மெல்ல, மெல்ல கல்லாக மாறி வரும் விசித்திர சிறுவன்!

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக பெண் ஒருவர் கருத்தரித்தால் தனக்கு ஆரோக்கியமான, அழகான குழந்தை பிறக்க வேண்டும் என்று தான் நினைப்பார், வேண்டுவார். ஆனால், இது எல்லாருக்கும் வரமாக கிடைத்துவிடுவதில்லை.

சிலரது வாழ்வில் குழந்தைகள் வினோத பாதிப்பால் பிறப்பதும் உண்டு. அப்படி தான் மெல்ல, மெல்ல கல்லாக மாறும் அரியவகை சரும பிரச்சனையுடன் பிறந்தார் இந்த சிறுவன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரமேஷ்!

ரமேஷ்!

ரமேஷ்க்கு 11 வயது.இவர் பாதிக்கப்பட்டுள்ள சரும பிரச்சனை மிகவும் அரிதானது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த பிரச்சனையால் சாதாரண மக்கள் போன்ற வாழ்க்கை வாழ முடியாமல் தவிக்கிறார் ரமேஷ். இவர் மெல்ல, மெல்ல கல்லாக மாறுவது தான் இவருடைய சரும பிரச்சனையே.

இந்த சரும பிரச்சனை இக்தியோசிஸ் (Ichthyosis) எனப்படுகிறது. இது சருமத்தின் மேல் அடர்த்தியான படலத்தை உருவாக்குகிறது.

மருத்துவர்கள்...

மருத்துவர்கள்...

இது மரபணு கோளாறால் ஏற்படக் கூடிய சரும பிரச்சனை என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், இதை மீன் செதில்கள் வகை போல தோன்ற கூடியது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நகர முடியாத நிலை!

நகர முடியாத நிலை!

வெறும் 11 வயதே ஆன இந்த சிறுவன் மற்ற குழந்தைகள் போல, ஓடியாடி, பாடி விளையாட முடியாது. இந்த அரியவகை சரும பிரச்சனையால் இவரால் நகரவும் முடியாது, பேசவும் முடியாது. இவரது உடல் உறைந்த நிலையிலும், கால்கள் பின்னிய நிலையிலும் இருக்கின்றன.

ரமேஷின் தாய்...

ரமேஷின் தாய்...

ரமேஷின் தாய், "ரமேஷின் தோல் இவர் பிறந்த 15வது நாளில் இருந்தே உரிந்து வர துவங்கியது. மீண்டும் அதன் மேல் புதிய தோல் வளரும். அது கருப்பாக மாறியது. எங்களுக்கு இது என்னவென்றே தெரியவில்லை. நான் உதவியற்று இருந்தோம்" என கூறுகிறார்.

சிகிச்சை?

சிகிச்சை?

எதிர்பாராத விதமாக, இந்த அரியவகை சரும பிரச்சனைக்கு சிகிச்சை இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், சில மருந்துகளால் இதை கட்டுப்படுத்த முடியும் என கூறுகின்றனர்.

ஜோஸ் ஸ்டோன்!

ஜோஸ் ஸ்டோன்!

பிரிட்டிஷ் பாடகர் ஜோஸ் ஸ்டோன் ஆபத்பாந்தவனாக தோன்றி, இவருக்கு உதவி வருகிறார். ரமேஷின் மருத்துவ செலவிற்கான 1,375 யூரோக்கள் அவர் நிதியுதவி செய்துள்ளார். மேலும், ரமேஷுடன் இவர் ஒருநாள் செலவழித்து பரிசுகள், இனிப்புகள் வழங்கி சென்றுள்ளார்.

இவருக்கு எப்படி தெரியும்?

இவருக்கு எப்படி தெரியும்?

ஜோஸ் ஸ்டோன் ஒருமுறை ரமேஷின் வீடியோ ஒன்றை கண்டுள்ளார்.பார்த்த உடன் அவருக்கு உதவ வேண்டும் என எண்ணி, நிதி திரட்ட காத்மண்டுவில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

மெல்ல, மெல்ல தேறி வரும் ரமேஷ்!

மெல்ல, மெல்ல தேறி வரும் ரமேஷ்!

மருத்துவர்கள் தங்களால் இயன்ற மருத்துவ சிகிச்சையை ரமேஷுக்கு அளித்து வருகின்றனர். இவர் மிகவும் அபாயமான நிலையில் இருந்து இப்போது மெல்ல, மெல்ல தேறி வருகிறார். அவரது உடலில் இருக்கும் கல் போன்ற சருமத்தை நீக்க முயற்சிக்கின்றனர்.

அது மிகவும் வலி மிகுந்தது ஆகும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இன்பெக்ஷன் ஆகாமல் இருக்கு ஆன்டி-பயாடிக் அளித்து வருகின்றனர்.

அனைவரின் அருளால் ரமேஷ் விரைவில் நலம்பெற வேண்டுவோம். ஜோஸ் ஸ்டோன் போன்ற நல்ல உள்ளத்திற்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Boy Was Slowly Turning Into A Stone, Until...!

A Boy Was Slowly Turning Into A Stone, Until...!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter