For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்ல மூட்டைப்பூச்சி தொல்லையா?... இத செஞ்சா போதும் மொத்தமா காலி பண்ணிடலாம்...

|

நம் நிம்மதியான தூக்கத்தை இந்த மூட்டை பூச்சிகள் வெகு விரைவில் கெடுத்து விடுகிறது . இந்த பூச்சியால் எந்த வித நோயும் பரவாவிட்டாலும் சரும அழற்சியை இது ஏற்படுத்தி விடும். இந்த மூட்டை பூச்சிகள் பகலை விட இரவில் தான் அதிக சுறுசுறுப்பாக செயல்படுமாம்.

கடிபட்ட இடத்தில் ஆன்டி க்ரீம் பயன்படுத்தினால் ஓரளவுக்கு நிவாரணம் கிடைக்கும். இருப்பினும் கெமிக்கல் இல்லாத வீட்டு வைத்தியங்கள் செய்தால் நமது சருமத்திற்கு நல்லது. அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கவுன்டர் தெரபி

கவுன்டர் தெரபி

மூட்டை பூச்சிகளின் கடியின் வீரியத்தை பொருத்து அதற்கு சிகச்சை அளிக்கப்படுகிறது. இந்த சரும அழற்சி 1-2 வாரங்களில் சரியாகி விடும். ஆனால் கடிபட்ட இடத்தில் ஏற்படும் அரிப்பு படிப்படியாக சரும தொற்றை ஏற்படுத்தி விடும். எனவே உடனடியாக டைபென் ஹைட்ரேமைன் அல்லது கார்டிசோன் அடங்கிய ஆன்டி கேலமைன் லோசனை உடனடியாக சருமத்திற்கு அப்ளே செய்யலாம். இந்த க்ரீமை கண்களில், பிறப்புறுப்பு பகுதிகளில் தடவ வேண்டாம்.

இந்த மருந்து சரும அரிப்பை தடுத்து சரும தொற்று ஏற்படாமல் காக்கிறது. காயப்பட்ட சருமத்தில் இந்த க்ரீமை பயன்படுத்த வேண்டாம். சருமம் சிவந்து காணப்பட்டாலும் க்ரீமை பயன்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. டைபென்ஹைட்ரேமைன் டானிக் கூட எடுத்துக் கொள்வது அரிப்பை குறைக்கும்.

MOST READ: மாரடைப்பு வர்றதுலயும் ஆண் - பெண் வித்தியாசம் இருக்காம்... எப்படி வரும் என்ன அறிகுறிகள்னு தெரிஞ்சிக்க

மருந்துகள்

மருந்துகள்

ஜோனாலன் மற்றும் ப்ரூடோக்ஸின் (டோக்சீபின்) போன்ற க்ரீம்கள் உள்ளன. இதன் ட்ரைசைக்ளிக் ஆன்டிடிப்ரஸன் அரிப்பிற்கு காரணமான ஹிஸ்டமைனை குறைக்கிறது. கார்டிசோன் க்ரீம் கூட பயன்படுத்தலாம். ஆண்டிஹிஸ்டமைன் மருந்தும் சிறந்தது.

சரும தொற்று ஏற்பட்டு இருந்தால் ஆன்டி பயாடிக் பரிந்துரைக்கப்படுகிறது. பாக்டிர்பன் (முப்பிரோசின்) போன்ற ஆன்டி பயாடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சரும தொற்று தீவிரமாக காணப்பட்டால் அனபிலாக்ஸிஸ், ஆண்டிஹிஸ்டமைன், கார்ட்டிகோ ஸ்டீராய்டுகள்போன்ற ஊசிகள் போடப்படுகின்றன.

வீட்டு வைத்தியங்கள்

வீட்டு வைத்தியங்கள்

உங்கள் வீட்டில் மூட்டை பூச்சி தொல்லை அதிகமாக இருந்தால் உடனடியாக அதை விரட்ட வேண்டும். பூச்சிகளை விரட்டும் நிபுணர்களை வைத்து இதை ஒழிக்கலாம். அப்படி இல்லையென்றால் போதுமான பாதுகாப்புடன் மூட்டை பூச்சி மருந்து வாங்கி அடிக்கலாம்.

வீட்டை தயார்ப்படுத்தல்

வீட்டை தயார்ப்படுத்தல்

முதலில் மூட்டை பூச்சிகள் இருக்கும் வீட்டின் பகுதிகளை கண்டறிய வேண்டும். கண்டுபிடித்த பிறகு அந்த அறையில் இருந்து எதையும் எடுத்துச் செல்ல கூடாது. ஏனெனில் வீட்டில் உள்ள எல்லா பர்னிச்சர்களிலும் அது இருக்க வாய்ப்புள்ளது. இப்பொழுது அறையில் உள்ள பொருட்களை ஒழுங்குபடுத்தி பெஸ்ட் கண்ட்ரோல் ஆட்களை கூப்பிடலாம். கெமிக்கல் அல்லாதது.

வெப்ப சிகிச்சை

வெப்ப சிகிச்சை

1 20 Fக்கில் சூடுபடுத்தும் போது மூட்டை பூச்சி இறந்து விடும். எனவே மூட்டை பூச்சி உள்ள பொருட்களை 120F வெப்பத்தில் சூடாக்கப்பட்ட நீரில் போட்டு சுத்தம் செய்யலாம். துணிகளை இந்த மாதிரி 30 நிமிடங்கள் சூடான நீரில் போட்டு சுத்தம் செய்தால் நல்லது. ஒரு கருப்பு பிளாஸ்டிக் பேக்கில் போட்டு 24 மணி நேரம் சூரிய ஒளியில் காய விடலாம். வீட்டில் உறவினர்கள் கொண்டு வரும் லக்கேஜ் போன்றவற்றில் கூட இந்த பூச்சிகள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த வெப்ப சிகச்சைகள் மூட்டை பூச்சிகளை அழிக்க உதவியாக இருக்கும்.

MOST READ: நம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க

படுக்கை விரிப்புகள்

படுக்கை விரிப்புகள்

பொருட்களை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு 0F குளிரில் 7 நாட்களுக்கு உறைய வைக்கவும். ப்ரீஷர் பயன்படுத்தி இதை செய்யலாம்.

மூட்டை பூச்சிகள் நுழையாத படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் போன்றவை கிடைக்கின்றன. மேலும் மூட்டை பூச்சிகளை விரட்டும் பொருட்களை கட்டிலினின் ஒவ்வொரு கால்களில் கூட வைத்துக் கொள்ளலாம். அதே மாதிரி கட்டில் 6 அங்குலம் சுவற்றிலிருக்து தள்ளி இருக்க வேண்டும். இப்படி செய்தால் மூட்டை பூச்சிகள் கட்டிலை நெருங்காது.

சில பூச்சி மருந்துகள் இநத மூட்டை பூச்சிகளை ஒழிக்க பயன்படுகிறது. இந்த கெமிக்கல்கள் மூட்டை பூச்சிகள் படுக்கை விரிப்பை அடையாமல் தடுக்க உதவுகிறது.

டெசிகேன்ட்ஸ்

டெசிகேன்ட்ஸ்

இதில் டயோடோமேக்சஸ் மற்றும் போரிக் அமிலம் உள்ளது. இது EPA ஆல் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்தாக செயல்படுகிறது.

குளிர்விக்கப்பட்ட வேப்பெண்ணெய் கூட பூச்சி விரட்டியாக பயன்படுகிறது.

குளோபெனபியர் போன்றவை பூச்சியின் செல்களை பாதித்து அதை விரட்டியடிக்கிறது.

நியோகோடினாய்டுகள் போன்ற நிக்கோடின் பூச்சியின் நரம்பு மண்டலத்தை பாதித்து அதை விரட்டுகிறது.

பூச்சி வளர்ச்சி கட்டுப்பாடு பூச்சியின் ஹார்மோனை பாதித்து அவற்றின் வளர்ச்சியை சீர்குலைக்கிறது.

தடுக்கும் முறைகள்

தடுக்கும் முறைகள்

பூச்சி விரட்டும் பொருட்களான எலும்பிச்சை, யூகாப்லிப்ட்ஸ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். பழைய பர்னிச்சர், பழைய கட்டில்கள் வாங்கும் போது கவனமாக வாங்க வேண்டும். ஆடைகளை சுத்தமாக துவைத்த பிறகு அணியுங்கள். தலையணை உறைகள், மெத்தைகள் எல்லாவற்றையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். படுக்கை அறை சுவற்றில் உள்ள விரிசல்கள், இடுக்குகளை அடைத்து விடுங்கள்.

MOST READ: நம்ம ரௌடி பேபி அறந்தாங்கி நிஷா பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யங்கள் இதோ...

பயணங்கள் செய்யும்போது

பயணங்கள் செய்யும்போது

பயண நாட்களில் ஹோட்டல்களில் இருக்கும் போது கூட ஆடைகளை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு சீக்கிரம் வீட்டில் வந்து துவைத்து விடுங்கள். சூடான நீர், சோப்பு கொண்டு அலசவுது நல்லது.

லக்கேஜ் பேக் இடுக்குகள் ஒன்னு விடாமல் கழுவி சுத்தம் செய்து விடுங்கள்.

மூட்டை பூச்சி கடி தொந்தரவு இருந்தால் தூக்கமின்மை, அனிஸ்சிட்டி, மன அழுத்தம் ஏற்படும். எனவே படுக்கை அறையை சுத்தமாக வைப்பதோடு மூட்டை பூச்சி கடிக்கு நிவாரணம் அளித்து அதை உடனடியாக விரட்ட முற்பட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: home
English summary

how to get rid of Bedbugs completly

If you have been bitten by bedbugs, the good news is that they aren't associated with any disease. You need only to avoid scratching the bites and getting a skin infection. Anti-itch creams may help. Treating your home or possessions to eliminate an infestation is more of a challenge, and you may need both nonchemical and chemical treatments.
Story first published: Tuesday, January 22, 2019, 18:10 [IST]