For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுவாமி விவேகானந்தரின் மறக்க முடியாத சில பொன்மொழிகள்!!!

சுவாமி விவேகானந்தர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி பிறந்து, 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி காலமானார். இன்று அவர் உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது பொன்மொழிகள் ஒவ்வொருவரின் மனதிலும் பதிந்து வாழ்ந்து வருகிறது.

|

Swami Vivekananda Quotes In Tamil: அத்வைத வேதாந்த கருத்துக்களை உலகம் முழுவதும் பரப்பியவர் தான் சுவாமி விவேகானந்தர். பல திறமைகளை உள்ளடக்கிய சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளும், பொன்மொழிகளும் அனைவரது உணர்ச்சியையும் தூண்டிவிடக்கூடியதாக இருக்கும். மேலும் பலர் சுவாமி விவேகானந்தரை ரோல்மாடலாக கொண்டுள்ளனர். குறிப்பாக கடவுள், வாழ்க்கை, இளைஞர்களைப் பற்றி விவேகானந்தர் கூறிய பொன்மொழிகள் அனைத்தும் சிந்திக்க வைக்கக்கூடியவையாக இருக்கும்.

இத்தகைய சுவாமி விவேகானந்தர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி பிறந்து, 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி காலமானார். இன்று அவர் உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது பொன்மொழிகள் என்றும் அழியாமல் உயிருடன் ஒவ்வொருவரின் மனதிலும் பதிந்து வாழ்ந்து வருகிறது. இங்கு சுவாமி விவேகானந்தரின் சில சிறப்பான பொன்மொழிகளைப் பற்றி பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொன்மொழி: 1

பொன்மொழி: 1

கடவுள் இருந்தால் அவனை நாம் காண வேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும். அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

பொன்மொழி: 2

பொன்மொழி: 2

உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். ஆனால் நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. ஆகவே உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.

பொன்மொழி: 3

பொன்மொழி: 3

நாம் இப்போது இப்படி இருக்கும் நிலைக்கு நாம் தான் பொறுப்பு.

பொன்மொழி: 4

பொன்மொழி: 4

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்! நீ உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!

பொன்மொழி: 5

பொன்மொழி: 5

எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

பொன்மொழி: 6

பொன்மொழி: 6

உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில், எதையும் வெல்.

பொன்மொழி: 7

பொன்மொழி: 7

லட்சியம் உடையவன் ஆயிரம் தவறுகள் செய்தால் அது இல்லாதவன் ஐயாயிரம் தவறுகள் செய்வான் என்பது உறுதி. ஆதலால் லட்சியம் மிகவும் தேவை.

பொன்மொழி: 8

பொன்மொழி: 8

அரசியல் வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் ஒருவன் சுதந்திரம் பெறலாம். ஆனால் ஆசைகளுக்கும், கோபத்திற்கும் அவன் அடிமையாக இருந்தால். உண்மையான சுதந்திரத்தின் தூய இன்பத்தை அவனால் உணர முடியாது.

பொன்மொழி: 9

பொன்மொழி: 9

மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.

பொன்மொழி: 10

பொன்மொழி: 10

பிறரிடமிருந்து நல்லதைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Swami Vivekananda Quotes In Tamil

Here are some of the most inspiring and motivational quotes of swami vivekananda. Take a look..
Desktop Bottom Promotion