குட்டியாகவும், க்யூட்டாகவும் இருக்கும் சில நாய்க்குட்டிகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய உலகில் யாரையும் நம்பக்கூடாது. அனைவருமே ஒருவித சுயநலவாதிகள் தான். ஆனால் எப்போதும் துரோகம் செய்யாத ஒரே உயிரினம் செல்லப் பிராணிகள் தான். அதில் குறிப்பாக நாய் இனங்கள் தான். 'நாய் நன்றியுள்ளது' என்று சொல்வதற்கு ஏற்றவாறே நாய்கள் நமக்கு மிகவும் நன்றியுள்ளதாக, சிறந்த நண்பனாக இருக்கும்.

அதனால் தான் பலர் தங்கள் வீடுகளில் செல்லப் பிராணியாக பெரும்பாலும் நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்த நாய்கள் உற்ற நண்பனாகவும் விளங்கும். இத்தகைய நாய்க்குட்டிகளில் பல இனங்கள் உள்ளன. அதில் இங்கு மிகவும் க்யூட்டாகவும் குட்டியாகவும் இருக்கும் ஒருசில நாய்க்குட்டிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் உங்களுக்கு எந்த நாய் பிடித்துள்ளதோ, அதை வாங்கி உங்கள் வீட்டில் வளர்த்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கவாலியர் கிங் சார்லஸ் ஸ்பானியல்

கவாலியர் கிங் சார்லஸ் ஸ்பானியல்

இந்த குட்டியான ஸ்பானில் நாயானது பொம்மை போன்று இருக்கும். அதிலும் இதன் ரோமமானது மென்மையாக இருக்கும். இந்த நாய்க்குட்டியானது நன்கு நட்புறவோடு பழகக்கூடியது.

ஹவானீஸ்

ஹவானீஸ்

இந்த நாய்க்குட்டியின் மேல் ரோமங்கள் அதிகமாக இருப்பதுடன், இவை பட்டுப் போன்று மென்மையாக இருக்கும். இந்த வகையான நாய் இனங்களானது பல வண்ணங்களில் கிடைக்கின்றன. மேலும் இது குடும்பத்தில் வளர்ப்பதற்கு ஏற்றதாகவும் கருதப்படுகிறது.

மால்டிஸ்

மால்டிஸ்

இந்த நாய்க்குட்டிகள்பொம்மை போன்று இருந்தாலும் இது நன்கு விளையாடக்கூடியவை. நன்கு சுறுசுறுப்பானவையும் கூட. எனவே இதனை வேண்டுமானாலும் வாங்கி வளர்க்கலாம்.

ஷிஹ் ட்ஸு

ஷிஹ் ட்ஸு

இந்த உறுதியான குட்டி நாய்களானது பெரிய இருண்ட கண்களைக் கொடணது. மேலும் இது மிகவும் விசுவாசமாகவும், எச்சரிகை விடும் சிறப்பான நாயாகவும் கருதப்படுகிறது.

பிரஞ்சு புல்டாக்

பிரஞ்சு புல்டாக்

இதுவும் ஒரு வகையான விளையாட்டுத்தனமிக்க, க்யூட்டான நாய்க்குட்டிகளுள் ஒன்றாகும். மேலும் இந்த நாய்கள் சற்று பிடிவாதத்துடன் இருக்கும்.

பீகிங்கீஸ்

பீகிங்கீஸ்

இது ஒரு சீன நாய்குட்டி. இது ஒரு சிறந்த நண்பனாக இருக்கும். இதுவும் அனைத்து விதமான நிறங்களிலும் கிடைக்கும்.

டிபெட்டன் ஸ்பானியல்

டிபெட்டன் ஸ்பானியல்

இந்த வகையான நாய்க்குட்டி இனங்களில் புத்திசாலியானது. இது இது திபெத்தில் உள்ள மலைப்பகுதிகளை பிறப்பிடமாகக் கொண்டது.

பக்

பக்

இந்த குட்டி நாயானது பொம்மை போன்று க்யூட்டாக இருப்பதுடன், இதன் முகத்தாலேயே இது அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. இது மிகவும் சிறந்த நண்பனாக இருக்கும். இதுவும் பல நிறங்களில் கிடைக்கும்.

இத்தாலியன் கிரேஹவுண்ட்

இத்தாலியன் கிரேஹவுண்ட்

இந்த வகையான நாய்க்குட்டியானது நீளமான கழுத்தைக் கொண்டிருக்கும். இது நன்கு பெரியதாக வளரக்கூடியது. மேலும் இது மிகவும் வலிமையான நாய் இனத்தில் ஒன்று.

போஸ்டன் டெரியர்

போஸ்டன் டெரியர்

இந்த குட்டியான நாய் இனமானது க்யூட்டான முகத்தைக் கொண்டிருப்பதுடன், சற்று பிடிவாதம் பிடிக்கவும் செய்யும். மேலும் இந்த வகையான நாயின் காது மற்றும் வால் குட்டியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 10 Lapdog Breeds

The following are a few lapdog breeds that you could consider to keep on your lap and show off to your friends.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter