For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'காசு வாங்குறதே அதுக்காக தானே...' நடிகைகளை கேவலப்படுத்திய இயக்குனர் சுராஜ்!

கிளாமர் உடை உடுத்த தானே கோடிக்கணக்கா காசு தரோம். கிளாமர் ட்ரஸ் போட்டு தான் ஆகனும் என நடிகைகள் பற்றி சுராஜ் வெளியிட்ட கருத்திற்கு பெண்ணியவாதிகள், நடிகைகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

|

சில நாட்களுக்கு முன் தமிழ் திரைப்பட இயக்குனர் சுராஜ், கமர்ஷியல் படங்களில் நடிகைகளின் பங்களிப்பு என்பது கிளாமர் காட்ட மட்டும் தான். அவர்களுக்கு காசு கொடுப்பதே அதற்காக தான். ரசிகர்கள் கமர்ஷியல் படம் பார்க்க வருவதே நடிகர்களின் ஆக்ஷன் காட்சி, மற்றும் நடிகைகளின் கிளாமர் காட்சிககளை பார்க்க தான் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.

மேலும், அவர் ஆடை வடிவமைப்பாளர் முட்டி வரை உடை எடுத்து வந்தாலும், "அதை இன்னும் குறை, கிளாம்ராக்கு.." என கூறுவேன் என்றும், நடிகைகள் மறுத்தாலும் உடுத்த கூறுவேன் அதற்கு தான் சம்பளம் தரப்படுகிறது என்றும் கூறுவேன் எனவும் அந்த வீடியோ பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தை எதிர்த்து நடிகை நயன்தாரா, தமன்னா மற்றும் பல பெண்ணியவாதிகள், நெட்டிசன்கள், ரேடியோ ஜாக்கிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது நடிகைகளை கேவலப்படுத்துவது போன்ற கருத்தாக அமைந்திருந்தது. மேலும், அவர் பேசிய தொனியும் சற்றே அருவருப்பான வகையில் தான் அமைந்திருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் இந்த கண்ணோட்டம்?

ஏன் இந்த கண்ணோட்டம்?

பல துறைகளில் பெண்கள் சில வருடங்களுக்கு மேல் நீடிக்க, நிலைக்க முடியாமல் போவதன் காரணமாக இருப்பதே இந்த கண்ணோட்டம் தான். பெண்கள் என்றாலே செக்ஸ் பொருள் போன்ற இந்த கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும்.

கலையும் சமூக பொறுப்பும்!

கலையும் சமூக பொறுப்பும்!

சமூகத்தில் ஒரு சாதாரண மனிதன், சாமானியன் வெளியிடும் கருத்தின் தாக்கத்திற்கும், கலை துறையில் இருக்கும் நபர் அல்லது ஒரு பிரபலம் வெளியிடும் கருத்தின் தாக்கத்திற்கும் நிறையவே வேறுபாடு உண்டு. கோடிக்கணக்கான மக்களை சென்றடையும் ஒரு ஊடகத்தில் பணியாற்றி வரும் சுராஜ் போன்ற ஒரு இயக்குனர் இப்படிப்பட்ட கீழ்த்தரமான கருத்தை பதிவு செய்தது மிகவும் தவறு.

அன்றும், இன்றும்!

அன்றும், இன்றும்!

தெருக்கூத்தாக இருந்த போதிலும், மேடை நாடகமாக இருந்த போதிலும் சரி ஆண், பெண், கதாநாயகன், கதாநாயகி போன்றவர்களுக்கு இணையான பாத்திரம் இருந்தது. சமநிலை, சம மரியாதை இருந்தது. ஆனால், இன்று திரையில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகள் எங்கு இருக்கிறார்கள்?

வாய்ப்புகள் மறுப்பு!

வாய்ப்புகள் மறுப்பு!

கதை முழுதும் நடிகரை சுற்றி தான் அமைகிறது. கஹானி, என்.எச் 10, ஃபேஷன், அருந்ததி, மாயா போன்ற வெகு சில படங்கள் மட்டும் நடிகைகள் திறமை காட்டும் வண்ணம் வெளியாகின. இன்று பலரும் நடிகைளை இப்படிப்பட்ட கண்ணோட்டத்தில் காணவும் இது தான் காரணமாக இருக்கிறது. ஒருவேளை நடிகருக்கு இணையாக, நடிகைகளுக்கும் வலிமையான பாத்திரங்கள் அனைத்து படங்களிலும் கொடுக்கப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட நிலையம், கண்ணோட்டமும் எழ வாய்ப்பே இருந்திருக்காது.

மன்னிப்பு!

தமன்னா, நயன்தார, பல பெண்ணியவாதிகள், திரைத்துறை சார்ந்தவர்கள் சுராஜின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, அவர் உடனே மன்னிப்பும் கேட்டார். சுராஜ் தான் கூறிய கருத்தை திரும்ப பெற்றுகொள்வதாக வெளியிட்ட அறிக்கை.

கொட்டிய வார்த்தையை எடுக்க முடியாது!

கொட்டிய அரிசியை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒருபோதும் எவராலும் கொட்டிய வார்த்தைகளை எடுக்க முடியாது. அந்த சூழல், அவர் பேசிய தொனி நடிகைகள் காசு (சம்பளம்) கொடுத்தால் செக்ஸியாக, கிளாமராக எப்படி வேண்டுமானாலும் நடிக்க தான் வேண்டும் என்பது போல இருந்தது தான் பலதரப்பட்ட மக்கள் கண்டனம் கூற காரணியாக இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Director Suraj's Loathsome Comment On Actresses and Their Dress

Director Suraj's Loathsome Comment On Actresses and Their Dress
Desktop Bottom Promotion