Latest Updates
-
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
மகள் என்றும் பார்க்காமல் மொட்டை அடித்த தாய், ஏன்? எதற்கு?
சில நாட்களுக்கு முன்னர் அப் டிரென்ட் அஃபிஷியல் என்ற முகநூல் பக்கத்தில் வெளியான வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அதில் ஒரு பெண்ணின் தலை முடியை மற்றொரு நடுவயது பெண்மணி ஷேவ் செய்வது போன்ற காட்சிகள் இருந்தன.
அந்த வீடியோவில் தாய், மகள் பேசியதை வைத்து அவர்கள் போர்ச்சுகல் (போர்சுகல் மொழி பேசியிருந்தனர்) சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது...

காரணம் என்ன?
அந்த வீடியோ பதிவில் இருந்த இரு பெண்களும், தாய், மகள் ஆவர். அவரது பெண் செய்த தவறுக்கான தக்க தண்டனையை அவர் பெற வேண்டும் என அவரது தாய் மகள் என்றும் பாராமல் தலையை மொட்டை அடித்தார்.
Image Source

தவறு என்ன?
அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்த மகள், ஒரு புற்று நோயாளி பெண்ணை கண்டு, அவரது தலை முடி இல்லாத தலையை பார்த்து, கேலி, கிண்டல் செய்து சிரித்துள்ளார். இதனால், அந்த நோயாளி மிகவும் மனம் வருந்தி போனார்.
Image Source

தண்டித்த தாய்!
மகள் செய்த தவறு உடனடியாக தாய் அறிந்தார். தன் மகள் என்ற போதிலும் சற்றும் யோயசிக்காமல், அவர் மனதளவில் உண்டாக்கிய காயம் பெரிதென எண்ணி, அந்த தவறை, காயத்தை உணர வேண்டும் என தன் மகளின் தலை முடியை ஷேவ் செய்துவிட்டார் அந்த அம்மா.
Image Source

அம்மா செய்தது சரியா?
பெரும்பாலானவர்கள் அந்த மகள் செய்தது தவறு தான். அதே நேரத்தில், தவற உணர வைக்க வேண்டிய தாயும், அவரது மகளை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளார் என்பது தான் உண்மை. தாய் செய்ததும் தவறு தான் என கூறியுள்ளனர்.
Image Source

தண்டனை தீர்வல்ல!
தண்டித்து புரிய வைக்கவும் முடியாது, திருத்தவும் முடியாது. இது மீண்டும் அந்த மகளை தீய பாதையில் பயணிக்கவும், தாய் மீது பற்று இன்றி போகவும் தான் செய்யும் என கூறியுள்ளனர்.
Image Source
வீடியோ!
முகநூல் பக்கத்தில் வெளியான அந்த வீடியோ பதிவு...
Source



Click it and Unblock the Notifications