Latest Updates
-
ஹோட்டல் ஸ்டைல் வெண் பொங்கலும், டிபன் சாம்பார், சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
10 நிமிசத்துல பருப்பே இல்லாம் இட்லி, தோசைக்கு ஈஸியான சாம்பாரை செய்யணுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க -
பாபா வங்காவின் ஆபத்தான கணிப்பு மீண்டும் பலித்துள்ளது? இன்னும் என்னென்ன கணிப்புகள் உள்ளது தெரியுமா? -
1 கப் புதினா இருந்தா இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க
அமெரிக்காவில் 1,00,000 பேருக்கு இருக்கும் டூரெட்ஸ் சிண்ட்ரோம் - அதன் அறிகுறிகள் என்ன?
டூரெட்ஸ் சிண்ட்ரோம் அல்லது டூரெட்ஸ் நோய்க்குறி என்பது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு பிரச்சனையாகும். இந்த பிரச்சனையானது கட்டுப்படுத்த முடியாத திடீர் இயக்கங்கள் அல்லது ஒலிகளை எழுப்பத் தூண்டும்.
டூரெட்ஸ் சிண்ட்ரோம் அல்லது டூரெட்ஸ் நோய்க்குறி என்பது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு பிரச்சனையாகும். இந்த பிரச்சனையானது கட்டுப்படுத்த முடியாத திடீர் இயக்கங்கள் அல்லது ஒலிகளை எழுப்பத் தூண்டும். இவற்றை டிக்ஸ் என்று அழைப்பார்கள் உதாரணமாக, இந்த டூரெட்ஸ் சிண்ட்ரோம் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் திடீரென்று கண்களை சிமிட்டலாம் அல்லது தொண்டையை செருமிக் கொண்டே இருக்கலாம். இன்னும் சிலர் தாங்கள் சொல்ல விரும்பாத வார்த்தைகளை சொல்லி கத்தலாம். இந்த டிக்ஸை சிகிச்சைகளின் மூலம் கட்டுப்படுத்தலாம்.

அமெரிக்காவில் சுமார் 1,00,000 பேருக்கு இந்த டூரெட்ஸ் சிண்ட்ரோம் உள்ளது. ஆனால் பலரிடமும் இதன் லேசான அறிகுறிகளே தெரிகின்றன. பெரும்பாலும் இது குழந்தை பருவத்தில் தோன்றும். இப்பிரச்சனை சிறுமிகளை விட சிறுவர்களையே அதிகம் பாதிக்கின்றன. மேலும் குழந்தைகள் வளரும் போது அதன் அறிகுறிகள் மேம்படும். ஆனால் சிலருக்கு இவை முற்றிலும் மறைந்துவிடும். 2022 டிசம்பர் 03 ஆம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினம் என்பதால், டூரெட்ஸ் சிண்ட்ரோம்மின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சைகள் குறித்து கீழே விரிவாக காண்போம்.

காரணங்கள்
டூரெட்ஸ் சிண்ட்ரோம் வருவதற்கான உண்மையாக காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால் இந்த டூரெட்ஸ் ஒருவருக்கு வருவதற்கு மரபணுக்கள் ஒரு முக்கிய காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் டூரெட்ஸ் நோயைக் கொண்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. ஆனால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு அறிகுறிகளை கொண்டிருக்கலாம்.

வகைகள் மற்றும் அறிகுறிகள்
டூரெட்ஸ் சிண்ட்ரோமின் முக்கிய அறிகுறி டிக்ஸ். அவற்றில் சில லேசானவை மற்றும் சரியாக கவனிக்கப்படுவதில்லை. மற்ற அறிகுறிகள் அடிக்கடி நிகழும் மற்றும் நன்கு வித்தியாசமாக தெரியும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மன அழுத்தம், உற்சாகம் அல்லது நோய்வாய்ப்படும் போது அல்லது சோர்வாக இருக்கும் போது, அவர்கள் மோசமாக நடந்து கொள்வார்கள். மிகவும் கடுமையான அறிகுறிகள் அவர்கள் வாழ்க்கையையே பாதிக்கலாம்.
இவற்றில் இரண்டு வகைகள் உள்ளன. அவை மோட்டார் டிக்ஸ் மற்றும் வோகல் டிக்ஸ்.
மோட்டார் டிக்ஸ் என்பது விருப்பமில்லாத இயக்கங்களைக் குறிக்கிறது. அவை பின்வருமாறு:
* கை அல்லது தலையை அசைப்பது
* கண்களை சிமிட்டுவது
* முகத்தை சுளிப்பது
* வாயை ஒருபக்கமாக இழுப்பது
* தோள்பட்டையை அடிக்கடி உயர்த்துவது
வோகல் டிக்ஸ் என்பது ஒருவரால் செய்யப்படும் விருப்பமில்லாத ஒலிகளைக் குறிக்கிறது. அவை பின்வருமாறு:
* மூக்கு உறிஞ்சுவது
* கத்துவது
* உறுமுவது
* அடிக்கடி தொண்டையை செருமுவது
* பிறர் சொல்வதை தொடர்ச்சியாக சொல்வது
டூரெட்ஸ் சிண்ட்ரோம்மால் பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேரிடம் ADHD அறிகுறிகளும் உள்ளன. ஆனால் அது ஏன் என்று மருத்துவர்களுக்கும் தெரியவில்லை. மேலும் இவர்களுக்கு கவனம் செலுத்துவது, அசையாமல் உட்காருவது மற்றும் பணிகளை முடிப்பதில் சிரமங்களை சந்திக்கலாம். டூரெட்ஸ் சிண்ட்ரோம் பின்வரும் சிக்கல்களுடனும் வரலாம் என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அவை:
* பதட்டம்
* மனச்சோர்வு
* அப்செஸிவ்-கம்பல்சிவ் டிஸார்டர் (OCD)

எப்படி உறுதிபடுத்துவது?
டூரெட்ஸ் சிண்ட்ரோம் ஒருவருக்கு இருந்தால், பின்வரும் அறிகுறிகளை கவனித்து இந்நோய் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
* குறைந்தது இரண்டு மோட்டார் டிக்ஸ் மற்றும் ஒரு வோகல் டிக்ஸ் இருக்க வேண்டும்.
* ஒரு வருடம் இந்த டிக்ஸ் தொடர்ந்திருக்க வண்டும்.
* 18 வயதிற்கு முன்பே டிக்ஸ் வந்திருக்க வேண்டும்.
* மருந்துகளால் அறிகுறிகள் ஏற்பட்டிருக்கக்கூடாது.

சிகிச்சைகள்
பல நேரங்களில் டிக்ஸ் லேசானவையாக இருக்கும் மற்றும் அதற்கு சிகிச்சை எதுவும் தேவையில்லை. அதுவே அவர்கள் அதிக பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் நடத்தையைக் கொண்டிருந்தால், மருத்துவர் அவர்களுக்கு மருந்துகளை பரிந்துரைப்பார் மற்றும் நடத்தை சிகிச்சைகளையும் பரிந்துரைப்பார்.



Click it and Unblock the Notifications