Just In
- 2 hrs ago
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- 4 hrs ago
ஈரோடு சிக்கன் சிந்தாமணி
- 9 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 10 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
Don't Miss
- News
பிரபல பெண்ணின் "லிவிங் டூ கெதர்".. கை கால்களை கட்டி.. பால்கனியில் வைத்து.. அதிர்ந்த ஆக்ரா
- Movies
பிரபல பாலிவுட் நாயகியுடன் இணையும் ஜிவி பிரகாஷ்.. நடிப்பா -இசையா.. சொல்லலியே பாஸ்!
- Finance
இன்போசிஸ் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இந்த வருடம் அப்ரைசல் வேற லெவல்..!
- Technology
ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு.. இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன்.. பிசிசிஐ பரிசீலினை
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இரவு உணவை எத்தனை மணிக்குள் சாப்பிட வேண்டும்? விரைவாக சாப்பிடுவது உண்மையில் நல்லதா?
இரவு உணவு என்பது அன்றைய மிக அவசியமான உணவுகளில் ஒன்றாகும். பெரும்பாலான மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் எடையை சீராக பராமரிக்கவும், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் இரவு உணவை சீக்கிரமாக உண்ண வேண்டுமென்று அறிவுறுத்துகிறார்கள். ஆனால் இது எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும்.
கச்சிதமான உடல் எடையில் இருக்க அல்லது ஆரோக்கியமான வாழ்விற்கு இரவு சீக்கிரம் சாப்பிடுகிறவரா நீங்கள்? உண்மையில் இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவது அவசியமா அல்லது தவறான எண்ணமா? அதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

சீக்கிரமாக இரவு உணவு சாப்பிடுவது ஆரோக்கியமான பழக்கமா?
ராஜாவைப் போல காலை உணவும், பாமரனைப் போல இரவு உணவும் என்பது பழமையான பழமொழி, ஆனால் பெரும்பாலானோர் ஆரோக்கியமாக இருக்க இந்த உணவு முறையை கடைபிடிக்கின்றனர். சுவாரஸ்யமாக, இரவு உணவின் கருத்து 1200 களின் பிற்பகுதியில் இருந்து வருகிறது. அன்று அதுவே முக்கிய உணவாகக் கருதப்பட்டது. ஆனால் காலப்போக்கில் விஷயங்கள் மாறி, ஆரோக்கியமாக இருப்பதன் முக்கியத்துவம் உணரப்பட்டதால், அந்த கட்டுக்கதை உடைந்தது. சொல்லப் போனால், காலை உணவுதான் அந்தத் தலைப்பை ஏற்றுக்கொண்டது.

நிபுணர்கள் சொல்வது என்ன?
நிபுணர்களின் கருத்துப்படி, "உடல் ஓய்வெடுக்கும் நேரமான இரவு தூக்கத்தைத் தொடர்ந்து காலை உணவைத் தொடர்ந்து அதுவே அன்றைய முதல் உணவு மற்றும் மிக முக்கியமானது. ஒரு இரவு ஓய்வுக்குப் பிறகு, ஆரோக்கியமான காலை உணவின் மூலம் உண்ணாவிரதத்தை முறித்துக் கொள்ள உடல் தயாராகிறது. இது குளுக்கோஸை நமது ஆற்றல் அளவையும், விழிப்புணர்வையும் நிரப்பும் உணவாகும். காலை உணவு உடலுக்குத் தேவையான பிற ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. பின் வரும் மதிய உணவு அனைவருக்கும் ஒரு முக்கியமான உணவாகும், ஏனெனில் இது இரவு உணவிற்கு முன் மதியம் வரை உடலும் மூளையும் திறமையாக செயல்படுவதை உறுதி செய்வதற்கான ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துக்கான ஆதாரமாக உள்ளது.

இரவு உணவை தவிர்ப்பது நல்லதா?
நாம் இரவு உணவிற்கு வருவதற்கு முன், லேசான உணவை உண்பதைப் பற்றி சிந்திக்கும்போது, நமது உணவு இடைவெளியைப் பற்றி சிந்திப்போம். பகலில் செயல்பாடு அதிகரிக்கும் என்பதால், ஒருவர் உணவைத் தவிர்க்க வேண்டும் என்று அர்த்தமல்ல. சிறியதாக இருந்தாலும் அல்லது லேசானதாக இருந்தாலும், உணவு இடையிடையே இடைவெளிவிட்டு, தவறாமல் உட்கொள்ள வேண்டும். பெரும்பாலானோர் தங்கள் உணவுக்கு இடையே மூன்று முதல் ஐந்து மணி நேர இடைவெளியைப் பின்பற்றுகிறார்கள், இது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நல்லது. பெரும்பாலான வல்லுநர்கள் காலை உணவை கனமானதாகவும் விரிவானதாகவும் பரிந்துரைப்பார்கள், இதனால் நம் நாளை நாம் சிறப்பாக தொடங்க முடியும். ஆனால் நமது பேட்டரிகளை சார்ஜ் செய்ய, மதிய உணவு பரிந்துரைக்கப்படுகிறது. மதிய உணவு பகலில் இரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது, இரவு உணவு வரை உடலுக்குத் தேவையான அனைத்து ஆற்றலையும் உறுதி செய்கிறது. மேலும் பகலில் செய்ய வேண்டிய பல்வேறு வேலைகளில் கவனம் செலுத்த உதவுகிறது. ஆனால் இரவு உணவைத் தவிர்ப்பது இரண்டு உணவுகளுக்கு இடையில் அதிக இடைவெளியை அதிகரிக்கிறது. இரவு உணவைத் தவிர்ப்பதன் விளைவாக அன்றைய முதல் மற்றும் கடைசி உணவுக்கு இடையே வழக்கமான இடைவெளி ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கான அழைப்பாகும்.

இரவு உணவை விரைவாக சாப்பிடுவது நல்லதா?
இரவு உணவை இரவு 7 முதல் 8 மணிக்குள் அல்லது சற்று முன்னதாக உட்கொள்வதை உறுதிசெய்தால், ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலை வெகுவாகக் குறைக்கலாம். பகலில் நாம் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால், மாலைக்குள் நாம் உட்கொள்ளும் அனைத்து கலோரிகளையும் எரித்துவிடுவோம். செரிமானம் குறைகிறது, இலகுவான உணவுகளை பதப்படுத்துவது உடலுக்கு எளிதாகிறது, சாப்பிட்ட 2-3 மணி நேரத்திற்குள் உடல் எரிக்காத உணவுகள் கொழுப்பாக சேமிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பின்னர் லேசான இரவு உணவும் குடல்களை சுத்தப்படுத்த உதவுகிறது.

இரவு உணவை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்?
இரவு உணவை வயிறை நிரப்ப மட்டும் சாப்பிடக்கூடாது, ஆனால் ஒரு நாள் முழுக்க சுறுசுறுப்பு மற்றும் உழைப்புக்குப் பிறகு உடல் எரியூட்ட வேண்டும். இரவு உணவை முழுவதுமாகத் தவிர்ப்பது அல்லது இரவு உணவிற்கு அதிகமாக சாப்பிடுவது இரண்டும் பயனளிக்காது. இரவு உணவைத் தவிர்ப்பது நல்லது என்பது கட்டுக்கதை, ஏனெனில் அது உண்மையில் பகலில் அதிகமாகச் சாப்பிடும் அபாயத்தை அதிகரிக்கும். நீங்கள் பசியுடன் எழுந்திருக்க மாட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள பல வழிகள் உள்ளது. தானியங்களைத் தவிர்த்து, புரதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டுமே சாப்பிடுவது மேலும், அளவோடு சாப்பிடுவதும், மெதுவாக உணவை உட்கொள்வதும், உறங்குவதற்கு முன் கொஞ்சம் தேநீர் பருகுவதும் நன்மை பயக்கும்."