பேச்சுலர்கள் மட்டுமே செய்யக்கூடிய 10 மட்டமான விஷயங்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

நீங்கள் திருமணம் ஆகாமல் தனியாக இருப்பவரா? அப்படியானால் எந்த ஒரு பொறுப்புகளும் இல்லாமல் உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே ராஜா. திருமணம் ஆகாமல் தனியாக இருப்பவரால் என்னென்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை பற்றி நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். இந்த உலகம் ஒரு நாடக மேடை. அதில் உங்கள் உங்கள் நாடகத்தை அரங்கேற்ற அதற்கான கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் உங்களுடையது தான். இந்த நாட்களில் மட்டும் தான் உங்கள் வாழ்க்கையை உங்கள் இஷ்டத்திற்கு வாழ முடியும். இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் காரியங்களுக்கு முடிவே கிடையாது. உங்களுக்கு வசதியை ஏற்படுத்தும் விதத்தில் உங்களால் எதை வேண்டுமானாலும் சுதந்திரமாக செய்ய முடியும்.

10 Things Only A Single Guy Would Do

ஆனால் வாழ்க்கை என்பது அவ்வளவு சுலபம் கிடையாது. இரண்டு பக்கத்திலும் வெண்ணெய் தடவியிருக்குமா என்ன? பிறருக்கு சந்தோஷமாகவும் குதூகலாகமாக தென்படுவது உங்களுக்கு சில நேரங்களில் பிரச்சனைகளாக இருக்கலாம். அதனை திருமணம் ஆகாமல் தனியாக இருப்பவரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். கட்டுப்பாடில்லாமல் சுதந்திரமாக இருப்பதற்கு பின்னாலும் கூட மறைதிருக்கும் பல பிரச்சனைகளும் சிக்கல்களும் அடங்கியுள்ளது. இதனை திருமணம் ஆகாமல் தனியாக இருப்பவர்கால் மட்டுமே அனுபவித்து உணர முடியும்.

இந்த சவால்களை எதிர்கொள்ளவும், ஒவ்வொரு பிரச்சனைகளை சமாளிக்கவும் சில வழிகள் உள்ளது. திருமணமாகாத தனியாட்கள் இந்த முறைகளை கையாண்டால் பிரச்சனையில்லா வாழ்க்கையுடன் சந்தோஷமாக வாழலாம்.

திருமணமாகாமல் தனியாக இருப்பவர் மட்டுமே செய்யக்கூடிய 10 விஷயங்கள்!!!

கட்டி போடப்பட்டுள்ள சாக்ஸ்

வார இறுதியில் பேச்சுலர்களாக இருக்கும் ஒவ்வொருவரும் மூட்டை மூட்டையாக துணிகளை துவைக்க வேண்டியிருக்கும். அந்த மூட்டையில் சாக்ஸ் ஜோடிகளை கண்டு பிடிப்பது கடினமாகி விடும். இதனால் ஜோடியில் ஒன்று தவறி விடவும் செய்யலாம். அப்படியானால் என்ன செய்யலாம்? சாக்ஸ் ஜோடியை ஒன்றாக முடிச்சு போட்டு விடுங்கள். இதனால் அவைகள் தொலைந்து போகாமல் பத்திரமாக ஒன்றாகவே இருக்கும்.

அழுக்கு மற்றும் துவைத்த துணிகள் ஒன்றாக இருப்பது

தனியாக வாழும் நபர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று சலவை செயல்முறையை பராமரிப்பது. பல நேரங்களில் துவைத்த துணிகளுடன் அழுக்கு துணிகளும் சேர்ந்துவிடும்.

நாற்றமடிக்கும் துணிகள்

அழுக்கு துணிகளும் துவைத்த துணிகளும் ஒன்றாக கலந்து விட்டால் எப்படி வித்தியாசப்படுத்துவது? அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டியது இது தான் - அதன் வாடையை வைத்து அவைகளை பிரிக்கலாம். நல்ல நறுமணமுள்ள துணிகளை தனியாகவும் நாற்றமடிக்கும் துணிகளை தனியாகவும் பிரித்து வைக்கவும்.

சலவை துணிகள் கட்டிலில்

மற்றொரு சலவை பிரச்சனை. தனியாளாக இருப்பவர்களுக்கு துவைத்த துணிகளை மடித்து வைக்க நேரம் இருக்காது. அப்போ அவைகளை எங்கே வைப்பார்கள்? வேறு எங்கு, கட்டிலில் தான் போடுவார்கள். அதனால் அவர்கள் தங்களின் துவைத்த துணிகளுடன் சேர்ந்து தான் தூங்கவே செய்வார்கள்.

சமைக்கும் பாத்திரத்தில் மேகி சாப்பிடுவது

சமைப்பதற்கு சுலபமாக உள்ள உணவுகளில் ஒன்று தான் மேகி. தனியாளாக இருக்கும் ஒவ்வொருவரும் மேகி பாக்கெட்களை வாங்கி வைத்திருப்பார்கள். ஆனால் அவைகளை பாத்திரத்தில் பரிமாறுவது தான் பிரச்சனையே. தனியாக இருக்கும் போது, அதனை நம் தனியாளாக தான் உண்ண வேண்டும். அதனால் அதனை சமைத்த பாத்திரத்தில் வைத்தே சாப்பிட்டு விடுவார்கள். பாத்திரம் கழுவும் வேலை குறையும் அல்லவா?

போர்வை இல்லாமல் உறங்குவது

மெத்தையுடன் படுக்கை ரெடி. ஆனால் தனியாக இருப்பவர்களுக்கு மெத்தைக்கு உறை போட பொறுமை இருப்பதில்லை. அது தேவையில்லாமல் நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்கும். தூங்கும் போது பலருக்கும் போர்வை, மெத்தை உறை இல்லாமல் தூங்கேவ் பிடிக்கும்.

பால் அல்லது முட்டையை மட்டுமே நம்பி வாழ்வது

ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு மாரத்தான் ஓட்டப்பந்தயம் தான். தனியாக இருப்பவர்கள் வேலைக்கு ஓட வேண்டும். அதனால் காலை உணவிற்கு எல்லாம் நேரம் கிடைப்பதில்லை. பெண்களை போல், ஆண்கள் உணவு தயாரிக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்க மாட்டார்கள். அவர்கள் அதிகமாக உண்ணும் காலை உணவே பாலும் முட்டையுமாக தான் இருக்கும். ஒரே மூச்சில் முழுமையான வயிறு நிறையும் உணவை சாப்பிட்டு விடலாம் அல்லவா? அதே போல் வேலை முடித்து விட்டு வரும் போது, சமைப்பதற்கு நேரம் இருக்காது. அதனால் மீண்டும் அதே கதை தான்.

குப்பையாக இருக்கும் அலமாரி

தனியாக இருக்கும் ஒவ்வொருவரின் அலமாரியும் ஒரு புதிர் போட்டியை போல் தான். அது உங்களை எங்கே அழைத்துச் செல்லும் என்பதை கண்டுபிடிக்க முடியாது. திறக்கும் அந்த தருணத்தில் அது அப்படியே கீழே கொட்டி விடும். அவைகளை ஒழுங்காக அலமாரியில் வைப்பதது அவர்களின் நோக்கமல்ல. அவர்களின் நோக்கம் எல்லாம் பொருட்களை எங்காவது தூக்கி போட்டு வைக்க வேண்டும். அதனால் அலமாரியை திறப்பது, உள்ளே அனைத்தையும் தூக்கி போடுவது, இறுக்கி மூடுவது, இதுவே அவர்களின் அன்றாட வாடிக்கையாக இருக்கும். உள்ளே இடமே இல்லாத ஒரு தருணம் வரும் . அப்போது அனைத்தும் சரிந்து விழும்.

அலுவலகத்தில் இரவு நீண்ட நேரம் இருப்பது

ஆண்கள் செய்யும் இந்த விஷயத்தை பெண்களால் ஏன் என புரிந்து கொள்ளவே முடியாது. பல அலுவலகங்களில் முக்கியமாக தகவல் தொழில்நுட்ப துறைகளில், ஆண்கள் இரவு நீண்ட நேரம் அலுவலகத்தில் இருக்க விரும்புவார்கள். பகல் நேரத்தில் வேலையை முடிக்கிறார்களோ இல்லையோ, இரவு நேரத்தில் அலுவலகத்தில் தங்க விருப்பப்படுவார்கள். அவர்களின் தங்கள் வேகத்தில் வேலைப் பார்ப்பார்கள். அதேப்போல் இரவு நேரத்தில் தொந்தரவுகள் இல்லாமல் வேலை பார்க்கலாம் என்ற எண்ணமும் கூட இருக்கலாம்.

ஃபார்மல் தோற்றத்தை பராமரிப்பதில் பிரச்சனை

பல வடிவங்களில் வரும் பிரச்சனை இது. கொஞ்சம் கஷ்டமானதும் கூட. இதுவே காஷுவல் ஆடைகள் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட போவதில்லை. ஆனால் ஃபார்மல் ஆடைகள் அணிவது என்றால், துணிகளை நன்றாக துவைத்து இஸ்திரி போட்டு வைக்க வேண்டும். இதற்கு அவர்களுக்கு நேரம் கிடைக்குமா என்ன? ஆனால் கண்டிப்பாக ஃபார்மல் ஆடை தான் என்றால் ஒன்றுமே செய்ய முடியாது. சவாலை எதிர்கொள்ள தான் வேண்டும்.

தனியாக இருப்பதால் நன்மைகளும் உண்டு, அதே நேரம் பல கஷ்டங்களும் உண்டு. தனியாக இருக்கும் ஆண்கள் செய்வதை கேட்பதற்கு சூப்பராக தெரியும். ஆனால் அவர்கள் சந்திக்கும் சவால்களும் அதிகம் தான். இவையெல்லாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையை எப்படி பார்க்கிறார்களோ, அதை பொறுத்து தான் இருக்கிறது.

English summary

10 Things Only A Single Guy Would Do

When you are single you have all the time for yourself. Here is a list of what single guy does when he is alone. Take a look.
Subscribe Newsletter