For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளியின் போது இந்துக்கள் ஏன் விளக்கேற்றுகிறார்கள் என்பது தெரியுமா?

By Super
|

தீபாவளி என்பது ஒரு புகழ் பெற்ற இந்து பண்டிகை என்பதை நாம் அனைவரும் அறிவோம். அது மட்டுமல்லாமல் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகையாகவும் இது திகழ்கிறது. தீபாவளி என்றாலே விளக்கு வரிசை என்று தான் அர்த்தம். அதனால் இந்த பண்டிகையில் விளக்கு ஒரு முக்கிய அங்கமாக இருப்பதில் ஒன்றும் பெரிய ஆச்சரியம் ஏதும் இல்லை.

தீபாவளியின் போது, ஒவ்வொரு வீட்டிலும் எண்ணெய் ஊற்றிய விளக்குகள், மெழுகுவர்த்திகள் மற்றும் அழகிய வண்ணங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் விளக்குகளை ஏற்றி மகிழ்வார்கள். அதிலும் களிமண்ணில் செய்யப்படும் அகழ் விளக்குகளில் எண்ணெய் ஊற்றி, திரி வைத்து விளக்கு ஏற்றுவது தான் பாரம்பரிய பழக்கமாக இருந்தது. ஆனால் கால வசதிகேற்ப மண் விளக்ககுகளுக்கு பதில் மெழுகுவர்த்திகளை பலர் இப்போது பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் வெளிச்சத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை அடிப்படையாக கொண்டுள்ள இந்த பண்டிகையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

தீபாவளியின் போது இந்துக்கள் ஏன் விளக்கேற்றுகிறார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? தெரியாதவர்கள் இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Why Do Hindus Light Lamps During Diwali?

விளக்கேற்றுவதற்கு பின் ஒளிந்திருக்கும் வரலாறு:

வட இந்தியாவில் ஒரு புகழ் பெற்ற புராணக்கதை ஒன்றுள்ளது. அதன்படி, 14 வருட வனவாசத்திற்கு பின், ராமர் தன் மனைவி மற்றும் தம்பியுடன் அயோத்தியாவிற்கு திரும்பிய போது, தங்களின் அரசர் திரும்பிய மகிழ்ச்சியை கொண்டாட மக்கள் விளக்கேற்றினர் என்று நம்பப்படுகிறது. இதனை அடிப்படையாக கொண்டே, தீபாவளியின் போது விளக்கேற்றப்படுகிறது என்றும் நம்பப்படுகிறது.

மேலும் நரகாசுரன் என்ற அசுரனை துர்க்கை அம்மன் வதம் செய்த வெற்றியை கொண்டாடவே தீபாவளி கொண்டாடப்படுகிறது என்று இந்தியாவின் தெற்கு பகுதியில் நம்பப்படுகிறது. தீய சக்தியை நல்ல சக்தி வெற்றி கொண்டதை, வெளிச்சமானது இருட்டை வென்றுவிட்டது என்று நம்பப்படுகிறது. அதனால் நரக சதூர்தஷியின் தினத்தில் தெற்கு இந்தியாவை சேர்ந்த மக்கள் இந்த தினத்தில் விளக்கேற்றி மகிழ்கின்றனர்.

விளக்கேற்றுவதன் முக்கியத்துவம்:

இந்து மதத்தில் வெளிச்சம் என்பது மிகவும் முக்கியமானதாகும். அது தூய்மை, நன்மை, அதிர்ஷ்டம் மற்றும் சக்தியை குறிக்கும். வெளிச்சம் இருக்கிறது என்றால் இருள் நீங்கி தீய சக்திகள் விலகுகிறது என்று அர்த்தமாகும். தீபாவளி என்பது அமாவாசை அன்று கொண்டாடப்படுகிறது. அந்நேரம் உலகமே இருளில் மூழ்கியிருப்பதால், லட்சக்கணக்கான விளக்குகளை ஏற்றி இருளை விலக்க மக்கள் முற்படுவர். பொதுவாக இருள் நிலவும் போது, தீய சக்திகள் உலவும் என்று நம்பப்படுகிறது. அதனால் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் விளக்கேற்றி, தீய சக்திகளை வலுவிழக்கச் செய்வதாக நம்பப்படுகிறது.

அதிலும் ஒவ்வொரு வீட்டின் கதவுக்கு வெளியே விளக்கேற்றுவது ஏன் என்று தெரியுமா? ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் ஆன்மீக ஒளியை வெளியிலும் ஒளிரச் செய்ய வேண்டும் என்பதை குறிக்கவே அதனை செய்கின்றனர். மேலும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் அது உணர்த்தும். ஒரு விளக்கை வைத்து அதனுடைய ஒளியில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பல விளக்குகளை ஏற்றலாம் அல்லவா?

அதனால் தீபாவளியின் போது விளக்கேற்றுவது என்பது ஆன்மிகம் மற்றும் சமுதாய ரீதியாக முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

English summary

Why Do Hindus Light Lamps During Diwali?

Has it ever occurred to you that why Hindus light lamps during Diwali? Let us find out.
Desktop Bottom Promotion