For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரிக்கான சுவாரசியமான கொலு ஐடியாக்கள்!

By Ashok CR
|

கொலு என்பது ஒரு வகையான பொம்மை சீரமைப்பு. தமிழ் நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடாகாவில் கொண்டாடப்படும் தசரா மற்றும் நவராத்திரி திருவிழாவில் இது மிக முக்கிய பங்கை வகிக்கிறது. கொலு பொம்மைகள் வீட்டின் பரிசு பொக்கிஷங்களாக கருதப்படுகிறது.

இந்த கொலுக்கள் ஒரு தலைமுறையிடம் இருந்து மற்றொரு தலைமுறை என கடந்து கொண்டு வருகிறது. பாரம்பரிய முறையிலான கொலு பொம்மை அலங்கார ஸ்டைலை தவிர, இக்காலங்களில் நவராத்திரியின் போது பல்வேரு கொலு தீம் மீண்டு முக்கியத்துவம் தருகிறார்கள்.

பொதுவாக பெரும்பாலான வீடுகளில் பாரம்பரிய முறையில் தான் கொலு பொம்மைகள் வைக்கப்படுகிறது. மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது அல்லது பதினொன்று படிகளால் துர்கையம்மனின் அரசவை செய்யப்படும். "மரப்பாச்சி பொம்மைகள்" மற்றும் "ராஜா-ராணி" போன்றவைகள் கொலுவில் வைக்கப்படும் மிகவும் முக்கியமான பொம்மைகளில் சில.

கொலு அலங்காரத்தில் வைக்கப்படும் மற்றொரு முக்கியமான சிலை லட்சுமி தேவி. இவைகளை தவிர கொலுவுடன் சேர்ந்து ஒரு கலசமும் வைக்கப்படும். நவீன காலத்தில் நவராத்திரியின் போது பின்பற்றப்படும் பல்வேறு கொலு தீம்களை பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாரம்பரிய கொலு தீம்!

பாரம்பரிய கொலு தீம்!

நவராத்திரியில் பல்வேறு கொலு தீம் வந்த போதிலும் கூட பாரம்பரிய கொலு ஏற்பாடுகளை தான் இன்னமும் பல வீடுகளில் விரும்புகின்றனர். இத்தகைய தீமை நீங்கள் உருவாக்க, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஹிந்து புராணத்தில் இருந்து முதலில் ஒரு கதையை தேர்ந்தெடுக்க வேண்டும். அதனை ஒரு பேப்பரில் தோராயமாக ஓவியங்களாக வரைந்து கொள்ள வேண்டும்.

கதையை தேர்ந்தெடுத்த பின்னர் அதற்கான மற்றும் அந்த தீம்களுக்கு உயிர் கொடுப்பதற்கு தேவையான பொம்மைகள், பொருட்கள் மற்றும் பின்னணிகளை தேட வேண்டும். பொம்மைகளை கடைகளில் இருந்து வாங்கி கொள்ளலாம் அல்லது போதிய கால அவகாசம் இருந்தால் அவைகளை நீங்களே கூட செய்யலாம். கூடுதலாக, மரங்கள், விலங்குகள், காடுகள் மற்றும் ஆசிரமங்கள் போன்ற பின்னணியையும் உங்கள் தீமுக்கு ஏற்ப சேகரிக்க முயற்சி செய்யுங்கள்.

கிராம வாழ்க்கை தீம்!

கிராம வாழ்க்கை தீம்!

கிராம வாழ்க்கை தீம் என்பது நவராத்திற்கான சிறந்த கொலு தீம் ஐடியாக்களில் ஒன்றாக விளங்குகிறது. குளங்கள், காடு, நெல் வயல்கள் மற்றும் மரங்கள் என சுலபமாக இவைகளை நீங்கள் செய்யலாம்.

ஒரு நெல் வயலை உருவாக்க, பழைய தட்டையான கிண்ணத்தை எடுத்து, அதில் கொஞ்சம் நெல்லையும் மண்ணையும் நிரப்பிக் கொள்ளுங்கள். நெல் வேகமாக வளர்ந்து விடும். தெர்மாகோல் மற்றும் கார்ட்போர்ட்களை பயன்படுத்தி மரங்களை செய்து கொள்ளவும்.

திருமண தீம்!

திருமண தீம்!

நவராத்திரியின் போது பல்வேறு கொலு தீம்களின் மத்தியில் திருமண தீமும் கூட கவரும் வண்ணமாக அமையும். இந்த தீமை உருவாக்க உங்கள் குழந்தைகளின் உதவியையும் கூட நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அவர்களுக்கு இது சுவாரசியமாக தெரியும். அவர்களை பொம்மைகளை அடுக்கி வைக்க சொல்லுங்கள். அவர்களிடம் இருக்கும் பொம்மைகளையும் கொண்டு வரச் சொல்லி உங்களின் தீமுடன் அதனை அடுக்கச் சொல்லுங்கள்.

காய்கறி செதுக்குதல் தீம்!

காய்கறி செதுக்குதல் தீம்!

கேரட், தண்ணீர் பலம், முள்ளங்கி, காலிஃபிளவர், கத்தரிக்காய், வெண்டிக்காய் போன்ற பல்வேறு காய்கறி வகைகளை கொண்டு இந்த தீமில் நீங்கள் பலவற்றை உருவாக்கலாம். நவராத்திரிக்கான கொலு தீம் ஐடியாக்களில் ஈர்க்கக்கூடிய கொலுக்கலில் ஒன்றாக இது அமையும்.

ஃபேரி டேல்ஸ் தீம்!

ஃபேரி டேல்ஸ் தீம்!

லிட்டில் ரெட் ரைடிங் ஹூட், சிண்ட்ரெல்லா அல்லது ஸ்னோ வைட் போன்ற புகழ்பெற்ற ஃபேரி டேல் கதையை தேர்ந்தெடுத்து, அதை கொண்டு ஒரு தீமை உருவாக்கலாம். இத்தகைய தீம் இளம் தலைமுறையினரை ஈர்க்கும். அவர்களிடம் இருந்து உங்களுக்கு பாராட்டையும் பெற்று தரும்.

உங்கள் தீமுக்கு ஏற்ப பல்வேறு பொருட்களை தேடி கண்டுப்பிடிக்க உங்கள் குழந்தைகளையும் அவர்களின் நண்பர்களையும் நீங்கள் இதில் ஈடுபடுத்தலாம். உங்களுக்கு போதிய கால அவகாசம் இருந்தால் உங்கள் படைப்பாற்றலுக்கு தீனி போடும் வகையில் நீங்களே இந்த பொம்மைகளை செய்யலாம்.

மைசூர் தசரா தீம்!

மைசூர் தசரா தீம்!

மைசூரில் உள்ள தசராவை குறிக்கும் வகையில் பொம்மைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். மத்தியில் ஒரு ராஜா ராணி பொம்மையை வைத்தது அவர்களுக்கு பின்புலமாக ஒரு அரண்மனையை வைக்கலாம். கொலு உயிர்ப்புத்தன்மையுடன் விளங்க கூடுதலாக பல பொம்மைகளையும் பொருட்களையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

மேற்கூறிய கொலு தீம் ஐடியாக்களை நீங்கள் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த நவராத்திரியை கூடுதல் சிறப்பாக்கவும். கடைகளில் இருந்து பொம்மைகளையும் பொருட்களையும் வாங்குவதற்கு பதிலாக இவைகளை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம். இது மற்றவர்களிடம் இருந்து பாராட்டுகளை பெற்று தருவதோடு மட்டுமல்லாது உங்கள் படைப்பாற்றலையும் கூர்மையாக்கும். இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள்? தனித்துவமான கொலு தீமை இந்த நவராத்திரியில் உருவாக்கிட தயாராகுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Golu Theme Ideas For Navratri

Interesting Golu Theme Ideas For Navratri
Desktop Bottom Promotion