குண்டாக இருந்து ஒல்லியாக மாறிய பாலிவுட் நடிகைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

குண்டானால் மீண்டும் ஒல்லியாக முடியாது என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் நிச்சயம் முடியும் என்று பல பாலிவுட் பிரபலங்கள் நிரூபித்துள்ளனர். ஆம், பாலிவுட்டில் மிகவும் பிரபலமாக உள்ள நடிகைகளான அலியா பட், கத்ரீனா கைஃப், கரீனா கபூர், ஜரைன் கான் போன்றோர் ஆரம்பத்தில் படு குண்டாக இருந்தார்கள்.

பார்ட்டி எனும் பேரில் கூத்தடிக்கும் இந்திய பிரபலங்களின் வெளிவராத புகைப்பட தொகுப்பு!!!

ஆனால் தற்போது பல ரசிகர்களின் கண்களைக் கவரும் கவர்ச்சி கன்னிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு காரணம் குண்டாக உள்ளோம் என்று மனதை தளரவிடாமல், தன்னம்பிக்கையுடன் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டது தான். சொல்லப்போனால் பலர் இந்த நடிகைகள் முன்பு எப்படி இருந்தனர் என்று பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அத்தகைவர்களுக்காக தமிழ் போல்ட்ஸ்கை அவர்களின் போட்டோக்களைக் கொடுத்துள்ளது. அதைப் பார்ப்போமா!!!

மிகுந்த தர்ம சங்கடத்தை சந்தித்த பாலிவுட் நடிகைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜரைன் கான்

ஜரைன் கான்

நடிகை ஜரைன் கான் சினிமாவில் நுழையும் முன் 100 கிலோ எடையுடன் இருந்தார். திரையுலகில் காலைப் பதிப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டு, தன் எடையை குறைத்து தற்போது 57 கிலோவில் உள்ளார்.

அலியா பட்

அலியா பட்

தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் அலியா பட். இவர் முன்பு 70 கிலோ எடையுடன் இருந்தார். ஆனால் மிகவும் பிரபலமான ‘Student of Year' படத்திற்காக 3 மாதம் மிகவும் கஷ்டப்பட்டு, 16 கிலோ எடையைக் குறைத்தார். இதற்காக இவர் அன்றாடம் உடற்பயிற்சியுடன், கடுமையான டயட்டை மேற்கொண்டார். தற்போது இவர் 54 கிலோ எடை உள்ளார். மேலும் இதையை பராமரித்தும் வருகிறார்.

சோனம் கபூர்

சோனம் கபூர்

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான நடிகை சோனம் கபூர், சிங்கப்பூரில் இருக்கும் போது 86 கிலோ இருந்தார். இதற்கு காரணம் கண்டபடி உணவுகளை உட்கொண்டது தான். பின் திரையுலகில் காலடியைப் பதிப்பதற்காக, தினமும் ஜிம், நீச்சல், யோகா மற்றும் கதக் போன்றவற்றை பின்பற்றி, 30 கிலோ எடையைக் குறைத்தார். தற்போது இவர் 57 கிலோ எடையுடன் உள்ளார்.

சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா

நம் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, ஆரம்பத்தில் 94 கிலோ எடையுடன் இருந்தார். பின் தன் உடல் எடையை 30 கிலோ குறைத்து காட்டுவதாக சவால் எடுத்துக் கொண்டு, கடுமையான டயட், வாரத்திற்கு 5 நாட்கள் ஜிம், தினமும் யோகா, கார்டியோ பயிற்சி, டென்னிஸ் விளையாட்டு போன்றவற்றை மேற்கொண்டு, தற்போது 60 கிலோ எடையுடன் சிக்கென்று உள்ளார்.

பரீனித்தி சோப்ரா

பரீனித்தி சோப்ரா

பிரியங்கா சோப்ராவின் மூலம் திரையுலகில் காலடி பதித்தவர் நடிகை பரீனித்தி சோப்ரா. இவர் திரையுலகிற்கு வரும் முன் 86 கிலோ எடையுடன் இருந்தார்., பின் மற்ற நடிகைகளைப் போல் கடுமையான டயட், அன்றாட உடற்பயிற்சி, யோகா போன்றவற்றின் மூலம், தன் எடையைக் குறைத்து, ஃபிட்டாக மாறினார். தற்போது இவர் 58 கிலோ எடையுடன் உள்ளார்.

கரீனா கபூர்

கரீனா கபூர்

நடிகை கரீனா கபூர் மிகவும் குண்டாக இல்லாவிட்டாலும், ஃபிட்டாக இல்லை என்ற குறை கூறப்பட்டது. இதனை தீவிரமாக எடுத்துக் கொண்டு, கரீனா கபூர் "Tashan" என்ற படத்திற்கு ஜீரோ சைஸ் ஃபிகராக மாறி வந்தார். சொல்லப்போனால் பாலிவுட்டில் முதன் முதலாக ஜீரோ சைஸ் ஃபிகரானது கரீனா கபூர் தான். இந்த ஜீரோ சைஸைப் பெறுவதற்காக, இவர் அன்றாடம் யோகா, கார்டியோ, வாக்கிங் மற்றும் கடுமையான டயட்டைப் பின்பற்றினார். இவர் முன்பு 77 கிலோ இருந்தார். தற்போது 57 கிலோ உள்ளார்.

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

நடிகை கத்ரீனா கைஃப் படு குண்டாக இல்லாவிட்டாலும், ஃபிட்டாக இல்லாமல் இருந்தார். வேண்டுமானால் இவர் நடித்த 'Boom' படத்தையும், தற்போது நடித்துள்ள படங்களையும் பாருங்கள். நிச்சயம் நல்ல மாற்றத்தைக் காணலாம். சொல்லப்போனால் தற்போது இவர் சிக்கென்று மாறியுள்ளார்.

அர்ஜுன் கபூர்

அர்ஜுன் கபூர்

பாலிவுட்டில் நடிகைகள் மட்டும் குண்டாக இருந்து ஒல்லியாகவில்லை, நடிகர்களும் தான். அதிலும் போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூர் முன்பு 130 கிலோ இருந்தார். 'Ishaqzaade' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் உள்ள 'Chokra Jawan' என்ற பாடலில் சிக்ஸ் பேக் வைத்து அசத்தியுள்ளதோடு, பல ரசிகைகளையும் கவர்ந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Bollywood Actresses Who Went From Fat To Fit

Here are some bollywood celebrities who went from fat to fit. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter