For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழைமரத்தை பத்திரமா பாத்துகோங்க...கூன் வண்டு அதிகம் தாக்குது!

By Maha
|

Take care of banana tree from beetle attack
கோடை காலத்தில் வீட்டில் வளர்க்கும் வாழைமரத்தை கூன் வண்டு அதிகமாக தாக்குகிறது. இது தாக்கினால் வாழையின் வளர்ச்சி பாதிக்கப்படும். இந்த கூண் வண்டுக்கு கிழங்குக் கூண் வண்டு என்றும் பெயர் உண்டு. இந்த கூன் வண்டு கருமை நிறத்தில், நீளமான மூக்கோடு காணப்படும். இந்த கிழங்கு கூண் வண்டு, கிழங்குகளின் மூலம் பரவுவதால் நடுவதற்கு பயன்படுத்தப்படும் கிழங்குகள், கன்றுகள் மூலமாகப் பரவும். ஆகவே நல்ல தரமானதா என்று பார்த்து பின் கன்றுகளை நட வேண்டும்.

கூன் வண்டால் தாக்கப்பட்ட கன்றின் நான்குப் பக்கங்களிலும் ஓட்டைகள் அல்லது குழிகள் ஏற்படும். கன்றுகள் அதிகம் தாக்கப்பட்டால், அவை அழுகி விடும். வண்டு தாக்கப்பட்டால், மரங்களுக்கு சத்து செல்வது தடைப்பட்டு, இலைகள் பழுத்து, உதிர ஆரம்பிக்கும். பின் சீப்புகளின் எண்ணிக்கை குறைந்து, பழங்கள் சிறுத்து காணப்படும். அதுமட்டுமல்லாமல் சற்று காற்று அடித்தால் கூட, மரம் அடியோடு சாய்ந்து விடும். இப்படிப்பட்ட இந்த கூன் வண்டை எப்படி கட்டுப்படுத்தலாம்-னு பார்க்கலாமா!!!

கூன் வண்டை கட்டுப்படுத்தும் வழிகள் :

வாழைக்கன்றுகளை நடும் முன், ஒரு லிட்டர் தண்ணீரில் 14 மி.லி. மோனோகுரோட்டோபாஸ் கலந்து, கன்றுகளை அதில் நனைத்து பின் நட வேண்டும்.

வண்டுகள் அடுத்தடுத்து மரங்களுக்குப் பரவமால் இருக்க, வெட்டப்படாமல் உள்ள பழைய வாழை மரங்கள், கழிவுகள், களைகள் மற்றும் காய்ந்த இலைகளை நீக்கி தோட்டத்தை சுத்தமாக வைத்தால் பரவாது.

கன்றுகளை நடும் முன், வண்டுகள் இருக்கிறதா என்று அறிய, வெட்டும் நிலையில் இருக்கும் வாழை மரத்தை நீளவாக்கில் இரண்டாகப் பிளந்து, பிளவுபட்ட பகுதியை தரையை நோக்கி வைத்து வண்டுகளின் நடமாட்டத்தை கண்டறியலாம். அப்படி வண்டுகள் இருந்தால் தொடர்ச்சியாக வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழித்து விடலாம்.

வெட்டப்பட்ட பழைய மரங்களின் வெட்டப்பட்ட பகுதியைக் களிமண் கொண்டு பூசிவிட்டு, புதிய கன்றுகளை நட்டால் மிகவும் நல்லது. இதனால் பெண் வண்டுகள் முட்டையிடுவதைத் தடுக்கலாம்.

மேலும் இந்த வண்டுகளை கட்டுப்படுத்த காஸ்மோலியூர் என்ற கிழங்கு கூண் வண்டு இனக்கவர்ச்சிக் பொறிகளைப் பயன்படுத்தி வண்டுகளைக் கவர்ந்து கட்டுப்படுத்தலாம்.

English summary

Take care of banana tree from beetle attack | வாழைமரத்தை பத்திரமா பாத்துகோங்க...கூன் வண்டு அதிகம் தாக்குது!

banana tree is one of the houseplant. in summer, some kind of beetle attacked that banana tree. so lot of banana trees are spoiled. now we have some ways to taking care of a banana tree.
Story first published: Tuesday, May 29, 2012, 17:49 [IST]
Desktop Bottom Promotion