Just In
- 3 hrs ago
இன்றைய ராசிப்பலன் (05.03.2021): இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் பரபரப்பான நாளா இருக்குமாம்…
- 14 hrs ago
ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..!
- 14 hrs ago
முகத்தில் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த காரணங்களுக்காக பருக்கள் உருவாகும் தெரியுமா?
- 14 hrs ago
இன்றைய உலகை வடிவமைத்த வரலாற்றில் வாழும் உண்மையான சிங்கப்பெண்கள்... சிலிர்க்க வைக்கும் வரலாறு...!
Don't Miss
- News
அதிமுகவில் வேட்பாளர்கள் தேர்வு விறுவிறுப்பு - மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ்,இபிஎஸ் ஆலோசனை
- Automobiles
மும்பை போலீஸ் அதிரடி... 151 புதிய கார்கள் பறிமுதல்... திடுக்கிடும் தகவலால் உறைந்துபோன வாகன ஆர்வலர்கள்!!
- Movies
சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா ?
- Sports
ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்!
- Finance
5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எவ்ளோ தேய்ச்சாலும் செம்பு பாத்திரம் மட்டும் பளீச்-னு ஆக மாட்டீங்குதா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…
காப்பர் அதாவது, தாமிரம் அல்லது செம்பு என்றழைக்கப்படுவதை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். பாத்திர கடைகளுக்கு சென்றால், அந்த பாத்திரங்கள் இருக்கும் பகுதி மட்டும் அப்படி ஜொலிக்கும். பார்த்தாலே வாங்க தோன்றும். அப்படி ஆசைப்பட்டு அந்த பாத்திர வகையிலேயே ஏராளமான வகைகளை வாங்கி குவிப்பவர்களும் உண்டு. பார்ப்பதற்கு மட்டும் அவை அழகு அல்ல, அவற்றின் ஆரோக்கிய பலன்களும் அழகு தான். பல நன்மைகளை அவை வாரி வழங்குகின்றன. அவற்றில் நீர் குடிப்பது, சாப்பிடுவது மற்றும் சமைப்பது என எப்படி உபயோகித்தாலும் நன்மை நமக்கு தான்.
ஓர் நாள் இரவு முழுவதும் செம்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி வைத்து, தினமும் காலை வெறும் வயிற்றில் அந்த நீரை குடித்து வந்தால், பல்வேறு உள்ளுறுப்புகளுக்கும் நல்லது, வளர்சிதை மாற்றமும் நன்கு செயல்படும். மேலும், ஆயுர்வேதத்தின் படி, செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துவதால், மூன்று தோஷங்களான வாதம், கபம் மற்றும் பித்தம் மூன்றும் சீராக இருக்கும் என்று கூறப்படுகிறது. செம்பு பாத்திரத்தை வாங்குவது மட்டும் பெரியதல்ல, அவற்றை சிறந்த முறையில் பராமரிப்பதே பெரியது. ஏனென்றால், முறையாக பராமரிக்காவிட்டால், நாட்கள் செல்ல செல்ல செம்பு பாத்திரம் கறை படிந்து கருப்பு நிறமாக மாறிவிடும்.
MOST READ: நான்ஸ்டிக் தவா நீண்ட காலம் உழைக்க என்ன செய்யலாம்? இதோ சில டிப்ஸ்...
செம்பு பாத்திரத்தை எப்படி வாங்கினோமோ அப்படியே வைத்திருப்பது என்பது மிகவும் கடினமான வேலை. ஆனால், இனி அப்படி இல்லை. இங்கே கொடுக்கப்பட்டுள்ள 6 முறைகளை முயற்சி செய்து பாருங்கள். பழைய பாத்திரமா இப்படி ஜொலிக்கிறது என்று வாயடைத்து போய்விடுவீர்கள்.

எலுமிச்சை மற்றும் உப்பு
இவை இரண்டுமே சமையலறையில் எப்போதும் இருக்கும் பொருட்கள். இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து செம்பு பாத்திரத்தை தேய்க்க ஏற்ற ஒன்று. சிறிது உப்பை, எலுமிச்சை சாறுடன் சேர்த்து கலந்து செம்பு பாத்திரங்களை தேய்க்கவும். பாத்திரத்தின் அடியில், விளிம்புகளில் மட்டும் கறை சற்று அடர்த்தியாக படிந்திருக்கும். அந்த இடங்களில் உப்பு மற்றும் எலுமிச்சை பேஸ்ட்டை தேய்த்து ஒரு அரை மணிநேரம் ஊற விட்டு, பின்பு தேய்க்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் பாத்திரம் புதியது போல் ஜொலிக்கும்.

வினிகர்
வீட்டில் எலுமிச்சை இல்லாத பட்சத்தில் அதற்கு பதிலாக வினிகரை உபயோகிக்கலாம். எலுமிச்சை எப்படி உபயோகிப்பதோ அப்படியே தான் வினிகரையும் உபயோகிக்க வேண்டும். சிறிது வினிகரில் உப்பை சேர்த்து, கரைந்ததும் பாத்திரம் தேய்க்கவும்.

கெட்ச் அப்
கெட்ச் அப்பை எப்படி இதற்கெல்லாம் உபயோகிப்பது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், கெட்ச் அப்பில் உள்ள இயற்கை அமிலத்தன்மை செம்பு கறைகளை போக்கிடுவதில் சிறந்து செயல்படக்கூடியது. பாத்திரத்தின் மீது சிறிது கெட்ச் அப்பை தடவி சில நிமிடங்கள் ஊற விட்டு விடவும். பிறகு பாத்திரத்தை மிருதுவான ஸ்பாஞ்ச் கொண்டு தேய்த்தால் கறைகள் சுலபமாக நீங்கிவிடும். பாத்திரத்தை தேய்த்து கழுவிய பிறகு, சிறு துணியில் ஆலிவ் ஆயிலை தொட்டு, பாத்திரத்தின் மீது தடவவும். இப்படி செய்தால் நீங்களே வித்தியாசத்தை கண்கூடாக பார்க்கலாம்.

காப்பர் பாலிஷ்
இந்த காப்பர் பாலிஷை வீட்டிலேயே செய்து கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளலாம். அதற்கு முதலில், சிறிது மாவை, உப்பு மற்றும் சோப்பு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். அத்துடன், சிறிது வெள்ளை வினிகர், எலுமிச்சை சாறு மற்றும் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொண்டு ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு மட்டும் எடுத்துக் கொண்டு, மிதுவான ஸ்பாஞ்ச் உபயோகித்து செம்பு பாத்திரத்தை கறை படிந்த இடங்களில் தேய்க்கவும். பாத்திரத்தை கழுவிய பின்னர், மென்மையான துணி உபயோகித்து நன்கு துடைத்து வைத்திடவும்.

பேக்கிங் சோடா
செம்பு பாத்திரத்தை சுத்தம் செய்ய பேக்கிங் சோடா எப்போதுமே சிறந்தது. பேக்கிங் சோடாவுடன், எலுமிச்சை சாறு கலந்து உபயோகிக்கலாம் அல்லது வெறும் பேக்கிங் சோடாவை மட்டுமே கூட உபயோகிக்கலாம். செம்பு கறைகளை போக்குவதற்கு மிகவும் சுலபமான மற்றும் திறமையான ஒன்று என்றும் பேக்கிங் சோடாவை கூறலாம்.

வினிகர் மற்றும் மாவு
ஆரம்பத்தில் வினிகருடன் உப்பு சேர்த்து உபயோகிப்பது பற்றி பார்த்தோம். இப்போது, உப்புடன் சிறிது மாவை உபயோகிக்கலாம். ஒரு டேபிள் ஸ்பூன் உப்பை, ஒரு கப் வெள்ளை வினிகருடன் சேர்த்து கலந்து கொள்ளவும். அத்துடன், சிறிது மாவை சேர்த்து கலந்து பேஸ்ட் பதத்தில் கலந்து கொள்ளவும். தயாரித்த பேஸ்ட்டை செம்பு பாத்திரத்தில் கறை படிந்த இடங்களில் தடவி, ஒரு 15 நிமிடங்கள் ஊற விடவும். பின்பு, வெதுவெதுப்பான நீர் கொண்டு பாத்திரத்தை கழுவவும்.