For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேண்டுமானால் தெரிந்து கொள்!

By Mayura Akilan
|

ஒரு நாள் ஜென் குரு ஒருவர் ஆற்றுப் பாலத்தின் மீது நின்று கொண்டு, ஆற்று நீரைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மூன்று பிக்குகள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஆற்றுப் பாலத்தின் மீது நின்று கொண்டிருந்த ஜென் குருவைப் பார்த்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஜென் வழியைப் பின்பற்றாதவர்கள் தான். எனினும் அவரை ஜென் குரு என்று அடையாளம் கண்டு, அவர் அருகில் வந்து நின்றார்கள்.

அவர்களில் ஒருவர் ஜென் குருவைப் பார்த்து,''ஆறு எவ்வளவு ஆழம்?'' என்று கேலியாகக் கேட்டார்.

அப்போது குரு சிறிதும் யோசிக்காமல், கண் இமைக்கும் நேரத்திற்குள் கேள்வி கேட்டவரைத் தூக்கி ஆற்றில் போட்டுவிட்டு ''நீயே அதை அளந்துபார்'' என்று சொன்னார்.

இக்கதையிலிருந்து என்ன தெரிகிறதென்றால், யாரையும் எந்த நேரத்திலும் கேலி, கிண்டல் செய்யக் கூடாது. அப்படி கிண்டல் செய்து எதைக் கேட்டாலும் அதற்கான பலனை அடைய நேரிடுடம். அது போல தான் "மூவரில் ஒருவர் கேலியாக ஜென் குருவிடம் கேட்க, குரு எதையும் யோசிக்காமல், அவர் கேட்ட கேள்விக்கு சரியான பதிலையே கூறி புரிய வைத்தார்" என்பது நன்கு புரிகிறது.

English summary

Know yourself | வேண்டுமானால் தெரிந்து கொள்!

When a Buddhist monk asked a zen master about the depth of a river, he pushed the monk into the river. He did so so that he himself would find the depth. So, don't make fun of anybody else.
Story first published: Wednesday, July 11, 2012, 17:01 [IST]
Desktop Bottom Promotion