For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளிக்கு வீட்டை பட்ஜெட்டிற்குள் அலங்கரிக்க சில டிப்ஸ்...

தீபாவளிக்கு அதிக பணம் செலவழித்து அனைவராலும் வீட்டை அலங்கரிக்க முடியாது. ஆகவே ஒருசில எளிமையான மற்றும் பட்ஜெட்டிற்குள் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு அழகாக வீட்டை அலங்கரிக்கலாம்.

|

தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் புத்தாடைகள், பட்டாசு போன்றவற்றை வாங்கிக் கொண்டிருப்போம். மேலும் இந்து பண்டிகைகளிலேயே அனைவருக்கும் மிகவும் பிடித்த பண்டிகை என்றால் அது தீபாவளி பண்டிகை தான். ஏனெனில் இந்த பண்டிகையன்று பட்டாசுகளுடன், வீட்டில் இனிப்புகளும் செய்யப்படும். அதுமட்டுமின்றி வீட்டிற்கு விருந்தினர்களின் வருகையால் வீடே குதூகலத்துடன் இருக்கும்.

இப்படி வீட்டிற்கு விருந்தினர்கள் வரும் போது, வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று பலர் விரும்புவார்கள். மேலும் விருந்தினர்கள் அதிசயிக்கும் வண்ணம் வீட்டை அலங்கரிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்காக நிறைய பேர் அதிக விலை கொடுத்து பல பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிப்பார்கள். ஆனால் இந்த மாதிரி அதிக பணம் செலவழித்து அனைவராலும் வீட்டை அலங்கரிக்க முடியாது. ஆகவே ஒருசில எளிமையான மற்றும் பட்ஜெட்டிற்குள் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு அழகாக வீட்டை அலங்கரிக்கலாம்.

இப்போது தீபாவளியன்று பட்ஜெட்டிற்குள் வீட்டை அழகுப்படுத்த உதவும் சில பொருட்களைப் பார்ப்போமா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலர் பேப்பர்

கலர் பேப்பர்

பிறந்த நாள் முதல் பண்டிகைகள் அனைத்தையும் கலர் பேப்பர் கொண்டு வேண்டியவாறு அலங்கரிக்கலாம். ஏனெனில் இது மிகவும் விலை மலிவில் கிடைக்கும் அலங்காரப் பொருட்களில் ஒன்றாகும்.

தொங்கும் விளக்குகள்

தொங்கும் விளக்குகள்

பல வண்ணங்களில், எம்பிராய்டரி போட்டிருக்கும் தொங்கும் விளக்குகளை வீட்டில் தொங்க விடுவதால், அழகாக இருப்பதோடு, பட்ஜெட்டிற்கு ஏற்றவாறும் இருக்கும்.

ரங்கோலி

ரங்கோலி

வீட்டிற்கு வெளியே மற்றும் ஹாலின் நடுலே அழகான ரங்கோலி கோலத்தைப் போட்டு, அதில் பூக்களை வைத்து அலங்கரிக்கலாம்.

சிலைகள்

சிலைகள்

வீட்டின் ஹாலின் நடுவே உள்ள டேபிளில் அழகான தெய்வ சிலையை வைத்து, அந்த சிலையைச் சுற்றி, தீபங்களை வைக்கலாம்.

தீபம்

தீபம்

தற்போது பல டிசைன்களில் தீபங்கள் வருகின்றன. அதிலும் பல்வேறு நிறங்களில் தீபங்கள் கிடைக்கின்றன. ஆகவே பிடித்த டிசைன் மற்றும் நிறத்தில் உள்ள தீபங்களைக் கொண்டும் வீட்டை அலங்கரிக்கலாம்.

பூத்தொட்டி

பூத்தொட்டி

ஹாலில் உள்ள டேபிளின் நடுவே ஒரு மண்ணால் செய்யப்பட்ட அகன்ற பாத்திரத்தை வைத்து, அதில் தண்ணீர் நிரப்பி, பூக்களை தூவி, அந்த பாத்திரத்தைச் சுற்றி தீபங்களை வைத்தால், அதுவும் வித்தியாசமான தோற்றத்தைத் தரும்.

தீபாவளி விளக்குகள்

தீபாவளி விளக்குகள்

தற்போது கிறிஸ்துமஸிற்கு எப்படி நட்சத்திரங்களை வீட்டின் வெளியே தொங்க விடுகிறோமோ, அதேப் போல், ஹாப்பி தீபாவளி என்று எழுதப்பட்ட பல்வேறு தொங்கும் விளக்குகள் வந்துள்ளன. ஆகவே அவற்றைக் கொண்டும் வீட்டை அலங்கரிக்கலாம்.

பூஜை தட்டு

பூஜை தட்டு

தீபாவளி அன்று மிகவும் ஸ்பெஷலாக பூஜை செய்வோம். அப்படி பூஜை செய்யும் போது, வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு பிரசாதம் வழங்கும் போது, பூஜை அறை சுத்தமாக வைத்திருப்பதோடு, பூஜை தட்டை அழகாக பூக்கள், மஞ்சள், குங்குமம் மற்றும் தெய்வ சிலைகள் போன்றவற்றால் அலங்கரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diwali Decoration Ideas In Budget

If you want to decorate your home for Diwali, then here are the budget-friendly items you would require for decor. Take a look.
Desktop Bottom Promotion