For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி 2020: தூக்கி எறியும் பொருட்களைப் பயன்படுத்தி வீட்டை அலங்கரிக்க சில டிப்ஸ்...

உங்கள் வீட்டில் இருக்கும் தூக்கி எறியவிருக்கும் பொருட்களைப் பயன்படுத்த விரும்பினால், இங்கே சில சரியான தீபாவளி அலங்கார யோசனைகள் உள்ளன. இந்த தீபாவளி பண்டிகையில், தூக்கி எறியும் பொருட்களைப் பயன்படுத்தி அ

|

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 14 அன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்பது விளக்குகள் மற்றும் வண்ணங்களின் பண்டிகை. இந்த தீபாவளியில் , கழிவுப்பொருட்களை அல்லது வேண்டாம் என்று நீங்கள் தூக்கி எறிய விரும்பும் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வீட்டில் கவர்ச்சியையும் ஒளியையும் சேர்க்கலாம் ! இன்றைய நாட்களில் குறைந்த பட்ஜெட்டில் விழாவைக் கொண்டாடுவது தான் மக்களை அதிகம் ஈர்க்கிறது.

நீங்கள் குறைவாக செலவழித்து, உங்கள் வீட்டில் இருக்கும் தூக்கி எறியவிருக்கும் பொருட்களைப் பயன்படுத்த விரும்பினால், இங்கே சில சரியான தீபாவளி அலங்கார யோசனைகள் உள்ளன. இந்த தீபாவளி பண்டிகையில், தூக்கி எறியும் பொருட்களைப் பயன்படுத்தி அலங்காரத்தை நேர்த்தியாகக் கையாள வேண்டும்.

Diwali

பொதுவாக வீட்டில் பயன்படுத்த முடியாத பழைய உடைந்த பொருட்கள் இருந்தால் அவற்றை அகற்றிவிடுவது நல்லது. ஒருவேளை அந்தப் பொருட்களைக் கொண்டு உபயோகமான சிலவற்றை செய்யமுடியுமென்றால் புத்திசாலித்தனமாக யோசித்து அதனை செய்ய வேண்டும்.

MOST READ: தீபாவளியன்று வீட்டில் லட்சுமி கடாட்சம் பெற சில அலங்கார டிப்ஸ்கள்!

இந்த தீபாவளி வீட்டு அலங்கார உதவிக் குறிப்புகள் தயார் செய்வது எளிது, ஆனால் நேரம் அதிகம் செலவாகும். வீட்டில் தேவையில்லாமல் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்யும் இந்த தீபாவளி அலங்காரப் பொருட்களை வடிவமைக்க உங்களுக்கு நிறைய பசை, க்ளிட்டர் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படும்.

தூக்கி எறியும் பொருட்களைப் பயன்படுத்தி தீபாவளி அலங்காரத்திற்கான சிறந்த குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீபாவளி விளக்குகள்

தீபாவளி விளக்குகள்

தீபாவளி விளக்குகளை உருவாக்க பிளாஸ்டிக் பாட்டில்கள் சிறந்த தேர்வாகும். பாட்டிலின் கழுத்து பகுதிக்கு கீழே கத்திரிக்கோலால் வெட்டிக் கொள்ளுங்கள். பாட்டிலின் மேல்பகுதியில் வழக்கமான இடைவெளியில், இதழின் அடுக்குகள் போல் வெட்டவும். இதழின் அடுக்குகள் இயற்கையில் கடினமாக இருக்கிறதா என்பதை அறிய தலைகீழாக மாற்றவும். இதழ்களின் மேல்புறம் மற்றும் கழுத்து பகுதியின் உட்புறம் சிறிது க்ளு தடவவும். முழு பாட்டீலுக்கும் க்ளிட்டர் தடவவும். ஒரு இரவு முழுவதும் உலரவிடவும். உங்கள் படைப்பாற்றலை மேலும் மெருகேற்ற ஏதேனும் பெயிண்டிங் செய்யலாம்.

மெழுகுவர்த்தி அலங்காரம்

மெழுகுவர்த்தி அலங்காரம்

உங்கள் வீட்டில் நிறைய உதிரி மெழுகுவர்த்திகள் இருந்தால், இந்த தீபாவளியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பண்டிகை காலங்களில் உங்கள் வீட்டை ஒளிரச் செய்ய உங்களுக்கு நிறைய விளக்குகள் தேவைப்படும். அகல் விளக்குகளுக்கு மாற்றாக இவற்றை நீங்கள் பயன்படுத்தலாம். உங்களுக்கு தேவையானது உலர்ந்த இலைகள் மற்றும் பெயிண்ட் மட்டுமே.

அனைத்து வடிவிலான உலர்ந்த இலைகள் மற்றும் பூக்கள் சிலவற்றைச் சேகரிக்கவும். துடிப்பான வண்ணங்களைப் பயன்படுத்தி இலைகள் மற்றும் பூக்களை பெயிண்ட் செய்யுங்கள். உலர்ந்ததும், அவற்றை மெழுகுவர்த்தியில் ஒட்டவும். இந்த தீபாவளி அலங்கார யோசனையைப் பயன்படுத்தி, ஒவ்வொரு மெழுகுவர்த்திக்கும் வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களைச் சேர்க்கவும்.

விளக்குகள்

விளக்குகள்

இந்த தீபாவளிப் பண்டிகைக்கு கண்ணாடி விளக்குகள் மூலம் உங்கள் இல்லத்திற்கு ஒளியேற்றுங்கள். தேவையான பொருட்கள் பழைய சிடி அல்லது டிவிடி, கூழாங்கற்கள் அல்லது வண்ணமயமான கற்கள், வாசனை மெழுகுவர்த்திகள் மற்றும் பசை. சி.டி.யை ஒரு தட்டையான மேற்பரப்பில் வைக்கவும். சிடியின் விளிம்பைச் சுற்றி ஒரு அடுக்கு பசை சேர்க்கவும். இப்போது மெதுவாக ஒவ்வொரு கூழாங்கல்லாக எடுத்து ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிக் கொன்டே வரவும். கூழாங்கற்களால் ஆன சுவரை ஒரு குறிப்பிட்ட உயரம் அடுக்கிக்கொன்டே வரவும். வாசனை மெழுகுவர்த்தியை நடுவில் வைத்து நெருப்பை பற்ற வைக்கவும். இந்த தீபாவளியுடன் உங்கள் வீட்டை அலங்கரிக்கும் மிக அழகான கண்ணாடி விளக்குகளில் இதுவும் ஒன்றாகும்.

ஸ்வீட் பேப்பர் டிஷ்

ஸ்வீட் பேப்பர் டிஷ்

தீபாவளி என்பது நீங்கள் நிறைய இனிப்புகளை பரிமாறிக்கொள்ளும் ஒரு திருவிழா. உங்கள் வீட்டிற்கு வருகை தரும் சிறப்பு நபருக்கு வீட்டில் சாக்லேட்டுகளுடன் கையால் செய்யப்பட்ட இனிப்பு பெட்டியை பரிசளிப்பதன் மூலம், அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். தூக்கி எறியும் பொருட்களைப் பயன்படுத்தி இந்த தீபாவளி அலங்காரத்தை உருவாக்குவது எளிதானது, ஆனால் நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்ளும். உங்களுக்கு தேவையானது ஒரு சார்ட் பேப்பர், ஒரு கத்தரிக்கோல் மற்றும் அலங்காரங்கள் (சீக்வின்ஸ், மணிகள் மற்றும் பொட்டு).

பட்டாசு

பட்டாசு

இந்த தீபாவளியில் பட்டாசுகளை வெடிக்காமல் சுற்றுச்சூழலைக் காப்பாற்றுங்கள். திருவிழாவின் மகிழ்ச்சியைப் பரப்புவதற்கு, வீட்டில் காகித பட்டாசுகளை உருவாக்கி, உங்கள் லிவிங் ரூமை அலங்கரிக்கவும். தூக்கி எறியும் பொருட்களைப் பயன்படுத்தி வண்ணமயமான காகித பட்டாசுகளை தயாரிக்க பல்வேறு வழிகள் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diwali 2020: Decoration Ideas To Elevate The Decor Of Your House Using Waste Materials

Diwali is a festival of lights and vibrant colours. This Diwali, add glamour and light in your home by making use of waste materials or scrap! Celebrating this festival on a low budget is what attracts a lot of people today.
Desktop Bottom Promotion