Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
'வை ராஜா வை' படத்தின் இசை வெளியீட்டிற்கு க்யூட்டாக வந்த டாப்ஸி மற்றும் ப்ரியா ஆனந்த்!
சமீபத்தில் சென்னையில் 'வை ராஜா வை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் படத்தின் நாயகிகளான டாப்ஸி மற்றும் ப்ரியா ஆனந்த் க்யூட்டாக ஒருவர் கருப்பு நிற உடையிலும், மற்றொருவர் வெள்ளை நிற உடையிலும் வந்திருந்தனர்.
அதுமட்டுமின்றி, இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் தனுஷ் புது கெட்டப்பில் வந்திருந்தார். அவருடன் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் அழகான உடையில் வந்திருந்தார். மேலும் இயக்குநரும், ரஜினியின் இரண்டாவது மகளுமான சௌந்தர்யாவும், காமெடி நடிகர் விவேக் அவர்களும் வந்திருந்தனர். சரி, இப்போது அந்த 'வை ராஜா வை' படத்தின் இசை வெளியீட்டிற்கு வந்த பிரபலங்களின் சில போட்டோக்களைப் பார்ப்போமா...!

டாப்ஸி லுக்
இது தான் நடிகை டாப்ஸி அணிந்து வந்த கருப்பு நிற உடை. இவர் அணிந்து வந்த கருப்பு நிற கிராப் டாப் மற்றும் எம்பிராய்டரி செய்யப்பட்ட பேண்ட்டானது டிசைனர் பாவ்யா பட்நகர் வடிவமைத்தது.

டாப்ஸி மேக்கப்
நடிகை டாப்ஸி இந்த கருப்பு நிற உடைக்கு அளவான மேக்கப் போட்டு வந்திருந்தார்.

டாப்ஸியின் ஹேர் ஸ்டைல்
டாப்ஸி கருப்பு நிற சூட்டிற்கு கொண்டை போட்டு, முகத்தின் முன் சிறிது முடியை எடுத்துவிட்டு ஸ்டைலாக வந்திருந்தார்.

ப்ரியா ஆனந்த் லுக்
நடிகை ப்ரியா ஆனந்த் பூ எம்பிராய்டரி செய்யப்பட்ட வெள்ளை நிற கிராப் டாப் மற்றும் நீளமான பாவாடை அணிந்து வந்திருந்தார்.

ப்ரியா ஆனந்த்தின் மேக்கப்
ப்ரியா ஆனந்த் இந்த உடைக்கு சற்று ஆயில் மேக்கப் போட்டு வந்திருந்தார். மேலும் உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

ப்ரியா ஆனந்த்தின் ஹேர் ஸ்டைல்
ப்ரியா ஆனந்த் இரண்டு பக்கமும் சிறிது முடியை எடுத்து, க்ளிப் செய்து கொண்டு, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

தனுஷ் லுக்
இது தான் நடிகர் தனுஷ் மேற்கொண்டு வந்த நியூ கெட்டப். உண்மையிலேயே இவர் மிகவும் சிம்பிளாக வந்திருந்தார்.

ஐஸ்வர்யா
நடிகர் தனுஷ் அவர்களின் மனைவியான ஐஸ்வர்யா கருப்பு நிற டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து, மேலே ப்ரௌன் நிற லெதர் கோட் போடடு ஸ்டைலாக வந்திருந்தார்.

சௌந்தர்யா
நடிகர் ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா எம்பிராய்டரி செய்யப்பட்ட காபி நிற குர்தா மற்றும் கருப்பு நிற லெக்கின்ஸ் அணிந்து சிம்பிளாக வந்திருந்தார்.

விவேக்
காமெடி நடிகர் விவேக் 'தல' அஜித் அவர்களின் ஸ்டைலான பெப்பர் அண்ட் சால்ட் ஸ்டைலைப் பின்பற்றி வித்தியாசமான லுக்கில் வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications