Latest Updates
-
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க.. -
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா? -
அக்டோபர் இறுதியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறைவதை பாப்பீங்க.. -
அக்டோபர் 09 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 16-ல் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது!
காலாவதி ஆகும் நாள் குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள்!
நாம் வாங்கும் பெரும்பாலான பொருட்கள் காலாவதி நாள் குறிப்புடன் தான் விற்கப்படுகின்றன. ஆனால், அதன் பின்னணியில் இருக்கும் உண்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
அட்டைப் பேட்டிகளில், பேக்கிங் செய்து விற்கப்படும் பொருட்களில் நாம் கவனமாக பார்க்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. அந்த பொருளை தயாரிக்க என்னவெல்லாம் சேர்க்கின்றனர்? அதன் மேக்ஸிமம் விற்பனை விலை என்ன? மூலப் பொருட்களின் கலப்பு மூலம் பக்கவிளைவுகள் உண்டாக வாய்ப்புகள் உண்டா? என நாம் கவனம் செலுத்த வேண்டிவயவை பலவன இருக்கின்றன.

அதில் மிக முக்கியமான ஒன்று காலாவதி ஆகும் நாள். ஒருசில காலாவதி ஆக ஓரிரு மாதங்கள் இருந்தாலும் கூட அந்த உணவுப் பொருளை வாங்கி பயன்படுத்த துவங்கி விடுவார்கள். இது மிகப் பெரிய தவறு.

எப்போது இந்த ஐடியா பிறந்தது?
உண்மையில் காலாவதி ஆகும் நாள் என்பது ஒரு பொருளின் பாதுகாப்பு கருதி உதயமானது அல்ல. இந்த பொருள் புதியது, ஃப்ரெஷ்ஷானது என்பதை வெளிக்காட்டவே இந்த யுக்தி கையாள துவங்கினர்.

விற்றவிட வேண்டும்....
காலாவதி ஆகும் நாள் என்பது விற்பனையாளருக்கு ஒரு எல்லைக் கோடு போல. அந்த நாளுக்குள் அவர் அந்த பொருட்களை விற்றுவிட வேண்டும். இது விற்பனையாளருக்கான ஒரு கைடுலைன்.

நாள்...
காலாவதி ஆகும் நாள் என்பது அதை வாங்குபவர்கள் அந்த பொருள் நல்ல தரத்தில் உள்ளதை கண்டறிய தான். காலாவதி நாளுக்கு பின்னும் ஒருசில பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்காலம். ஒருசில பொருட்கள் காலாவதி நாளுக்கு முன்னரே கெட்டும் போகலாம். இதை, வாங்கி பயன்படுத்தும் நபர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

காலாவதி...
உண்மையில் பேக்கேஜ் நாள் வைத்தே நாம் ஒரு பொருளின் பாதுகாப்பை அறிந்துக் கொள்ளலாம். காலாவதி நாள் என்பது பல குளறுபடிகள் கொண்டுள்ளதாகும்.
ஒருசில தயாரிப்பு நிறுவனங்கள் பேக் செய்து விற்பனைக்கு அனுப்பும் போது, பேக்கிங் மீது காலாவதி நாள் அச்சிடுகின்றனர். இதனால் நாம் வாங்கும் பொருள் சில சமயங்களில் காலாவதி நாளுக்கு வெகுநாள் முன்னரே கெட்டுப் போகலாம்.

குறிப்பு!
முடிந்த வரை குறிப்பிட காலாவதி நாள் காலம் எட்டுவதற்கு ஒரு சில மாதங்கள் தான் இருக்கிறது எனில், அந்த பொருட்களை வாங்க வேண்டாம். உணவுப் பொருளை விட நமது ஆரோக்கியம் தான் முக்கியம்.



Click it and Unblock the Notifications
