தேசப் பிதா காந்தி இப்படிப்பட்டவரா?? யாரும் அறியாத அரிய தகவல்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

அகிம்சையின் வழி நின்று வெள்ளையர்களை வெளியேற்றி இந்திய திருநாட்டிற்கு விடுதலை பெற்றுத்தர பெரும் பங்கு வகித்தவர் தேசப் பிதா காந்தி. இங்கிலாந்தில் சட்டப்படிப்பை முடித்தவர். சத்தியம் நிலைக்க "சத்தியாகிரகம்" செய்தவர்.

இந்திய விடுதலைக்கு வித்திட்ட சுபாஷ் சந்திர போஸ் பற்றி மறைக்கப்பட்ட உண்மைகள்!!!

ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டு, இந்திய தேசியப் போராட்டத்திற்கு உள்ளே வந்தவர். உண்மை, நேர்மை, வெல்லும் என்று இவர் காத்த அமைதி போராட்டம். ஆங்கிலேயர்களினால் அமைதியான நள்ளிரவில் இந்தியாவிற்கு ஒளியேற்ற உதவியது.

மனிதனும், தமிழும் பிறந்த குமரிக் கண்டம்! மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!

நம் ஒவ்வொருவருடைய முகத்திலும் மகழ்ச்சி தவழ்ந்திட காரணமாக அச்சடித்த காகிதங்களில் புன்னகைத்துக் கொண்டிருக்கும் காந்தியைப் பற்றிய இந்த தகவல்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயக்கம்

தயக்கம்

காந்தி குழந்தை பருவத்தில் மிகவும் தயக்கமான சுபாவம் கொண்டவராம். யாருடனும் பேசமாட்டாராம். அவ்வப்போது பள்ளியில் இருந்து இதன் காரணமாக வீட்டிற்கு ஓடிவிடுவாராம். இதை காந்தியே அவரது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.

"மேன் ஆப் தி இயர்"

1930 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிக்கையில், காந்தியை "மேன் ஆப் தி இயர்" என்று குறிப்பிட்டு பிரசூரம் செய்யப்பட்டது.

ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்..

ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்..

காந்தி, ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் என்பவரோடு வழக்கமான தொடர்பில் இருந்தார். லியோ டால்ஸ்டாய், காந்திக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் ஆவார்.

ஐரிஷ் உச்சரிப்பு (Irrish)

ஐரிஷ் உச்சரிப்பு (Irrish)

காந்தியின் ஒரு ஆசிரியர் ஐரிஷ்ஷை சேர்ந்தவர். அதனாலோ என்னவோ, காந்தியின் ஆங்கில உச்சரிப்பு ஐரிஷ் உச்சரிப்பதை போல இருக்கும்.

$15000 ஊதியம்

$15000 ஊதியம்

காந்தி அவர்கள் சவுத் ஆப்ரிக்காவில் வேலை செய்த போது அவரது ஊதியம் வருடத்திற்கு $15000'களாம். இப்போதும் கூட அங்கு இருக்கும் இந்தியர்களுக்கு இந்த ஊதியம் பெறுவது என்பது கனவாக தான் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

ஆட்டு பால்

ஆட்டு பால்

காந்தி மிகவும் எளிய முறையில் செலவு செய்து மிக ஆரோக்கியமாக வாழ்ந்தவர். உணவுக்கட்டுப்பாட்டை மிகவும் பின்பற்ற கூடியவர் காந்தி. ஆட்டு பாலும், பழங்களையும் விரும்பி சாப்பிடுவாராம்.

தாய் மொழி பற்று

தாய் மொழி பற்று

காந்திக்கு அவரது தாய் மொழியான குஜராத்தி மொழியின் மீது அதீத பற்று இருந்தது. இதன் காரணத்தால், தனது சுயசரிதையை குஜராத்தியில் தான் முதன் முதலில் எழுதினார். பின்பு அவரது உதவியாளர்கள் அதை ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்தனர்.

புகைப்படம் பிடிக்காது

புகைப்படம் பிடிக்காது

புகைப்படம் எடுப்பது காந்திக்கு சுத்தமாக பிடிக்காது. ஆயினும், அந்த காலக்கட்டத்தில் அதிகமாக புடைப்படம் எடுக்கப்பட்டவர் காந்தி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிகிழமை....

வெள்ளிகிழமை....

காந்தி பிறந்தது, இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது மற்றும் காந்தி கொல்லப்பட்டது அனைத்துமே வெள்ளிக்கிழமையன்று தான். இயேசு சிலுவையில் அறையப்பட்டதும் கூட வெள்ளிகிழமை தான்.

எளிமையான

எளிமையான

தனக்கு அதிகமான ஆளுமையும், அதிகாரமும் இருந்தும் கூட காந்தி விமானத்தில் பயணம் செய்யவில்லை. அதை அவர் தவிர்த்து வந்தார். ஏனெனில், காந்தி மிகவும் எளிமையானவர்.

அசிங்கமான கையெழுத்து

அசிங்கமான கையெழுத்து

பள்ளி பருவத்தில் இருந்தே காந்தி அதிகமாக வருத்தப்பட்டது அவரது அசிங்கமான கையெழுத்தை நினைத்து தான். இதை அவரே பல முறை குறிப்பிட்டிருக்கிறார்.

உலக அகிம்சை தினம்

உலக அகிம்சை தினம்

காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி, உலக அகிம்சை தினமாக ஐ.நா அறிவித்தது.

பல் செட்டு

பல் செட்டு

காந்தி பல் செட்டு வைத்திருந்தார். அதை அவர் சாப்பிடும் போது மட்டும் பயன்படுத்திவிட்டு, பிறகு கழற்றி வைத்துவிடுவார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unknown Facts About Mahatma Gandhi

Do you know about the unknown facts about mahatma gandhi? read here.
Story first published: Tuesday, April 21, 2015, 12:27 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter