ரியல் ஹீரோ பியுஷ் மனுஷ் பற்றி பலரும் அறியாத 7 உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

பியுஷ் மனுஷ், சேலத்தை சேர்ந்தவர். இவரது தாத்தா காலத்தில் ராஜஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்து நிரந்தரமாக தங்கிவிட்டனர்.

இயற்கை ஆர்வலரான இவர் விவசாயம், நீர் நிலைகள், இயற்கை காய்கறி, பழங்கள், இயற்கை எரிபொருள் என சுற்றுப்புறச் சூழல் மீது அதிக அன்பும், கவனமும், அக்கறையும் கொண்டுள்ளவர்.

திடீரென கைதாகி சிறையில் போலீசாரால் துன்புறுத்தப்பட்டு, பின் பலரின் தூண்டுதலின் காரணத்தால் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியாகியுள்ளார் பியுஷ் மனுஷ்.

இதையும் படிங்க: சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் பற்றி பலரும் அறியாத தகவல்கள்!!

அப்படி என்ன செய்தார் என இவரை போலீஸ் கைது செய்தது? எதற்காக அடித்து, உதைத்து துன்புறுத்தினர்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

சேலம் சிட்டிசன் ஃபாரம் என்ற அமைப்பை தொடங்கி. சில இயற்கை மற்றும் சுற்றுசூழல் மீது ஆர்வம் கொண்ட நபர்கள் இணைத்துக் கொண்டு கடந்த 2010-ம் ஆண்டு முதல் நிறைய நல்ல காரியங்கள் செய்து வருகிறார் பியுஷ் மனுஷ்.

உண்மை #2

உண்மை #2

தர்மபுரியில் உள்ள கஞ்சமலை எனும் இடத்தில நடந்துவந்த சட்டவிரோதமான தொழில்களை எதிர்த்து, பலர் இணைந்து நடத்தும் கூட்டுறவு காடு திட்டத்தை துவங்கி, ஏறத்தாழ 1,30,000 மரக்கன்றுகளை பல ஏக்கர் நிலப்பரப்பில் நட்டு ஓர் காட்டியே உருவாக்க கருவாக இருந்துள்ளார் பியுஷ்.

உண்மை #3

உண்மை #3

இயற்கை மீது கொண்ட காதல் மற்றும், மனித நேயம் கொண்ட நெஞ்சத்தின் காரணத்தால் 8 குளங்கள், 2 ஏரிகள், 17 தடுப்பணைகள் பியுஷின் உழைப்பால் உருவாகின.

மேலும், மூங்கில், தேனீ, காளான் வளர்ப்பிலும் தொழில்களை உருவாக்கி இளைய சமுதாயத்திற்கு ஓர் முன்னோடியாக திகழ்கிறார் பியுஷ்.

உண்மை #4

உண்மை #4

கன்னங்குறுச்சி எனும் இடத்தில் அமைந்தயுள்ள மூக்கனேரியை அரசின் எந்த உதவியின் இல்லாமல், மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட 50 லட்ச ரூபாய் கொண்டு மீட்டெடுத்து, ஓர் நீராதாரமாய் மாற்றியுள்ளார்.

உண்மை #5

உண்மை #5

கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்திற்கு ஏறத்தாழ 35 கண்டைனர் மூலமாக நிவாரண பொருட்களை சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளார். இதற்கு சேலம் மக்கள் பெரும் உதவி செய்துள்ளனர்.

உண்மை #6

உண்மை #6

கவுத்தி மற்றும் கல்வராயன் என்ற இரண்டு மலைகளின் அடியில் இரும்பு கிடைக்கும் என மலைகளை வெடித்து இரும்பு எடுக்க முயன்ற நிறுவனத்தை விரட்டி, CNN-IBN-ன் 2015-க்கான சிறந்த இந்தியன் எனும் விருதை வென்றுள்ளார் பியுஷ்.

உண்மை #7

உண்மை #7

சேலத்தில் மட்டுமே மூக்கனேறி, அம்மாபேட்டை, குடுகள், இஸ்மாயில்கான் எனும் நான்கு ஏரிகள் மற்றும் அரிசிப்பாளையம், பள்ளப்பட்டி எனும் இரண்டு குளங்களை சுத்தம் செய்து மீட்டெடுத்து நல்ல நீர் ஆதராமாக மாற்றியுள்ளார் பியுஷ்.

உண்மை #8

உண்மை #8

பியூஷ் மனுஷின் இயற் பெயர் பியூஷ் சேத்தியா. வட நாட்டு சாதியின் பெயரை குறிப்பதால், சேத்தியா என்பதை எடுத்துவிட்டு, மனுஷ் என்று தன் பெயருக்கு பின்னால் இணைத்துக் கொண்டார்

உண்மை #9

உண்மை #9

அவர் திடீரென முளைத்த சமூகப் போராளி கிடையாது. கல்லூரியில் படிக்கும்போதே கல்லூரி படிப்பின் தரம் மற்றும் கட்டணத்தை எதிர்த்து, கல்லூரி வளாகத்திலுள்ள மகளிர் கழிவறையின் முன்னமர்ந்து போராட்டம் செய்தவர்.

அதன்பின் நடைபெற்ற பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். போராட்ட குணத்தை இயல்பிலேயே பெற்றிருப்பவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Who Is Piyush Manush

Who Is Piyush Manush, take a look to know about his greatness.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter