பிறந்து 7 நாட்களில் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தையை காப்பாற்றிய தெரு நாய்கள்!

Posted By:
Subscribe to Boldsky

"நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது அன்றே மறப்பது நன்று.." இதை எழுதியது, இதை பின்பற்ற கூறுவது மனிதர்களாக இருப்பினும். இதை நூறு சதவீதம் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி, வாழ்ந்து காட்டுவது என்னவோ நாய்கள் தான். மேலும், ஒரு சிறிய வேண்டுகோள் இனிமேல் மனிதர்களை யாரும் நாய் என திட்ட வேண்டாம். நாய்கள் நல்லவை.

Street Dogs Saved a Abandoned New Born Baby

வங்காள தேசத்தில் பிறந்த 7 நாட்களில் பெற்றோரால் கைவிடப்பட்ட பெண் குழந்தையை, தெரு நாய்கள் காப்பாற்றிய சம்பவம் நெஞ்சை கலங்க வைக்கிறது. மனிதர்களுக்கு இல்லாத அக்கறையும், பாசமும் நாய்களுக்கு தான் இருக்கின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புருலியா!

புருலியா!

வங்காள தேசத்தில் புருலியா நகரின் பதார்டி பாரா என்ற பகுதியில் தான் பெற்றோரால் கைவிடப்பட்ட பெண் குழந்தை நாய்களால் காப்பாற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த ஆசாரியர் சவுத்திரி ஊருக்கு சென்று திரும்பும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு புதர் பகுதியில் இந்த சம்பவத்தை கண்டுள்ளார்.

நான்கு தெரு நாய்கள்!

நான்கு தெரு நாய்கள்!

புதர் அருகே ஏதோ சப்தம் கேட்க, சவுத்திரி சென்று புதரை நீக்கி பார்த்த போது தான், நான்கு தெரு நாய்கள் அந்த பச்சிளம் குழந்தையை காப்பாற்றி வைத்திருந்தன. மனிதர் வந்ததை கண்ட அந்த நாய்கள், மகிழ்ச்சியின் எல்லைக்கு சென்று வாலாட்டியுள்ளன.

கைவிடப்பட்ட குழந்தை!

கைவிடப்பட்ட குழந்தை!

நாய்கள் கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் அருகே சென்று பார்த்த போதுதான், நாய்கள் அந்த குழந்தையை காப்பாற்றி வைத்திருந்தது சவுத்திரிக்கு தெரியவந்துள்ளது.

அனாதை காப்பகம்!

அனாதை காப்பகம்!

குழந்தையை எடுத்து சென்று பராமரித்தார் சவுத்திரி. பிறகு போலீசார் அந்த குழந்தையை தங்கள் பாதுகாப்பிற்கு கீழ் எடுத்து, மருத்துவ மனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்து மருத்துவர்கள். குழந்தை ஆரோக்கியமாக இருப்பதை கூறினார்.

சனிவார்!

சனிவார்!

சனிக்கிழமை மீட்கப்பட்டதால், அந்த பெண் குழந்தைக்கு சனிவார் என்று சவுத்திரி பெயர் சூட்டினார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பிறகு, அரசு காப்பகத்தில் சனிவார் சேர்க்கப்படுவார் என அறியப்படுகிறது.

நன்றி மறவா நாய்கள்!

நன்றி மறவா நாய்கள்!

சவுத்திரி சனிவாரை நாய்களிடம் இருந்து எடுத்து தூக்கி சென்ற பிறகும். அவரை பின்தொடர்ந்து வீடு வரை சென்றுள்ளன, சனிவாரை காப்பற்றிய தெரு நாய்கள். மனிதராய் பிறத்தல் மட்டும் நம்மை மனிதர் என்ற அங்கீகாரத்திற்கு எடுத்து சென்று விடாது. மனிதம், அன்பு, அக்கறை, பாசம் காட்ட தெரிந்திருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Street Dogs Saved a Abandoned New Born Baby

Street Dogs Saved a New Born Baby, Who Abandoned by Parents.
Story first published: Wednesday, November 9, 2016, 16:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter