For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாய்க்குட்டிக்கான பல் பராமரிப்பு டிப்ஸ்கள்...!

By Ashok Cr
|

நீங்கள் ஒரு புதிய நாய்க்குட்டியை வாங்கியுள்ளீர்களா? அனைவரை போலவும், நீங்களும் ஆனந்தத்தில் குதித்து மகிழ்வீர்கள். அதன் நன்மைக்காக அனைத்து உடல்நல பராமரிப்புகளையும் மேற்கொள்வீர்கள். அதற்காக ஊட்டச்சத்து நிறைந்துள்ள உணவுகளையும் வாங்கத் தொடங்கியிருப்பீர்கள். அதற்கு சீரான நடைப்பயிற்சியையும் கொடுக்க ஆரம்பித்து இருப்பீர்கள். எல்லாம் நல்லது தான். அதே போல் கால்நடை மருத்துவரை முதல் முறை அணுகி, ஒரு ஊசி போட்டு விட்டால் போதும், பல வகையான நோய்களில் இருந்து உங்கள் செல்லப்பிராணி பாதுகாப்பாக இருக்கும்.

கேட்பதற்கு எல்லாம் நன்றாக உள்ளதா? நீங்கள் புதிதாக கொண்டு வந்த நாய்க்குட்டி ஒரு பிறந்த குழந்தையை போலத் தான். ஒரு குழந்தையை போல், அதற்கும் பல் அரும்பும் போது பார்க்கும் அனைத்தையும் அது கடிக்க ஆரம்பித்து விடும். ஆம், பல் மருத்துவரை அணுகி, உங்கள் நாய்க்குட்டியை அவரிடம் சீரான முறையில் அழைத்துச் செல்லும் நேரம் இது. ஒரு நொடிப் பொழுதில் உங்கள் நாய்க்குட்டிக்கு அனைத்து பற்களும் நன்றாக வளர்ந்துவிடும்.

அதன் பின் தொற்றுக்களும் ஒட்டிக் கொள்ளும். உங்கள் நாய்க்கு வலியை வெளிக்காட்ட தெரியாததால், அதன் வலியை நம்மால் உணர முடிவதில்லை. அதனால் இம்மாதிரியான விஷயங்களின் மீது ஆரம்பத்திலிருந்தே நாம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். பல் மருத்துவரிடம் செல்வது போக, நாங்கள் கூறும் பற்களுக்கான சில டிப்ஸ்களையும் பின்பற்றுவது நல்லது. அதனால் அதன் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

தன் வாயை கையாளுவதை அதை ஏற்கச் செய்யுங்கள்

உங்கள் நாய்க்குட்டியின் வாயை யாராவது திறந்து கையை உள்ளே விடுவது அதன் நன்மைக்காகத் தான் என்பதை அதற்கு ஆரம்ப கட்டத்திலேயே புரிய வையுங்கள். இதனால் அதன் பல் சோதனை சீரான முறையில் ஒழுங்காக நடை பெரும். இதற்கென விசேஷ நேரத்தை ஒதுக்காதீர்கள். அது கண்டிப்பாக ஒத்து வராது. உங்கள் நாய்க்குட்டி உங்கள் மடி மீது வரும் போதெல்லாம், அதன் வாயை திறந்து சோதித்து பாருங்கள். அது சுகமின்மையை உணர்ந்தால், அதனிடம் பேச்சு கொடுத்து அதன் கவனத்தை திசை திருப்புங்கள்.

நாய்க்குட்டியின் பற்களை துலக்குதல்

நாய்க்காக பிரத்யோகமாக தயார் செய்யப்பட்டுள்ள கோரப்பல் டூத் பிரஷை வாங்கியவுடனேயே, உங்கள் நாய்க்குட்டிக்கு பல் துலக்கும் வேலையை தொடங்குங்கள். 45 டிகிரி கோணத்தில் இருக்கும் முள்ளரும்பை கொண்ட இரண்டு தலை ப்ரஷ் உங்கள் நாய்க்குட்டியின் பற்களை துலக்க மிகவும் உதவிடும். குழந்தைகளை போல், நாய்க்குட்டியும் முதலில் அதனை தடுக்க முயலும். நீங்கள் தான் பொறுமையுடன் செயல்பட்டு அதனை மெதுவாக இந்த பழக்கத்திற்கு மாற்ற வேண்டும். அளவுக்கு அதிகமாக துலக்கி விடாதீர்கள். அது சும்மா இருக்கும் நேரத்தில் இதனை செய்திடுங்கள். முதலில் சிறிது நிமிடங்களுக்கு மட்டும் அதனை செய்திடுங்கள். உங்கள் நாய்க்குட்டிக்கு இது பழகியவுடன் நேரத்தை சற்று அதிகரித்து கொள்ளுங்கள்.

சீக்கிரமாக தொடங்குங்கள்

நாய்க்குட்டி உங்கள் கைக்கு வந்த உடனேயே, பற்கள் பராமரிப்பு பயிற்சியில் அதனை ஈடுபடுத்த தொடங்கி விட வேண்டும். இப்பயிற்சிகளை சீக்கிரமாக தொடங்கி விடுவதே நல்லது. அப்போது தான் வளரும் போது, இப்பழக்கங்களுடன் வேகமாக அது ஒன்றி விடும். வளர்ந்த பின் அதனை பழக்கப்படுத்துவது சிரமமாகி விடும். இது ஒரு பழக்காமாகவே அதற்கு மாறி விடும். தாமதமாக பயிற்சியை தொடங்கினால் அதனை கட்டுப்படுத்துவது கஷ்டமாகி விடும்.

சரியான பற்பசை

மனிதனின் பற்கள், நாய்க்குட்டியின் பற்களை விட வித்தியாசமானவை. அதனால் நீங்கள் பயன்படுத்தும் பற்பசையை உங்கள் நாய்க்கு கொடுக்காதீர்கள். அது அவ்வளவு பயனை அளிக்காது. நாய்கென விற்கப்படும் பற்பசையை கடைகளிடம் சென்று வாங்கிக் கொள்ளுங்கள். செல்லப்பிராணிகளின் கடைகளுக்கு சென்று, ஃப்ளோரைட் போன்ற கனிமங்கள் இல்லாத பற்பசையாக பார்த்து வாங்குங்கள். அவை நாய்களுக்கு விஷத்தன்மையை உண்டாக்கி விடும்.

விளையாட்டு பொருட்களை மெல்லுதல்

நாய்க்குட்டியின் பற்களுக்கு பயிற்சி கொடுப்பது நல்ல ஐடியாவே. பல வித சிந்தடிக் எலும்புகள் மற்றும் மென்மையான விளையாட்டு பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது. உங்கள் நாய்க்குட்டி பொருட்களை கடிக்க ஆரம்பிக்கும் நேரத்தில், இவ்வகை பொருட்களை அதற்கு வாங்கிக் கொடுங்கள். அப்பொருட்களை மெல்ல விடுங்கள். இப்படி செய்வதால் அதன் பற்கள் திடமானதாக மாறும். அதனால் பாதுகாப்பான பொருட்களை வாங்குவதில் கவனம் தேவை.

கால்நடை மருத்துவரிடம் சீரான முறையில் செல்லுதல்

உங்கள் நாயின் மூச்சுக் காற்றில் திடீரென கெட்ட வாடை வீசினால், அல்லது அதன் உணவு பழக்கத்தில் திடீர் மாறுதல் ஏற்பட்டால், உடனே கால்நடை மருத்துவரை அணுகுங்கள். எப்படி இருந்தாலும், பல் மருத்துவரை சீரான முறையில் சென்று சந்திக்க வேண்டும். அதற்கு காரணம் அதனால் வெளிக்காட்ட முடியாத வலிகளை அது அனுபவித்து வரலாம்.

English summary

Dental Care Tips For Pups

It is advice that along with your visit to the dentist, make sure you follow a few dental care tips for pups which will make its teeth healthy.