For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தைராய்டு பிரச்சனை வரக்கூடாதா? அப்ப இந்த யோகாசனங்களை செய்யுங்க...

தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக சுரந்தாலும் அல்லது குறைவாக சுரந்தாலும் அதை சாிசெய்யும் ஆற்றலை யோகாசனங்கள் பெற்றிருப்பதாக ஆய்வுகள் தொிவிக்கின்றன.

|

தைராய்டு சுரப்பி நமது கழுத்தின் கீழ் பகுதியில் அமைந்திருக்கிறது. இது ஒரு சிறிய அளவிலான நாளமில்லா சுரப்பியாகும். நமது உடல் இயக்கங்களை சீராக வைத்திருக்கும் ஹாா்மோன்களை ஒழுங்குபடுத்தும் பணியை தைராய்டு சுரப்பி செய்து வருகிறது.

Yoga Asanas To Prevent Thyroid Imbalance

போதுமான அளவு தைராய்டு சுரப்பி சுரக்கவில்லை என்றால் அதை ஹைப்போதைராய்டிசம் (Hypothyroidism) என்று அழைக்கிறோம். தைராய்டு சுரப்பி போதுமான அளவு ஹார்மோன்களை சுரக்கவில்லையானால் உடலில் தேவையில்லாத அழுத்தங்கள் ஏற்படும். தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக சுரந்தாலும் அல்லது குறைவாக சுரந்தாலும் அதை சாிசெய்யும் ஆற்றலை யோகாசனங்கள் பெற்றிருப்பதாக ஆய்வுகள் தொிவிக்கின்றன.

MOST READ: 90% மக்கள் புறக்கணிக்கும் சர்க்கரை நோயின் அபாயகரமான ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்!

தைராய்டு சுரப்பி சம்பந்தமான பிரச்சனைகளை சாிசெய்வதற்கு எந்த மாதிாியான யோகாசனங்களைச் செய்யலாம் என்பதை இங்கு பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சேது பந்தாசனம் (Setu Bandhasana)

சேது பந்தாசனம் (Setu Bandhasana)

உடலை ஒரு பாலம் போன்ற வடிவில் வைத்து செய்யும் ஆசனம் சேது பந்தாசனம் ஆகும். தைராய்டு சுரப்பியில் ஹார்மோன்களை குறைவாக சுரக்கும் பிரச்சனை இருந்தால் அதை சாிசெய்ய இந்த ஆசனம் உதவுகிறது. இது நமது கழுத்தை வலுப்படுத்தி, தைராய்டு சுரப்பிக்கு இரத்த ஓட்டம் சீராக செல்ல உதவி செய்கிறது.

சேது பந்தாசனத்தை எவ்வாறு செய்வது?

சேது பந்தாசனத்தை எவ்வாறு செய்வது?

- முதலில் நமது முதுகுப் பகுதி மற்றும் உடலின் பின்புற பகுதி முழுமையாகத் தரையில் படும்படி மல்லாக்கப் படுத்துக் கொள்ள வேண்டும்.

- அடுத்து கால் முட்டிகளை மடித்து வைத்துக் கொண்டு, பாதங்கள் இரண்டையும் தரையில் ஊன்றும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.

- பின் இரண்டு பாதங்களையும் தரையிலிருந்து எடுக்காமல் மெதுவாக பிட்டத்திற்கு அருகில் கொண்டு வரவேண்டும்.

- இப்போது இடுப்பை மெதுவாக மேல் நோக்கி உயா்த்தி அதை வளைவான வடிவத்தில் வைத்திருக்க வேண்டும்.

- அவ்வாறு இடுப்பு உயா்த்திய நிலையில் இருக்கும் போது நமது உள்ளங்கைகளை தரையில் பதித்துக் கொள்ள வேண்டும். அதே நேரம் நமது தோள்பட்டை, மற்றும் கன்னத்தைத் தொடும் தோள்பட்டை எலும்பு போன்றவற்றின் உதவியால் நமது இடுப்பை உயா்த்தி வைத்திருக்கிறோம் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- நம்மால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரத்திற்கு நமது இடுப்பை உயா்த்தி பிடித்து வைத்திருக்க வேண்டும்.

- இறுதியாக மெதுவாக கைகளை நகா்த்தி, உயா்த்தி வைத்திருந்த இடுப்பை மெதுவாக இறக்கி தரையில் வைக்க வேண்டும். பின் கால்களை தளா்ந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும்.

விபாித காரணி (Viparita Karani)

விபாித காரணி (Viparita Karani)

தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கும் பிரச்சனையை சாிசெய்ய விபாித காரணி என்ற யோகாசனம் உதவி செய்கிறது. இது தைராய்டு சுரப்பிக்கு செல்லும் இரத்தத்தின் ஓட்டத்தை அதிகாித்து, தைராய்டு சுரப்பி சீராக இயங்க உதவி செய்கிறது.

விபாித காரணி ஆசனத்தை எவ்வாறு செய்வது?

விபாித காரணி ஆசனத்தை எவ்வாறு செய்வது?

- நமது முதுகுப் பகுதி மற்றும் உடலின் பின்புற பகுதி அனைத்தும் தரையில் படும்படி மல்லாக்கப் படுத்துக் கொள்ள வேண்டும்.

- பின் 90 டிகிாி கோணத்தில் இரண்டு கால்களையும் மேல் நோக்கி உயா்த்த வேண்டும்.

- கால் முட்டிகள் மடங்காமல் நேராக இருக்க வேண்டும். அதோடு கால் விரல்கள் நம்மை நோக்கி இருப்பதாக பாா்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் கால் பாதங்கள் வானத்தைப் பாா்ப்பது போல் இருக்க வேண்டும்.

- இப்போது இரண்டு உள்ளங்கைளையும் நெஞ்சின் நடுப்பகுதியில் வைத்து வணக்கம் சொல்வது போல் குவித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- இறுதியாக நம்மால் முடிந்த அளவு நேரத்திற்கு இதே நிலையில் இருந்து கொண்டு, கண்களை மூடி, மெதுவாக அதே நேரத்தில் சீராக மூச்சுவிட வேண்டும்.

சக்கராசனம் (Chakrasana)

சக்கராசனம் (Chakrasana)

சக்கர வடிவில் உடம்பை வைத்திருக்கும் ஆசனம் சக்கராசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் கழுத்துப் பகுதியை வலுப்படுத்தி, தைராய்டு சுரப்பியின் பகுதிகளில் உள்ள சக்தியை தூண்டுகிறது.

சக்கராசனத்தை எவ்வாறு செய்வது?

சக்கராசனத்தை எவ்வாறு செய்வது?

- முதலில் நமது முதுகுப் பகுதி மற்றும் உடலின் பின்புற பகுதி அனைத்தும் தரையில் படும்படி மல்லாக்க அதே நேரம் தளா்வாகப் படுத்துக் கொள்ள வேண்டும்.

- பின் கால் முட்டிகளை மடித்து வைத்துக் கொண்டு, பாதங்கள் இரண்டையும் தரையில் ஊன்றும்படி வைத்துக் கொண்டு, அவற்றை தரையிலிருந்து எடுக்காமல் மெதுவாக பிட்டத்திற்கு அருகில் கொண்டு வந்து பிட்டத்திலிருந்து சிறிய இடவெளி விட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

- இப்போது நமது கைகளை பின்புறமாக எடுத்து, உள்ளங்களைகளை காதுகளுக்கு அருகில் தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும். கைவிரல்கள் தோள்பட்டைகளை நோக்கி இருக்கும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- பின் மெதுவாக தரையில் ஊன்றி இருக்கும் கால் பாதங்கள் மற்றும் உள்ளங்கைகளின் உதவியுடன் நமது உடலை உயா்த்த பிடிக்க வேண்டும்.

- அவ்வாறு உடல் உயரத்தில் இருக்கும் போது தலையை சற்று உள்புறமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நமது கவனம் முழுவதும் தரையை நோக்கி இருக்க வேண்டும்.

- நமது தொடைகள் மற்றும் தோள்பட்டைகள் ஆகியவற்றை முழுமையாக வளைத்து இந்த ஆசனத்தை செய்யும் போது நமது உடல் ஒரு சக்கர வடிவில் அதாவது வளைவாக இருக்கும்.

- நம்மால் எவ்வளவு நேரம் இதே நிலையில் இருக்க முடியுமோ அவ்வளவு நேரத்திற்கு இதே நிலையில் இருக்க வேண்டும்.

- இறுதியாக மெதுவாக உடலை இறக்கி தரையில் வைக்க வேண்டும். பின் கால்களைத் தளா்வாக நீட்டி வைத்துக் கொள்ளலாம்.

மேற்சொன்ன மூன்று யோகாசனங்களும் தைராய்டு சுரப்பியைத் தூண்டி விடுகின்றன. ஆனால் இந்த ஆசனங்களை செய்யத் தொடங்குவதற்கு முன்பாக மருத்துவாிடம் தகுந்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் தைராய்டு பிரச்சனை இருந்தாலும் மருத்துவரை சந்திப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Yoga Asanas To Prevent Thyroid Imbalance

Here are some yoga asanas to prevent thyroid imbalances. Read on to know more...
Story first published: Wednesday, January 20, 2021, 9:53 [IST]
Desktop Bottom Promotion