வார இறுதி பிரியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் ஏற்படும் 12 எண்ணங்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

வாரம் முழுவதும் மாடு மாதிரி உழைப்பவர்களுக்கு எது சொர்க்கம் என தெரியுமா? வார இறுதி விடுமுறையே! அந்த நாட்களை விரல் விட்டு எண்ணிக் கொண்டே நாட்களை கழிப்பவர்கள் பலர். அந்த நாளில் மட்டும் தானே நாம் நாமாக இருக்க முடியும். யாருக்காகவும் வேலை செய்யாமல் நம் இஷ்டத்திற்கு சுதந்திரமாக சுற்றி திரிவதற்கான நாளல்லவா அது? இப்போதைய ஐ.டி.நிறுவன பணியாளர்களுக்கு கிடைப்பதை போல் சனிக்கிழமையும் விடுமுறை என்றால் கேட்கவே வேண்டாம்.

வார இறுதியை பலரும் விரும்புவோம். பலர் அந்த நாட்களை புண்ணிய தினமாக எண்ணி வணங்கவே செய்வார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த நாளை குதூகலமாக செலவழிக்க நாம் அனைவரும் தயாராக இருப்போம். அன்று செய்யப்போகும் சின்ன சின்ன விஷயங்களை கூட ஆசையுடன் திட்டமிட்டிருப்போம். ஆனால் வார இறுதியின் அழகு என்னவென்று தெரியுமா? எந்த ஒரு திட்டமும் இல்லையென்றாலும் கூட அந்த நாளை உங்களால் சிறப்பிக்க முடியும். உங்கள் விருப்பப்படி அந்த நாளை செலவழிக்க முடியும். உங்களை கேள்வி கேட்க யாரும் இருக்க போவதில்லை. வார இறுதியில் உங்களுக்கு ஏற்படும் எண்ணங்கள் எல்லாம் வாழ்க்கையை மாற்றுவதாக அல்லது சாதாரண சந்தோஷமாக திகழும். ஆனால் பெரும்பாலும் சந்தோஷமான நிகழ்வுகளாகவே இருக்கும்.

என்னவாக இருந்தாலும் சரி, வார இறுதி நாட்கள் என்பது உங்களை நீங்களே நன்றாக உணர்ந்து கொள்ள உதவும். சராசரி மனிதர்களுக்கு பல்வேறு தேவைகள் இருக்கும்; பார்டிக்கு செல்வது, நடனம் ஆடுவது, தனிமையில் நேரம் செலவழிப்பது என அடுக்கிக் கொண்டே போகலாம். சரி விடுமுறை முடிந்து விட்டது, ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தும் விட்டது... இன்னும் சில மணி நேரங்களில் உங்கள் வார இறுதி நிறைவு பெற்று கொடுமையான திங்கட்கிழமை பிறக்க போகிறது. இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

"வார இறுதிக்கு முடிவே இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்!"

ஞாயிறுக்கிழமை சாயங்காலத்தின் போது வார இறுதியை விரும்புபவரின் மனதில் தோன்றும் மிகச்சிறந்த எண்ணமாகும் இது. ஏதோ ஒரு வழியில் வார இறுதி என்பது என்றுமே தொடர வேண்டும் என நீங்கள் ஆசைப்படுவீர்கள்.

"நான் அந்த சுற்றுலாவிற்கு சென்றிருக்க வேண்டும்"

உருப்படியாக எதையாவது செய்திருக்கலாமோ என்ற எண்ணம் உங்களை போட்டு வதைக்கும். உங்கள் நண்பர்கள் சென்ற சுற்றுலாவில் நீங்களும் சேர்ந்திருக்கலாமோ என்ற தோன்றும். வார இறுதியில் தோன்றும் எண்ணிலடங்கா எண்ணங்களில் இதுவும் ஒன்று.

"உன்னை மிஸ் செய்ய போகிறேன் மெத்தையே"

முடிவற்ற காலம் வரை தூங்க அனைவரும் விரும்புவோம். நீங்கள் மட்டும் என்ன அதற்கு விதிவிலக்கா என்ன! கண்டிப்பாக வார இறுதியில் மெத்தையில் சுருண்டு படுத்திருந்த சுகத்தை நீங்கள் இழக்க போகிறீர்கள். ஏதோ உங்கள் மெத்தைக்கு உயிர் உள்ளதை போல் அதனிடம் பேசத் தொடங்குவீர்கள். அதற்காக நீங்கள் ஒன்றும் பைத்தியமில்லை. ஞாயிறு இரவில் ஏற்படும் டென்ஷனின் பிரதிபலிப்பே அது.

"வீட்டிலேயே இருந்திருக்க வேண்டும்!"

நண்பர்களுடன் வார இறுதியில் சுற்றுலா சென்றிருந்தால், இந்த எண்ணம் உங்களுக்கு ஏற்படலாம். முற்றிலும் சோர்வடைந்ததால் உங்கள் மனதை மீறி நீங்கள் இதனை கூறலாம்.

தொடர்ந்து அதிகப்படியாக F.R.I.E.N.D.S நாடகத்தை பார்த்தல்

தொடர்ந்து அதிகப்படியாக F.R.I.E.N.D.S நாடகத்தை பார்த்தல்

எத்தனை முறை நீங்கள் F.R.I.E.N.D.S நாடகத்தை பார்த்திருப்பீர்கள்? ஒரு தடவை? இரண்டு தடவை? 10 தடவை? உங்களுக்கு ஞாபகம் இல்லாமல் இருக்கலாம், அதற்காக உங்களை நாங்கள் குறை கூறப்போவதில்லை. வார இறுதியை விரும்புபவர்கள் இந்த நாடகத்தை தொடர்ந்து பார்க்க அடுத்த வார இறுதி எப்போது வரும் என காத்துக் கொண்டிருப்பார்கள்.

சும்மா இருக்க நீங்கள் காத்திருக்க வேண்டும்

சும்மா இருக்க நீங்கள் காத்திருக்க வேண்டும்

எதுவுமே செய்யாமல் இருப்பதில் எவ்வளவு சுகம் இருக்கிறது! எதுவுமே செய்யாமல் சும்மா இருப்பதற்கு சிறந்த நேரமாக இருப்பது வார இறுதியே. ஆனாலும் வார இறுதியில் சும்மா இருப்பதைப் பற்றி நினைக்க, நீங்கள் காத்திருக்க வேண்டும். பின்ன என்ன, ஞாயிறு முடிந்து திங்கட்கிழமை தொடங்கப்போகிறது அல்லவா?

ஹேங்-ஓவர் வந்திருச்சா... அய்யயோ!

ஹேங்-ஓவர் வந்திருச்சா... அய்யயோ!

வார இறுதியும் குடித்து கும்மாளம் அடிப்பதும் கசின் பிரதர்ஸ் ஆவார்கள். அதனால் ஞாயிறு இரவின் போது, உங்களுக்கு ஹேங்-ஓவர் ஏற்படுவது ஒன்றும் ஆச்சரியமில்லை. அதனால் வார இறுதியில் குடிப்பவர்கள் தங்களை தானாகவே திட்டிக் கொள்வார்கள். இருப்பினும் சந்தோஷமான நிகழ்வுகளுக்காக அந்த அனுபவத்திற்கு நன்றியும் கூறிக்கொள்வார்கள்.

மறுபடியும் அலாரம் வைக்கும் பணி ஆரம்பித்துவிட்டதா?

மறுபடியும் அலாரம் வைக்கும் பணி ஆரம்பித்துவிட்டதா?

வார இறுதி என்றால் அலாரத்தை அமத்தி போட்டு விட்டு, உங்களுக்கு எப்போ எழுந்திருக்க தோன்றுகிறதோ, அப்போ எழுந்தால் போதுமானது. ஆனால் ஞாயிறு சாயங்காலம் வந்துவிட்டால் போதும், மீண்டும் அலாரத்தை செட் பண்ணும் பணியை தொடங்க வேண்டும்!

"அடுத்த வாரம் நான்..."

தள்ளிப்போடுதல் என்பது நம் அனைவரிடமும் இருக்கும் ஒரு பழக்கமே. வார இறுதியை விரும்புபவர் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? அவர்கள் தங்களுக்கு தாங்களே அடுத்த வார இறுதியில் சிலவற்றை செய்ய சத்தியம் செய்வார்கள். சென்ற வாரம் செய்த சத்தியத்திற்கும், இதற்கும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை.

"எனக்கென்று செலவிட எனக்கு அதிக நேரம் தேவை"

அனைவருக்குமே தங்களுக்கென கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது. வார இறுதியை விரும்புபவர்கள் கண்டிப்பாக இதனை செயல்படுத்துவார்கள். ஆனாலும் கூட அவர்களுக்கு அது பத்துவதில்லை.

"வார நாட்கள் என்றாலே வார இறுதி பிரியர்களுக்கு அநியாயம் தான்"

வார இறுதி பிரியர்களை கேட்டால், வார நாட்களுக்கு மட்டும் ஐந்து நாட்கள், ஆனால் வார இறுதிக்கு வெறும் 2 நாட்களா என கேள்வி எழுப்புவார்கள். நியாயமாகத் தானே படுகிறது! ஞாயிறு முழுவதும் இதையே உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்.

"மீண்டும் திங்கட்கிழமை!"

மேற்கூறிய அனைத்தையும் நினைத்து முடிப்பதற்குள்ளேயே வார இறுதி பிரியர்களுக்கு வார இறுதி முடிந்து விடும். ஆம், மீஎண்டும் திங்கள் பிறந்துவிட்டது! துன்பம், சோகம் என அனைத்தும் உங்களை தொற்றிக் கொள்ளும். ஆனால் ஒரே ஆறுதல், வார இறுதி மீண்டும் வருமல்லவா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

12 Thoughts A Weekend Lover Gets On Sunday Evening

Everyone loves a weekend but a weekend lover even more so. So what does a weekend lover think on a Sunday evening? Read on.
Subscribe Newsletter