கடவுள் இருக்கிறாரா என்பதை பற்றிய தத்துவ ரீதியான கேள்வி பதில்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

தத்துவம் ரீதியான பார்வையில் எப்போதாவது நீங்கள் மதத்தை பார்த்துள்ளீர்களா? அப்படி செய்வதால் என்ன தீர்மானத்தை நாம் அடையலாம்? நீண்ட காலமாகவே கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வி இருந்து கொண்டே தான் இருக்கிறது. மதத்தின் மீதான தங்கள் நம்பிக்கையின் மீது சிலர் குற்றம் சாட்டுவதற்கும் இதுவே முக்கிய காரணமாக விளங்குகிறது. கடவுள் என்றால் என்ன, அல்லது கடவுள் என்றால் யார் என்ற கேள்விகள் மனிதர்களின் மனதை குடைந்து கொண்டே தான் இருக்கிறது. இது இன்றல்ல நேற்றல்ல, எப்போது தொடங்கிற்று என யாருக்குமே தெரியாது. கடவுளைப் பற்றிய சில தத்துவ ரீதியான கேள்விகளைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.

கடவுள் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொரு மனிதருக்கும் தோன்றும் மிக அடிப்படையான கேள்விகளில் ஒன்று தான் "கடவுளின் நோக்கம் என்ன". உணரக்கூடிய கேள்வி என்றாலும் கூட பதிலளிக்க கஷ்டமான கேள்வியாகும். கடவுளைப் பற்றிய சில தத்துவ ரீதியான கேள்விகளை மட்டும் பார்க்காமல், முடிந்த வரையிலான பதிலையும் பார்க்கலாம்.

கடவுளைப் பற்றி நாம் சில தகவலை பேசினாலும், அதற்கு பதிலளிக்கும் போது கடவுளை தத்துவ ரீதியான கோணத்தில் தான் பார்க்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடவுள் இருக்கிறாரா?

கடவுள் இருக்கிறாரா?

"தன்னிடம் வரும் யாவரும் தான் இருப்பதை நம்ப வேண்டும்" என பைபிள் கூறுகிறது. மதத்தின் உலகத்தில், கடவுள் கண்டிப்பாக இருக்கிறார் - இந்த நம்பிக்கையை மையப்படுத்தி தான் மதமே இயங்குகிறது. தத்துவ ரீதியாக பார்க்கையில், கடவுள் இருப்பது பெரிய மர்மமாகவே உள்ளது. இருப்பினும் நம்பிக்கையைப் பற்றி மெய்விளக்கவியல் அறிவார்வம் பேசுகிறது. நம் பிரார்த்தனைக்கு பதில் கிடைப்பதே நாம் வைத்திருக்கும் நம்பிக்கையினால் தான் என மெய்விளக்கவியல் அறிவார்வம் கூறுகிறது.

கடவுள் ஏன் இருக்கிறார்?

கடவுள் ஏன் இருக்கிறார்?

இதன் நோக்கத்தை தத்துவ ரீதியாக பார்க்கையில், நம் ஆற்றல் அளவுகள் மற்றும் வாழ்க்கை தரத்தை அதிகரிப்பதற்காகவே கடவுள் இருக்கிறார் என கூறப்படுகிறது. நம்பிக்கை தான் இங்கே மிக முக்கியமானதாக விளங்குகிறது என்பதை மீதும் ஒரு முறை கூறுகிறோம். மெய்விளக்கவியல் அறிவார்வம் விஞ்ஞானத்தோடு மிக நெருங்கிய தொடர்பில் உள்ளது. மிகவும் தூய்மையான ஆற்றல் திறன் வலை தான் கடவுள் என்று அது கூறுகிறது. தன் அளவிற்கு மற்ற ஆற்றல் திறன்களை இழுக்கவே இந்த ஆற்றல் திறன் பயன்படுகிறது. இதனால் அண்டத்தி உள்ள உச்ச வாழ்க்கை திறனுடன் மற்ற ஆற்றல் திறன்களின் அளவுகள் ஒன்றிடும்.

கடவுள் என்றால் யார்?

கடவுள் என்றால் யார்?

தத்துவ ரீதியாக இந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டுமானால், கடவுள் என்பவர் நம் அனைவரிடமும் இருக்கும் உச்ச வாழ்க்கை திறனாகும்.

கடவுள் இருக்கிறார் என்றால் அதனால் ஏன் நல்லவர்கள் துன்புறுகிறார்கள்?

கடவுள் இருக்கிறார் என்றால் அதனால் ஏன் நல்லவர்கள் துன்புறுகிறார்கள்?

தத்துவ ரீதியாக, பல விசாலமான தத்துவங்களின் கோணத்தில் பார்க்கையில், அண்டத்தின் மிக சக்தி வாய்ந்த திறனான காரண காரியம் சட்டம் தான் மக்களின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்திற்கும் பொறுப்பாகும். கடவுள் ஏன் இருக்கிறார் மற்றும் யார் கடவுள் என்ற பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு இது நம்மை மீண்டும் அழைத்து செல்கிறது.

பாவம் செய்தவர்களை கடவுள் மன்னிப்பாரா?

பாவம் செய்தவர்களை கடவுள் மன்னிப்பாரா?

கண்டிப்பாக பதிலளிக்க முடியாத கேள்வி இது. அதற்கு காரணம் மனித நேயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பலரும் செல்வ செழிப்புடன் தங்கள் வாழ்க்கையில் சந்தோஷமாக உள்ளனர். ஆனால் பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி மக்கள் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Philosophical Questions And Answers About The Existence Of God

We speak of certain facts about God whilst we answer some questions about God from the angle of Philosophy. Read on...
Subscribe Newsletter