கு பிலிப்பைன்ஸ் பெற்றோர் ஆளாகியுள்ளனர்.

அழகான சிறுவன்!

அழகான சிறுவன்!

பார்க்கவே அனுதாபப்படும் வகையில், மிக கியூட்டான ஒரு சிறுவன் பிலிப்பைன்ஸ் சாலையில் தனது தந்தையின் பேன்ட்டை தரையில் விரித்து காய்கறி விற்றுக் கொண்டிருக்கும் படம் ஒன்று இன்டர்நெட்டில் வைரலானது. அந்த படம், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல ஃபிலிப்பினா நடிகையும் பாடகியுமான ஷரோன் குனெட்டா என்பவரை சென்றடைந்தது.

ஷரோன் குனெட்டா!

ஷரோன் குனெட்டா!

இன்டர்நெட்டில் வைரலான கியூட் சிறுவன் களைப்பில் கன்னத்தில் கைவைத்து உறங்கிக் கொண்டிருந்த அந்த படத்தை கண்ட ஷரோன் குனெட்டா, அவனுக்கு உதவ வேண்டும் என முன்வந்தார்.

Image Credit: SharonCuneto/ Facebook

தினமும்!

அந்த சிறுவனின் வருங்காலத்திற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வேன், தினமும் அந்த சிறுவனிடமே அனைத்து காய்கறிகளும் வாங்குவேன் என தனது இன்ஸ்டா பதிவில் கூறியிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Actress Offers To Buy All of This Cute Vendors Vegetables!

Actress Offers To Buy All of This Cute Vendor's Vegetables!