5 வருடங்களுக்கு பின் ஃபேஷன் ஷோவில் ஒய்யார நடை போட்ட ஐஸ்வர்யா!

Posted By: Babu
Subscribe to Boldsky

2015 ஆம் ஆண்டின் அமேசான் இந்தியா கவுச்சர் வீக்கின் இறுதியில் பிரபல டிசைனர் மற்றும் ஸ்டைல் குருவான மனீஷ் மல்ஹொத்ராவின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. பொதுவாக இவர் பல நடிகைகளின் மிகவும் விருப்பமான டிசைனரும் கூட. அதில் குறிப்பாக பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய் பச்சன் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் மனீஷ் மல்ஹொத்ரா டிசைன் செய்த உடையையே அணிந்து செல்வார்.

அதற்கேற்றாற் போல், மனீஷ் மல்ஹொத்ராவின் கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக ஐஸ்வர்யா ராய் பச்சனே வந்திருந்தார். மேலும் 5 வருடங்கள் கழித்து ஐஸ்வர்யா ராய் முதன்முதலில் ராம்ப் வாக் நடக்கும் ஷோ என்றால், அது இந்த 2015 அமேசான் இந்தியா கவுச்சர் வீக் தான்.

மனீஷ் மல்ஹொத்ராவின் கலெக்ஷன்களில் பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் உள்ளது. மேலும் இந்த கலெக்ஷன்களில் கடுஞ்சிக்கலான கைவேலை, நூல்கள் மற்றும் ஜர்தோஷி எம்பிராய்டரி போன்றவைகளும், நிறங்களில் மெட்டாலிக் சில்வர், கோல்டன், அடர் பர்கண்டி, ரோஸ் பிங்க், கிரே, ப்ரௌன் போன்றவைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு 2015 ஆம் ஆண்டு அமேசான் இந்தியா கவுச்சர் வீக்கில் வெளிவந்த டிசைனர் மனீஷ் மல்ஹொத்ராவின் கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பர்கண்டி நிற உடை

பர்கண்டி நிற உடை

இது மனீஷ் கலெக்ஷன்களில் உள்ள பர்கண்டி நிற கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்ட உடை.

அனார்கலி கவுன்

அனார்கலி கவுன்

இது தான் மனீஷ் கலெக்ஷன்களில் இருக்கும் நுட்பமான எம்பிராய்டர் செய்யப்பட்ட அனார்கலி கவுன்.

எம்பிராய்டரி ஸ்கர்ட் மற்றும் கிராப் ஜாக்கெட்

எம்பிராய்டரி ஸ்கர்ட் மற்றும் கிராப் ஜாக்கெட்

இது மனீஷ் மல்ஹொத்ரா டிசைன் செய்த மெட்டாலிக் சில்வர் மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்து எம்பிராய்டரி செய்யப்பட்ட நீளமான ஸ்கர்ட் மற்றும் பர்கண்டி கிராப் ஜாக்கெட்.

பூப்பிரிண்ட்

பூப்பிரிண்ட்

மனீஷ் மல்ஹொத்ராவும் பூப்பிரிண்ட் போடப்பட்ட லெஹெங்காவை வெளியிட்டார்.

பால் கவுன்

பால் கவுன்

மனீஷ் மல்ஹொத்ராவின் கலெக்ஷன்களில் அழகான பால் கவுன்களும் இருந்தன.

பறவை பிரிண்ட்

பறவை பிரிண்ட்

இது மனீஷ் மல்ஹொத்ராவின் கலெக்ஷன்களில் உள்ள பறவை பிரிண்ட் கொண்ட அதிகளவு எம்பிராய்டரி செய்யப்பட்ட லெஹெங்கா.

ஷெர்வானி

ஷெர்வானி

இது ஆண்களுக்காக மனீஷ் மல்ஹொத்ரா டிசைன் செய்த கருப்பு நிற பந்த்கலா ஷெர்வானி.

பந்த்கலா ஜாக்கெட்

பந்த்கலா ஜாக்கெட்

இதுவும் ஆண்களுக்காக வடிவமைத்த கருப்பு நிற பந்த்கலா ஜாக்கெட்.

பூப்போட்ட மோடிஃப்

பூப்போட்ட மோடிஃப்

இது லெஹெங்கா மற்றும் கட்-அவுட் ஜாக்கெட்டுகளில் பூப்போட்ட மோடிஃப் பயன்படுத்தியது.

லோ நெக்

லோ நெக்

இவரது பெரும்பாலான உடைகள் லோ நெக் கொண்டிருக்கும். இதனால் இவைகளை அணிந்தால், அழகாக இருப்பதோடு, செக்ஸியாகவும் காட்சியளிக்கக்கூடும்.

ஐஸ்வர்யா ராய் பச்சன்

ஐஸ்வர்யா ராய் பச்சன்

இது ஐஸ்வர்யா ராய் பச்சன் மனீஷ் மல்ஹொத்ராவின் உடை அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்த போது எடுத்த போட்டோ.

பர்கண்டி நிற அனார்கலி கவுன்

பர்கண்டி நிற அனார்கலி கவுன்

ஐஸ்வர்யா அணிந்து வந்தது பர்கண்டி நிற நீளமான அனார்கலி கவுன். இந்த கவுனில் கடுஞ்சிக்கலான ஜர்தோஷி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

லோ நெக் அனார்கலி கவுன்

லோ நெக் அனார்கலி கவுன்

ஐஸ்வர்யா அணிந்து வந்த அனார்கலி கவுனும் லோ நெக் கொண்டது தான்.

மனீஷ் மல்ஹொத்ராவுடன் ஐஸ்வர்யா

மனீஷ் மல்ஹொத்ராவுடன் ஐஸ்வர்யா

இது டிசைனர் மனீஷ் மல்ஹொத்ராவுடன் ஐஸ்வர்யா கொடுத்த போஸ்.

பிரபலங்கள்

பிரபலங்கள்

மனீஷ் மல்ஹொத்ராவின் கலெக்ஷன்களைக் காண நடிகை அதிதி ராவ், சோஃபி சௌத்ரி, கிருதி சனோன் போன்றோர் வந்திருந்தனர். இது அவர்களுடன் சேர்ந்து மனீஷ் மல்ஹொத்ரா மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

AICW 2015: Aishwarya Rai Bachchan Walks For Manish Malhotra

The grand finale of the Amazon India Fashion Week 2015 was vivacious with a closing show by the finest style guru, Manish Malhotra. The beautiful Aishwarya Rai Bachchan was the showstopper for Manish Malhotra.