இந்த தீபாவளிக்கு வாசல்ல கோலம் போட, அசத்தும் டிசைன்கள்!!

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

தீபாவளி ஒளியின் திருநாளாகும். அதே நேரத்தில் கலர்புல்லான வண்ணங்களுடனும் தீபாவளியை கொண்டாடி மகிழ்வர். அழகான வண்ண தோரணங்கள், வண்ண பூக்கள் மற்றும் இலைகள் என்று எங்கு பார்த்தாலும் வண்ணமயமாக திகழும் நன்னாள் தான் இந்த தீபாவளி. இந்த தீபாவளி நாளில் வீட்டு வாசலில் எல்லோருக்கும் வாழ்த்து சொல்லும் விதமாக போடும் ரங்கோலி கோலங்களும் வர்ண ஜாலம் வீசிச் செல்லும்.

ரங்கோலி என்ற வார்த்தை "ரங்" இதற்கு பொருள் வர்ணம் என்றும் "ஆவலி" என்பதன் பொருள் கோடுகள் அல்லது வடிவம் என்று பொருள் பெற்றுள்ளது. இந்த ரங்கோலி போடும் பழக்கம் நம் இந்திய பாரம்பரிய காலத்திலிருந்து பின்பற்றப்படுகிறது. அப்பொழுது அரிசி மாவு மற்றும் கலர்புல்லான பொடிகளை கொண்டு தங்கள் வாசலை அலங்கரிப்பர்.

 Best Rangoli Designs For Diwali

இந்த பண்டிகை சமயங்களில் எல்லாரும் ரங்கோலி போடுவதற்கு பயிற்சி மேற்கொண்டு இருப்பீர்கள். எனவே ரெம்ப புகழ்பெற்ற அழகான ரங்கோலி டிசைன்களை பற்றி இக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.

இந்த ரங்கோலி கோலங்கள் வீட்டினுள் லட்சுமி கடாட்சத்தை வரவழைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த ரங்கோலி கோலங்களுக்கு பயன்படுத்தப்படும் மாவு அரிசி மாவு, சுண்ணாம்பு மற்றும் இயற்கை கலர்களை கலந்து செய்யப்படுகிறது. தற்போது இந்த கலர் பொடிகள் மார்க்கெட்டில் நிறையவே கிடைக்கின்றன. ரங்கோலிக்கான டிசைன் வடிவம் கைகளில் போடப்பட்டது ஆனால் இப்பொழுது இதற்கு டென்ஸில்ஸ் மற்றும் நிறைய கருவிகள் வந்துள்ளன. இந்த ரங்கோலி டிசைன்கள் சாதாரண டிசைனிலிருந்து பல வண்ணங்களுடன் பாரம்பரிய வடிவங்களில் என்று நிறைய விதமான வடிவங்களில் போடப்படுகிறது.

சரி வாங்க தீபாவளிக்கான ஸ்பெஷல் வர்ண ஜால ரங்கோலிகளை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாரம்பரிய ரங்கோலி

பாரம்பரிய ரங்கோலி

இந்த பாரம்பரிய ரங்கோலி முறை அரிசி மாவு அல்லது சுண்ணாம்பு பொடி கொண்டு போடப்படுகிறது. உங்களிடம் கலர் பொடி இல்லாவிட்டால் இந்த டிசைனை நீங்கள் முயற்சி செய்யலாம். இந்த டிசைன் போடுவதற்கு புள்ளிகளை இணைத்து கோடுகள் போடப்பட்டு டிசைன் வடிவம் பெறுகிறது. இது மிகவும் அழகான பார்வையை கொடுக்க கூடிய எளிமையான கோலம் ஆகும்.

சுருக்கமான ரங்கோலி டிசைன்

சுருக்கமான ரங்கோலி டிசைன்

இந்த தீபாவளிக்கு உங்கள் உறவினர்களை வரவேற்க விரும்பினால் இந்த டிசைனை தேர்ந்தெடுங்கள். இதன் அடர்ந்த வண்ணங்களுடன் தனித்துவமான இதன் அழகு கண்டிப்பாக எல்லாரையும் கவரும். பெரிய பூவை சுற்றியுள்ள தனித்துவமான இதன் கலர்புல் டிசைன் பளிச்சென்று ஒரு பார்வையை வீசிச் செல்லும். என்னங்க இந்த ரங்கோலியை தீபாவளிக்கு ட்ரை பண்ணி எல்லாரையும் அசத்துங்கள்.

கடவுள் உருவ ரங்கோலி

கடவுள் உருவ ரங்கோலி

இந்த தீபாவளிக்கு உங்கள் விருப்பமான கடவுளை வரைந்து இந்த ரங்கோலி டிசைனை பண்ணலாம். இந்த ரங்கோலியில் நாங்கள் கடவுள் விநாயகரை பயன்படுத்தி இருப்பது போல் உங்களுக்கு விருப்பமான கடவுளை தேர்ந்தெடுக்கலாம். கடவுள் கிருஷ்ணர், துர்கா தேவி இப்படி புகழ்பெற்ற கடவுளை வரைந்து அசத்தலாம்.

ஆரம்பநிலைக்காரர்களுக்கான ரங்கோலி டிசைன்

ஆரம்பநிலைக்காரர்களுக்கான ரங்கோலி டிசைன்

இந்த டிசைன் போடுவதற்கு எளிதாக இருந்தாலும் கண்டிப்பாக எல்லாருடைய பாராட்டையும் பெற்று விடும். யாருக்கெல்லாம் குறைந்த இடமுள்ள முற்றம் இருக்கிறதோ அவர்களுக்கு இந்த டிசைன் பயனுள்ளதாக இருக்கும். எளிதாக உங்கள் விரல்களைக் கொண்டே வெள்ளை கோலப் பொடி மற்றும் கலர் பொடிகளை கொண்டு இதை வடிவமைத்து விடலாம்.

பூ ரங்கோலி

பூ ரங்கோலி

கலர் பொடிகளை கொண்டு ரங்கோலி போடக் கஷ்டப்படுபவர்களுக்கு இந்த பூ ரங்கோலி கண்டிப்பாக பயனளிக்கும். ஏனெனில் பூக்கள் நிறைய வண்ணங்களில் இருப்பதோடு இதை அழகாக வடிவமைக்கவும் மிகவும் எளிது. கலர் இணைகளை பார்த்து பூக்களை பயன்படுத்தினால் மட்டும் போதும் உங்கள் ரங்கோலி பூக்களின் ஓவியமாக ஜொலிக்கும். இது மட்டுமா உங்கள் இல்லமும் பூக்களின் நறுமணத்தில் கமழும்.

 வடிவியல் ரங்கோலி டிசைன்

வடிவியல் ரங்கோலி டிசைன்

பார்த்தவுடனே கண்களுக்கு விருந்தளிக்கக்கூடிய இந்த டிசைனை ஈஸியாக செய்து விடலாம். சில கூர்மையான கோடுகளுடன் வடிவமைப்பு செய்தால் போதும். கொஞ்சம் அடர்ந்த நிறங்களை பயன்படுத்தும் போது பார்ப்பதற்கு லுக்காக இருக்கும். இந்த தீபாவளிக்கு இந்த ரங்கோலி டிசைனை வரைந்து எல்லோர் கண்களுக்கும் விருந்தளியுங்கள்.

பாசிகள் மற்றும் முத்துக்கள் நிறைந்த ரங்கோலி

பாசிகள் மற்றும் முத்துக்கள் நிறைந்த ரங்கோலி

இந்த தீபாவளிக்கு கொஞ்சம் கம்பீரமான பார்வையை எதிர் பார்த்தீங்கள் என்றால் அதற்கு இந்த டிசைன் ரங்கோலி பயனுள்ளதாக இருக்கும். முதலில் இந்த டிசைனை கலர் பொடி கொண்டு வரைந்து பிறகு பாசிகள், முத்துக்கள் மற்றும் கலர்புல் ஸ்டோன்களை கொண்டு அதன் பார்டர்களை ஹைலைட் செய்து அசத்தலாம்.

 கலர்புல் அரிசி ரங்கோலி

கலர்புல் அரிசி ரங்கோலி

இது ஒரு தனித்துவமான டிசைன் ஆகும். இதற்கு அரிசியை வித விதமான கலரிங் செய்து பயன்படுத்துகின்றனர். இந்த டிசைன் ஒரு அழகான வடிவமைப்பை கொடுக்கிறது. மேலும் அரிசியை இகொண்டு வடிவமைப்பது பக்தியின் வடிவமாக பார்க்கப்படுகிறது. இதில் கடவுள் விநாயகர் வடிவம் இடம் பெற்றிருக்கிறது.

பார்டர் ரங்கோலி

பார்டர் ரங்கோலி

இந்த மாதிரியான ரங்கோலி டிசைன் அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பவர்களுக்கு வசதியாக இருக்கும். ஏனெனில் இதை வடிவமைக்க குறைந்த இடம் போதுமானது. எளிதான கலர்புல்லான ரங்கோலியை ஈஸியாக உங்கள் வீட்டின் நுழைவாயிலில் வரைந்து விடலாம். இது உங்களை பண்டிகை சந்தோஷத்திற்கு கொண்டு சென்று விடும்.

பாதி ரங்கோலி

பாதி ரங்கோலி

இந்த ரங்கோலி நெருக்கடியான அடுக்கு மாடி குடியிருப்பில் வாழ்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது பார்டர் ரங்கோலியை விட பெரிதாக போன்று இருந்தாலும் இது உங்களுக்கு ஒரு ஆடம்பர லுக்கை கொடுக்கும். அதே சமயத்தில் குறைந்த அளவு இடம் இருந்தால் போதும்.

கண்னை மயக்கும் மயில் ரங்கோலி

கண்னை மயக்கும் மயில் ரங்கோலி

மயில் தம் தெய்வீக வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதன் வர்ணஜாலம் கண்டிப்பாக யாருக்கும் பிடிக்காமல் இருக்காது. அந்த அளவிற்கு கண்னை மயக்கும் அழகு மயிலின் நிறத்தில் உள்ளது. இது ஒரு புகழ்பெற்ற தீபாவளி ரங்கோலி டிசைனாகவும் இருந்து வருகிறது.

நல்ல அடர்ந்த நீல நிறத்துடனும் அழகான வடிவமைப்பில் நிறங்களை போடும் போது பேரழகு தரும். இதில் அழகாக அகல் விளக்கு ஏற்றி அதன் ஒளி நிழலில் இன்னும் இந்த ரங்கோலி டிசைன் ஆயிரம் கண்களை கவர்ந்து செல்லும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ALL IMAGE COURTESY 

English summary

Best Rangoli Designs For Diwali

Best Rangoli Designs For Diwali