For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காயமடைந்த நாய்க்கான சில எளிய கால்நடை பராமரிப்பு டிப்ஸ்...

By Ashok CR
|

மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, காயமடைந்தால் ஏற்பட போகும் வலி ஒன்றே. காயமடைந்த நிலையை கையாளும் வகையில் மட்டுமே வித்தியாசத்தை காணலாம். மனிதனால் தன் நிலையை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியும்; காயம் பட்ட இடங்களை சுட்டிக் காட்டலாம்; மீண்டு வருவதற்கு மருந்து உதவ போகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் மிருகங்களால் இவைகளை எல்லாம் செய்ய முடியாது. செல்லப் பிராணிகளை எல்லாம் நாம் குழந்தைகளைப் போல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் செல்லப்பிராணிகளை வளர்த்து வந்து, அதற்கு காயம் ஏற்பட்டால், அதன் நிலையை நீங்கள் புரிந்து கொண்டு, அதன் வழியைப் போக்க அதற்கு உதவ வேண்டும்.

நாய் என்பது மனிதர்களுக்கு மிகச்சிறந்த நண்பர்களாக விளங்கும் என பலரும் கருதுகின்றனர். அதனால் தான் என்னவோ அது பலருக்கும் பிடித்தமான செல்லப்பிராணியாக விளங்குகிறது. அதனால் உங்கள் செல்லப்பிராணியான நாய்க்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால், அதனை எப்படி கவனிப்பது என்பதைப் பற்றி நீங்கள் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். உங்கள் நாய் அல்லது வேறு எந்த பிராணிக்கு அடிபட்டாலும் கூட, அதனை கவனிப்பதோடு, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

காயமடைந்த பிராணியை கவனிக்கும் போது போதிய முன்னெச்சரிக்கை வேண்டும் என்று எளிய கால்நடை பராமரிப்பு டிப்ஸ் கூட சொல்கிறது. சில எளிய மற்றும் அடிப்படையான கால்நடை பராமரிப்பு டிப்ஸை கீழே விவரித்துள்ளோம். கால்நடை மருத்துவரை அணுகுவதற்கு முன்பு இவை உங்களுக்கு கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

Simple Pet Care Tips For An Injured Dog

• கால்நடை மருத்துவரை அழையுங்கள்: முதலில் கால்நடை மருத்துவரை அழையுங்கள். அவர்களிடம் நிலைமையை விளக்கி விட்டு, உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கான வழிகாட்டலை பெற்றுக் கொள்ளுங்கள். கால்நடை மருத்துவரை அணுக கொஞ்சம் நேரம் ஆகலாம். இடைப்பட்ட நேரத்தில், போதிய முதலுதவி கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

• கவனமாக கையாளுங்கள்: உங்கள் செல்லப்பிராணியின் மீது நீங்கள் எவ்வளவு தான் அன்பு செலுத்தி, கவனித்தலும் கூட அது பிராணி தான் என்பதை மறந்து விடாதீர்கள். பிராணிகளுக்கு வலி ஏற்படும் போது அவர்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வார்கள். இதனால் நீங்கள் காயம் பெறவும் வாய்ப்புள்ளது. அதனை அவைகளை கவனத்துடன் கையாளுங்கள்.

• பிராணியின் வாயை கவசத்தால் மூடவும்: உங்கள் நாய் வாந்தி எடுக்கவில்லை என்றால், அதன் வாயை கவசம் போட்டு மூடி விடுங்கள். ஒரு பிராணியாக பிறரை தாக்குவதே அதன் முதல் பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும். அதனால் உங்களுக்கும் காயம் ஏற்படுவதை தவிர்க்க உங்கள் நாயின் வாய்க்கு கவசத்தை பூட்டுங்கள்.

• பிராணியை கட்டிப்பிடிக்காதீகள்: உங்களுக்கு உங்கள் பிராணியின் மீது அலாதியான அன்பு இருக்கலாம். ஆனாலும் கூட அது காயமடைந்திருக்கும் போது அதனை கட்டிப்பிடிக்காதீர்கள். அடிபட்ட நாயிடம் இருந்து சற்று விலகி இருப்பதை தான் காயமடைந்த நாய்க்கான எளிய கால்நடை பராமரிப்பு டிப்ஸ் பரிந்துரைக்கும். முக்கியமாக பிராணிகளிடம் குழந்தைகள் நெருங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

• பொறுமையாக பரிசோதியுங்கள்: ஆரம்ப கட்ட முன்னெச்சரிக்கைகளை எடுத்த பிறகு, அதன் காயத்தை பரிசோதிக்க வேண்டிய நேரம் இது. நீங்கள் மிகவும் பொறுமையாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும். காயமடைந்த பகுதியை மிக மெதுவாக பரிசோதியுங்கள். அப்படி பரிசோதிக்கும் போது, அதற்கு வலி அதிகரிப்பது தெரிந்தால், பரிசோதனை செய்வதை நிறுத்தி விடுங்கள். இந்நேரங்களில் துணைக்கு ஆட்களை வைத்துக் கொள்வது நல்லது.

• நாயை ஊர்தியில் அழைத்து செல்வது: காயம் அதிகமாக இருந்தால் நாயை ஒரு ஊர்தியில் வைத்து கால்நடை மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். இதனால் அது அதிகமாக நடை கொடுக்காமல், அசௌகரிய உணர்வை பெறாது.

• மருத்துவ பதிவேடுகளை கையோடு வைத்துக் கொள்ளுங்கள்: உங்கள் பிராணியின் மீது பாசமிக்கவரான நீங்கள் அதனை சீரான முறையில் பரிசோதனைக்காக கால்நடை மருத்துவரிடம் அழைத்து செல்வீர்கள். அதனால் அதன் அனைத்து மருத்துவ பதிவேடுகளையும் சுலபமாக எடுத்துக் கொள்ளும்படியாக ஒரு இடத்தில் வைக்கவும். மருத்துவரிடம் பரிசோதனையும் சிகிச்சையும் முடிந்த பிறகு, அதனை வீட்டிற்கு அழைத்து வருவீர்கள். இப்போது முன்பை விட இன்னும் அதிகமான அக்கறையை காட்ட வேண்டும்.

• போதிய உணவு: காயமடைந்த நாயை கவனித்துக் கொள்ள உங்கள் மருத்துவர் அறிவுறுத்தும் போது, அதற்கென சிறப்பு உணவுகளை குறிப்பிடுவார். சீக்கிரமாக குணமடையவும் காயமடைந்த அணுக்கள் ஆறிடவும் சமநிலையான உணவு உதவிடும்.

• போதிய அளவிலான நீர் பானங்களை அளியுங்கள்: கிட்னியின் செயல்பாடுகள் இயல்பாக நடந்திட, போதிய அளவிலான நீர் பானங்களை கொடுப்பது மிகவும் முக்கியமாகும். நாயின் அளவை பொறுத்து குடிக்கும் அளவும் வேறுபடும். இதற்கு உங்கள் கால்நடை மாத்துவர் உங்களுக்கு உதவிடுவார்.

• மருந்துகளை முழுமையாக கொடுத்து முடிக்கவும்: மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை அவர் குறிப்பிட்ட கால கட்டத்திற்கு முழுமையாக கொடுத்து முடிக்கவும். அவைகளை முழுமையாக் அகோடுப்பதை கண்டிப்பாக உறுதி செய்து கொள்ளுங்கள். நாய் இப்போது நல்லாயிருக்கிறதே என நினைத்து பாதியிலேயே மருந்துகளை நிறுத்தி விடாதீர்கள்.

ஏற்கனவே சொன்னதை போல், பிராணிகளை குழந்தையை போல் பார்த்துக் கொள்ள வேண்டும் - எப்போதுமே வளராத குழந்தை போல. அதன் குணங்கள் மற்றும் நடத்தையில் சிறியளவில் மாற்றம் ஏற்பட்டாலும் கூட உடனடியாக அதனை கவனிக்க வேண்டும். அதுவும் காயமடைந்த நாய் என்றால், அதனை எப்படி கவனிக்க வேண்டும் என்பதை முழுமையாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

English summary

Simple Pet Care Tips For An Injured Dog

Even the most basic of pet care tips mention that while approaching an injured animal take very precise precaution.
Desktop Bottom Promotion