நோ ஷேவ் நவம்பர் எங்கு, எதனால், யாருக்காக உருவானது?

Posted By:
Subscribe to Boldsky

"நோ ஷேவ் நவம்பர்" என்றால் நம்ம ஊரில் அரும்பு மீசை முளைத்த ஆண்கள் கூட, அடடே சொல்லி தெரியும் என்பார்கள். பல இளைஞர்கள் நவம்பர் மாதம் ஷேவிங் செய்யாமல், தங்கள் தாடியை அழகுப்படுத்தி வளர்த்து வருகிறார்கள்.

Facts About No Shave November

ஆனால், இந்த நோ ஷேவ் நவம்பர் எதற்காக துவங்கப்பட்டது? இது யாருக்காக? இது எப்படி உலக ஆண்கள் மத்தியில் பிரபலமடைந்தது என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேத்யூ ஹில்!

மேத்யூ ஹில்!

காலன் (Colon) என்பது பல வகை புற்றுநோய்களுள் ஒன்றாகும். மேத்யூ ஹில் என்ற நபரும் இந்த புற்றுநோயால் கடந்த 2007-ம் ஆண்டு பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

மகள் ஆரம்பித்த அமைப்பு!

மகள் ஆரம்பித்த அமைப்பு!

இவரது மகள் ரெபெக்கா ஹில் காலன் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு உண்டாக்க 2009-ம் ஆண்டு ஒரு அமைப்பை துவங்கினார்.

நன்கொடை!

நன்கொடை!

இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் நன்கொடை பெற துவங்கினார். கடந்த ஆண்டு மட்டும் அந்த அமைப்பு மொத்தமாக பெற்ற ஒரு மில்லியன் டாலர் நன்கொடை பெற்றதாக கூறப்படுகிறது.

இழப்பு!

இழப்பு!

புற்றுநோயின் போது நோயாளிகள் முடி இழப்பார்கள். அவர்கள் இழந்ததை நாம் அவர்களுக்காக வளர்ப்பது தான் நோ ஷேவ் நவம்பரின் குறிக்கோள். மற்றப்படி இது ஸ்டைலாக வளர்த்து, மற்றவரை ஈர்க்க அல்ல.

சேமிப்பு!

சேமிப்பு!

நவம்பர் மாதம் சிகை அலங்காரம், ஷேவிங் எதுவும் செய்யாமல், அம்மாதம் சேமித்து வைக்கும் பணத்தை நன்கொடையாக உலகம் முழுவதும் இருக்கும் ஆண்கள் ரெபெக்கா ஹில்-ன் அமைப்புக்கு செலுத்தி வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts About No Shave November

Facts About No Shave November
Story first published: Friday, November 25, 2016, 16:15 [IST]
Subscribe Newsletter